தட்டானுக்கு சட்டை போட்டால்

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் - விளக்கம் 

"தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்" என்ற நடிகர் வடிவேலு விடுகதைக்கு  விளக்கம் / விடை 

தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்வடிவேலு விடுகதை


தட்டர் என்றால் (உலோக வேலை செய்பவர்) கொல்லரைக் குறிக்கும் இவரை தட்டான் என்று ஏகவசனத்தில் அழைப்பது கிராமத்து வழக்கு.

thattaan, thattar, kollar தட்டானுக்கு சட்டை போட்டால்

பொதுவாக இரும்புப் பட்டறையில் வேலை செய்யும்போது தீயின் அனல் அதிகமாக இருக்கும் ஆதாளால் வியர்த்துக் கொட்டும். எனவே தட்டர் சட்டை அணிவதில்லை. (தற்காலத்தில் பனியன் அணிகிறார்கள்). 

இரும்பைக் காய்ச்சி நெருப்பாக இருக்கும் சமயத்தில் உடனடியாக அடித்து தேவையான உருவத்தை செய்துவிடவேண்டும்.

 இல்லையேல் ஆறிவிடும் மீண்டும் நெருப்பில் வைக்க வேண்டிவரும். 

இந்த நேரத்தில் இரும்பை அடிக்க தட்டர் வைத்திருக்கும் உதவியாளர்(குட்டை பையன்) தீயாக செயல்படுவார். 

வேகமாக ஓங்கி அடிப்பார். இந்த தட்டர் சட்டை போட்டுவிட்டார் என்றால் வீட்டிற்கு அல்லது வெளியில் கிளம்பிவிட்டார் என்று பொருள். அப்படி கிளம்பிவிட்டால் சம்பட்டியை தூக்கி அடித்து களைத்திருக்கும் அந்த உதவியாளர், இந்த குட்டைப் பையன்(பொடிப்பயல், பொடியன் என்றும் கூறுவர்) அடிக்கும் அடிகளெல்லாம் இரும்பை அடிப்பதுபோல் இருக்காது.  மாறாக என்று ஏனோ தானோ என்று கட்டையால் அடிப்பது போன்று சொத் சொத் என்று விழும். காரணம் அயர்வு. 

ஆக தட்டர் கிளம்பிவிட்டால் உதவியாளர் சம்மட்டியால் அடிப்பது போல் இல்லாமல் கட்டையால் அடிப்பதுபோன்று அடி வலுவின்றி இருக்கும். இதைத்தான், "தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்" என்று ஒரு திரைப்படத்தில் வடிவேலு தனது அரண்மை ஊழியர்களிடம் கேட்பதாக காட்டியிருப்பார்கள் 

இப்படியும் இருக்கலாம்.

அதோடு அரிவாள், கோடாலி, மண்வெட்டி போன்றவற்றை தயார் செய்தபின் அதை மரக் கைப்பிடியில் இணைப்பது கொல்லரிடம் வேலை செய்யும் உதவியாளர் செய்வார்.

ஆக, தட்டான் சட்டை போட்டபின் (கிளம்பியபின் ) அவரிடம் வேலைசெய்யும் குட்டைபையன் (உதவியாளர்கட்டையால் அடிப்பான். (கட்டையால் ஆன கைப்பிடியை அரிவாள் கோடாலி,மண்வெட்டி போன்றவற்றிற்கு கோர்ப்பான்)

வேறு ஒரு விளக்கமும் கூறலாம் அதாவது முரசு. 

முரசு அரைக்கோள வடிவமுடைய கெட்டியான ஒரு பொருள் (நான் பார்த்தது உலோகத்தால் செய்யப்பட்டிருந்தது ) 

அதன் அரைக்கோள வடிவம் தோலால் மூடிக் கட்டப்பட்டிருக்கும் 

இதை முக்கியமான தகவல்களை கூற நினைக்கும் வேளையில் அடிப்பதுண்டு 

ஆக இந்த முரசுக்கு மேலே தோல் போர்த்தப்பட்டால் (கட்டப்பட்டால் ) பறை அறிவிப்பவன் கட்டையால் அடித்து அரசின் அறிவிப்பை வெளியிடுவான் என்றும் பொருள் கொள்ளலாம். 

இந்த இரண்டு விளக்கத்தில் எது மிகவும் பொருத்தம் என்பதை கீழே கருத்துப் பெட்டியில் குறுப்பிட வேண்டுகிறேன் 


கட்டுரைகளை தெரிவு செய்யவும் 

கருத்துகள் இல்லை: