Articles on Interesting things in science, science Conflicts, Defects and mistakes in famous science theories, Unknown science facts, Hoax in science, scientific explanations and Discussion on Famous science principles and theories, interesting things in ancient Tamil literature, e-content (e-learning content) guidelines, Health tips in Tamil
சூடான-சுவையான அறிவியல் விவாத ஆய்வுக்கட்டுரைகள் தமிழில்
கொரோனா-பாதுகாப்புமுறைகள்,மருந்துகள்
How to control virus diseases medicine (including COVID-19)? மனித உடலில் நுண்ணுயிர்கள்
உலகில்வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும்
வெவேறான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், மற்றும் பலநுண்ணயிர்கள்
வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில்பெரும்பாலும் நன்மைசெய்யும் நுண்ணயிர்களே. மனித உடலிலும்சற்றேறக்குறைய 40% ற்கு மேல் வேற்று உயிர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கொரோனாவைக்கண்டு உலகம் பயந்த சூழலிலும், இதை கண்டுகொள்ளாது இயல்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன பல கிராமங்கள். இயற்கையான வாழ்ககை முறைகளிலிருந்து அதிகம் விலகாத, நவீன உலகின் பலநாடுகளும் குறிப்பாக தென் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகள் பலவும் இதை கண்டுகொண்டதாகத்தெரியவில்லை. மேலும் வாசிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததேன்?
புதிய தீநுண் உயிரி பரவாமல் தடுப்பதெப்படி?
உலகில் வாழும் விலங்குகள்,பறவையினங்கள் பொதுவாக தனித்தனியாக வாழ்வதைபார்க்கமுடிகிறது எனினும் சில இதற்கு விதிவிலக்கு.சில சூழலில் பல இனஉயிர்கள் ஒரே இடத்தில் வாசிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது ஒருஉயிரினத்தில் இருக்கும் நுண்ணுயிர்
மற்ற விலங்கினுள்/பறவையினுள்சென்றுஅங்கு ஏற்கனவே வசிக்கும்நுண்ணயிருடன் இணைந்து புதுவிதமான நுண்ணுயிர்தோன்றும் வாய்ப்புண்டு. இவை தீமை செய்யும் பன்பைக்கொண்டிருக்கும்போது
அதுஅந்த உயிரை மட்டுமின்றிமற்ற உயிரினங்களையும் தாக்கும் அபாயம் உள்ளது.
எனவே வேறுபட்டபறவையினங்கள், விலங்கினங்களை
ஒரே இடத்தில் அடைத்து வைக்கும் சூழ்நிலைகளை தவிர்ப்பது நல்லது.
கொரோனா-பாதுகாப்புமுறைகள்
இயற்கையை விட்டு
செயற்கையான பாதுகாப்பு முறைகளால் தன்னை பாதுகாத்துவரும் மனிதர்களை இவ்வகையான (உதாரணத்திற்கு COVID-19 கொரொனா வைரஸ் ) நுண்ணுயிர்கள் எளிதில் தாக்கும். இதுபோன்றசூழலில் மனித இனம் அதிகமாக
பாதிக்கப்படுகிறது.
நுண்ணயிர்களில் வைரஸ், பாக்டீரியாவை விட
மிகவும் சிறியது.வைரஸ் குறித்த விவரங்கள் தமிழில்இதைக்காண சிறப்பு நுண்ணோக்கி தேவை. சிலர்
தங்களை கொரொனா உள்ளிட்ட வைரஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முகமூடி அணிவதை பார்க்கிறோம்.
