மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?

How to fix constipation? 
மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?

இன்று பலரையும் திணற வைத்துக்கொண்டிருப்பது மலச்சிக்கல் (constipation)/ மலக்கட்டு. மலக்கட்டு நோய்களை தீவிரமடையச்செய்யும்.  சர்க்கரை (நீரிழிவு) நோய்க்கும் மலச்சிக்கல் காரணமாக அமையும். மலச்சிக்கல் சளி மற்றும் காய்ச்சலை அதிகப்படுத்தும். தலையின் பின்புறம் வலியை ஏற்படுத்தலாம். வாந்தி உணர்வை ஏற்படுத்தும். வாயு தொந்திரவை ஏற்படுத்தி மூச்சுப் பிடிப்பையும் ஏற்படுத்தும். 

மலச்சிக்கலுக்கான (constipation) காரணங்கள்

மலச்சிக்கலுக்கு(constipation) பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணமாக இருப்பது குடல் வறட்சி.மூலம் உள்ளவர்களுக்கும்உடல்சூடு காரணமாகவும் மலச்சிக்கல்(constipation) ஏற்படலாம். காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்க சோம்பல் கொள்பவர்களுக்கு நாளடைவில் மலச்சிக்கல் ஏற்படும். இரவு காற்றோட்டமில்லா இடங்களில் உறங்குவோர், நீர் அதிகம் பருக்காமல் இருப்போர் இவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். மலம் சரிவர கழிக்காததால் மனதில் ஒருவித துன்பம், ஒருவித பதட்டம் பற்றிக் கொள்ளும்

மலமாற்று சிகிச்சை

குடலில் வாழும் சில நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் (பாக்டீரியாக்கள்) மலம் வெளியேறுவதில் முக்கிய பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. மலமாற்று சிகிச்சை அளிப்பதன் மூலம் இதை சரிசெய்ய முடியும் என்று அமெரிக்க  மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதாவது மலப்பிரச்சினை இல்லாத ஒருவரின் மலக்குடலில் இருந்து சிறிது மலத்தை எடுத்து மலப்பிரச்சினை உள்ளவரின் மலக்குடலில் வைப்பதன்மூலம் மலப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

மலச்சிக்கலுக்கான (constipation) தீர்வுகள்

நார்ச்சத்து உள்ள உணவுகளை,(கீரைகள் பழங்கள் ) எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் குறையும். சிலருக்கு புளிச்சைக்கீரை மலச்சிக்கலை ஏற்படுத்தலாம் அவர்கள் புளிச்சைக்கீரையுடன் சிறிது நல்லெண்ணை கலந்து உண்ணலாம். 

அபான வாயு மலத்தை வெளியேற்ற உதவுகிறது.  இந்த அபானவாயு காலை 6.00 (<6.30) மணிக்கு முன்னர் எழும்போது நன்கு வேலை செய்யும். அதோடு காற்றோட்டமுள்ள இடத்தில் உறங்குவோருக்கு நன்கு வேலை செய்யும். 

மலச்சிக்களுக்கு(constipation) அபான முத்திரை நல்ல பலன்தரும் என்று நம்பப்படுகிறது அதாவது கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியை சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இது அபான முத்திரை

 மலச்சிக்கலுக்கு Constipation அபான முத்திரை

கடுக்காய்ப்பொடி குடல் வரட்சியை நீக்கி மலம் இலகுவாக வெளியேற உதவும். (20 நாட்களுக்குப் பிறகு நல்ல பலன் தெரியும்)

சோற்றுக்கற்றாழை ஒரு காயகல்ப மூலிகை.  காலையில் சோற்றுக்கற்றாழை சோறை நீரில் கழுவியபின் விழுங்க,/ சாப்பிட்டுவர நல்ல மாற்றம் தெரியும். 

மலச்சிக்கல் மருந்து சோற்றுக்கற்றாழை aloevera  medicine for constipation

மூலத்தினால் மலச்சிக்கல் எனில் துத்தி இலையை 4,5 எடுத்து மென்று சாப்பிட 4,5 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.  

medicinal plant  for piles constipation மலச்சிக்கல் மருந்து - துத்தி இலை

இவை தவிர பெரும்பாலும் காயகல்ப மூலிகைகள் மலச்சிக்கலை சரி செய்வன அறிந்துகொள்ள காயகல்ப மூலிகைகள்

வர்மமுறையில் பருந்து வர்மம், அன்னக்காலம், நெற்றியில் உள்ள பட்சி நேம 
வர்மம், மூக்கில் உள்ள பால வர்மம் போன்ற வர்மங்கள் மூலம் மலச்சிக்கல் சிகிச்சை தரப்படுகிறது.

விளக்கெண்ணை பருகுதல் மூலமாக மலக்கட்டு நீக்கப்படுகிறது. சிறிது விளக்கெண்ணையை பாலில் கலந்து இரவு குடிக்கலாம். 

பொதுவாக பழங்கள் (ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, வாழை) மலப்பிரச்சினையை தீர்ப்பதில் வல்லவை. எனினும் ஒவ்வொருவருக்கும்  வேவேறான கனிவகை பலன் தரும். பயன்படுத்திப் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் இது. 

இரவு படுக்குமுன்னர் பால் அல்லது தண்ணீர் பருகிவிட்டு படுக்க காலையில் மலம் எளிதாக வெளியேறும். சளி தொந்திரவு உள்ளவர்கள் வெந்நீர் பருகலாம்.

காலையில் எழுந்தவுடன் முதல் கடமையாக காலைக் கடனை தீர்க்கும் பழக்கத்தை  வைத்திருந்தால் மலச்சிக்கல் பிரச்சினை முடிவுக்கு வரும்.  முடிந்தால் காலையில் நீராகாரம் அல்லது நீர் (உடலுக்கு ஏற்ப 200 ml முதல் ..) பருகியபின் சிறிது தூரம் நடந்தால், மலச்சிக்கல் சரியாகும். 

சூடான இடங்களில் வேலைசெய்வோர், கணினியில் அதிக நேரம் செலவிடுவோர், வாகன ஓட்டிகள் போன்றவர்களுக்கு இரவில் கண் எரிச்சல் கண் பொங்குதல் ஏற்படுவதுண்டு. இதனால் தூக்கம் பாதித்தல் அதன் பின்விளைவாக மலச்சிக்கல் அதன் பின்விளைவாக நீரிழிவு (diabetes) ஏற்பட வாய்ப்பும் உண்டு. இவ்வாறான பிரச்சினை உள்ளவர்கள் இரவு படுக்குமுன் ஒரு கேரட் சாப்பிட்டுவிட்டு படுக்க கண் எரிச்சல் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும் 

சர்க்கரை நோய்க்கு செலவின்றி நிரந்திர தீர்வு இங்கே 

மேலும் வாசிக்க 

உடலை வளமாக்கும் காயகல்பம் 

நோய் எதிர்ப்புசக்தி 

கொரோனாவிலிருந்து விடுதலை 

கையிலே நெருப்பு கவலையில்லை 


கட்டுரைகளை தெரிவு செய்யவும் 


4 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல அறிவுரை

Unknown சொன்னது…

Very well useful

Unknown சொன்னது…

Best advice

சிவகுமார் சொன்னது…

நல்ல கருத்துகளை எழுதி வருகிறீர்கள் நன்றி