வைரஸ் நுழைய முடியாத அளவிற்கு நுண்ணிய
துளை கொண்ட வடிகட்டியைக்கொண்டு முகமூடி தயாரித்தால் அதன்வழியே சுவாசிக்க போதுமான அளவு காற்று செல்ல முடியுமா என்பதும்கேள்விக்குறியே. கைகளை சோப்பு கொண்டு
கழுவுவதால் மட்டுமே கொரொனா (covid19 ) போன்ற வைரஸிடமிருந்துதப்பிக்க இயலாது.கைகளை சோப்பு
கொண்டு கழுவுவதால் சாப்பிடும்போதுகையிலிருக்கும் கிருமிகள் உள்ளே செல்லாமல் இருக்கும்.ஆனால் வாய்வழியாகவும் சுவாசத்தின் வழியாகவும்
மட்டும் கிருமிகள் உடலினுள்செல்வதில்லை. மாறாககண் மூலமும்
வியர்வை சுரப்பிகள் மூலமாகவும் கூடஉள்ளேசெல்ல முடியும்.நாம் உண்ணும் உணவில், நீரில் அதிக அளவில் நுண்ணயிர்கள்கலந்து உடலில் செல்கின்றன என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று இருப்பின் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது அதோடு சளிக்கு ஏதுவான உணவுகளை தவிர்த்தல், ஓரளவிற்கு வெயில் படும் இடங்களில் பணிகளை செய்தல் (வைட்டமின் டி சத்துக்காக ) மல்டி வைட்டமின் மாத்திரைகளை அளவுடன் எடுத்துக்கொள்ளல் இவற்றை செய்யலாம் இந்த மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுதல் நலம்.
வள்ளலாரின் காயகல்ப மருந்தை வீட்டிலேயே தயார்செய்து பயன் படுத்துவதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெறமுடியும்
வைரஸ் நோய்களுக்கான தீர்வு
உலகில்பரவலாக உள்ள நோய் சளி. வயது முதிர்ந்தவர்களுக்கு சிறியவர்களுக்கும்
பல நேரங்களில்மரணத்தை
கொடுப்பதுண்டு. சளி வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய். இதற்கெனதனிமருந்துகள் அலோபதியில்இல்லாதசூழலில்ஆன்டிபாக்டீரியாமருந்துகளேபொதுவாகக்கொடுக்கப்படுகின்றன.ஆன்டிவைரஸ்மருந்துகள்கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும்இன்னும்புழக்கத்திற்குவரவில்லை. அப்படியெனில்வைரஸ் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?
.
நில வேம்பு
வைரஸ்சம்பந்தப்பட்டஎந்தவியாதிக்கும்சிறந்தமருந்துபப்பாளிஇலைக்கசாயம்மற்றும்சிறியாநங்கைஎன்றுபரவலாகஅழைக்கப்படும்நிலவேம்புச்செடியின்இலைக்கசாயம். இதுசளிகாய்ச்சல்மட்டுமின்றிவைரஸ் (கொரொனா உள்ளிட்ட )சம்பந்தப்பட்டஅனைத்துநோய்களுக்கும்சிறந்தநிவாரணம்தரவாய்ப்புள்ளது.அளவோடுஉபயோகிக்கவும். இல்லையேல் வயிற்று வலி ஏற்படலாம்.
பப்பாளி
Papaya leaves
பப்பாளி கசாயம் வெள்ளை அணுக்களை
அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை (immunity) கொடுக்கும்.பப்பளிச்சாறுபப்பாளி பால் பருகுதல் கூடாது. பொதுவாக கசப்புச் சுவை உடலுக்குவெப்பத்தைக்கொடுக்கும்சூட்டின் காரணமாக வயிற்றுவலிமற்றும்வயிற்றுப்புண் விந்து பிரச்சினைகள்ஏற்படலாம்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்கன்குனியா, போன்ற பல நேரங்களில் பப்பாளி கசாயமும், நிலவேம்புச்செடியின்இலைக்கசாயமும் நல்ல பலன் தந்திருக்கிறது. இவை கொரோனோவிற்கும் நல்ல தீர்வாக அமைய அதிக வாய்ப்புண்டு.
கொரோனா மருந்துகள்
ஆயுஷ் மருத்துவர்களுடன் பிரதமமந்திரியின் காணொளிஉரையாடலுக்குப் பின்கப சுர குடிநீர் பருக இந்திய அரசு பரிந்துரைசெய்துள்ளது.
கொரோனாவிற்கென தனிப்பட்ட மருந்துகள் இல்லையெனினும், ஹோமியோ மருத்துவம் குறிகுணங்களுக்கு மருந்துதரும் முறையை அடிப்படையாகக் கொண்டது.
அதாவது அலோபதியில் நோய்க்கு மருந்து தரப்படும். ஆனால் ஹோமியோவில் நோய் அல்ல மாறாக நோய் வந்திருக்கும் நேரத்தில் உடலில் காணப்படும் குறிகளை அடிப்படையாகக்கொண்டு மருந்து கொடுக்கப்படுகிறது. எனவே ஒவ்வொருவருக்கும் மருந்துகள் வேறுபடும். கொரோனாவிற்கென ஆயுஷ் பரிந்துரைக்கும் மருந்து ஆர்சனிக் ஆல்பம்
எனினும் Aconite 200 + Ars Alb 200 + Belladona 200 +Bryonia 200 இந்த நான்கு மருந்துகளையும் ஒன்றாகக் கலந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம். மேலும் அறிந்துகொள்ள materiamedica என்னும் ஹோமியோ மருத்துவ நூலைப் படித்து அறிந்துகொள்ளவும்.
சித்த மருத்துவத்தில் கொரோனாவிற்கென தனிப்பட்ட மருந்துகள் இல்லையெனினும், தாளிசாதி சூரணம் / தாளிசபத்திரி லேகியம் நல்ல பலன்தரும் என்று சித்த மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்படுகிறது. தாளிசபத்திரி நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் நன்கு செயலாற்றும். இதுவல்லாமல் கபசுரக்குடிநீர்,வாதசுரக்குடிநீர் இவைகளும் நல்ல பலன்தரும் என்று நம்பப்படுகிறது.
இதுதவிர வான்குமரி லேகியம், குமார சூரணம், சிறுங்கி பஸ்பம் போன்ற மருந்துகள் சித்த மருத்துவர்களால் தரப்படுகிறது. இவை முறைப்படி ஆய்வு செய்து தரவுகள் சேமிக்கப்படவில்லை என்றபோதும், மிக அதிக உயிர்களை காப்பாற்றி உள்ளது.
சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்து, முறைப்படி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக இடித்து, நன்கு கலந்து வைக்கவேண்டும்.
35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி, பன்னிரண்டில் ஒன்றாய் குறுக்கி வடிகட்டி, குடிநீர் (250 மி.லி. அளவுக்கு) எடுக்கவேண்டும். 30 முதல் 60 மி.லி. வீதம், தினமும் 2 அல்லது 3 வேளைகள் கொடுக்கலாம். துணை மருந்தாக சாந்த சந்திரோதய மாத்திரை, கோரோசனை மாத்திரையும் கொடுக்கலாம். இதன் மூலம் கபசுரம் தீரும்.
வாத சுரக்குடிநீர்
கொரோனா பாதிப்பின்போது வாய்வுத் தொந்திரவு அதிகமாகி அதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதாகவும். இதனால் கபாசுர குடிநீரைவிட வாத சுரக்குடிநீர் அதிக பயன் கொடுக்கும் என்று சில சித்த மருத்துவர்கள் கூறிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்ததை அனைவரும் படித்திருப்போம். வாதசுரக் குடிநீர் தயாரிப்பது எப்படி ? வீரசேகரம் என்னும் இலங்கை மருத்துவ நூலிலிருந்து
நிலவேம்பு கசாயம்:
நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.
கொரோனா வேடிக்கைகள்
இந்தியாவில்கை தட்டியும் வெடிவெடித்தும், விளக்குகளை ஒளிரச்செய்தும் "கோ கொரோனா" என்று கத்தியும்பலர்கொரோனோவை விரட்டும் நோக்கில் செயல்பட்ட
காணொளிகள் பரவலாக இணையதளங்களில் உலா வருகின்றன.கொரோனாரோட்டில்
அலையும் வைரஸ் அல்ல அது கைதட்டினாலோ.. விளக்கு வைத்தாலோ மிரண்டுஓடுவதற்கு.. இதெல்லாம் தவறான நம்பிக்கை
என்கிறார்இந்தியஅரசின் ''விஞ்ஞான்பிரச்சார்'' முதுநிலை விஞ்ஞானித.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள்
தற்போதைய கொரோனா வைரசுக்குகனடாவில் மலேரியாவிற்கான மருந்துகொடுத்து குணம் காணப்பட்டிருக்கிறது.ஆயுர்வேதத்திலும் மலேரியாவிற்கு வழங்கப்படும்AYUSH
64என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களைத்தான் கொரொனா பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கொரோனா வைரசுக்கு தமிழக அரசின் மூலிகைமருத்துவ மற்றும் உணவு பரிந்துரை அறிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்
கொரோனா தடுப்பு மருந்துகள்
இலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின்
ஆராய்ச்சியாளர்கள் IMP-1088 என்ற ஒரு புதிய
மூலக்கூறு ஒன்றை அடையாளம் கண்டுள்ளனர்.
ஓர் உடலில் நுழையும் வைரஸ், தான்
தாக்கும் உடலில் உள்ள செல்லில் இருக்கும்,
என்-மைரிஸ்டோயல் ட்ரான்ஸ்ஃபெரேஸ்
(NMT) என்ற நொதியை தன் பெருக்கத்திற்குப்
பயன்படுத்திக் கொள்கிறது. அவ்வாறு உள்ளே
நுழையும் வைரஸ் அந்த NMT நொதியை
பயன்படுத்தாதவாறு இந்த மூலக்கூறானது
தடுக்கிறது. இதனால் வைரஸ்கள் தான் தாக்கும்
செல்லை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும்
புதிய வைரஸ் செல்களைப் பிரதி எடுப்பதும்
பாதிப்பதும் முடியாது.
இந்த NMT தடுப்பின் விளைவாக, குறைந்த
நச்சுதன்மை கொண்ட நோய் தொற்றே செல்
ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த
முறையில் வைரஸ்களின் பல்வேறு திடீர் மரபணு
மாற்றம் பற்றிய எந்த வித அச்சமுமின்றி நோய்த்
தொற்றை நீக்கமுடியும் என்று நம்பப்படுகிறது ஆதாரம்
கொரோனா வைரஸ் தடுப்பூசி
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ்
தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பிரிட்டனில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை
சுமார் 6 லட்சம் பேருக்கு அந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து கரோனா
மலிவான தடுப்பூசியை தயாரித்துள்ளனர் ஃபைசர் தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிதீவிர உறை
நிலையில் இருப்பு வைக்கவேண்டும். ஆனால் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியை வழக்கமான
குளிர்சாதனப் பெட்டியிலேயே இருப்பு வைக்க முடியும்.
இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி, வைரஸ்
தொற்றும் வாய்ப்பை 70 சதவீதம் கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக்
கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கின்றன இந்த
மருந்தை வைத்து செய்யப்பட்ட சோதனைகளின் தரவுகள்.
சிம்பன்சி வகை மனிதக் குரங்குகளுக்கு சளி பிடிக்கக் காரணமான வைரஸ் (common
cold virus) நுண்மியை செயலிழக்கச் செய்து அதில் இருந்து இந்த தடுப்பூசி
தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்மி மனித உடலில் நுழைந்ததும் தொற்றாக மாறி பல்கிப்
பெருகாத வகையில் அதன் தன்மை மாற்றப்பட்டு தடுப்பூசி தயாரிக்கப்
பயன்படுத்தப்பட்டுள்ளது
1 கருத்து:
useful information
கருத்துரையிடுக