நோயைக் கண்டறிய சிறுநீர்

 

 How to Find Disease using Urine

நோயைக் கண்டறிய உதவும் சிறுநீர் 

தேரையர் (தேரர் ) நீர்க்குறி நூலிலிருந்து  

சிறுநீரின்‌ நிறக்குறி

சிறுநீரின்‌ இலக்கணம : அறுவகைச்‌ சுவையுள்ள

உணவினை ஒன்றற்கொன்று வேறுபாடின்றியும்‌, பசிக்கேற்ற

அளவும்‌, காலாகாலத்தில்‌ உண்டு உறங்க வேணடும்‌.

விடியற்காலையில்‌ சிறுநீரைக்‌ கண்ணாடிக்குவளையில்‌ ஆவி

போகாதவாறு செய்து, 1 மணி நேரத்திற்குள்‌ அதன்‌ நிறக்குறியையும்‌

எண்ணெய்‌ விட்டுப்பார்க்கும்‌ போது காணப்படும்‌ குறிகளையும்‌

கவனிக்கவும்‌. அதிலிருந்து பிணிகள்‌ தீரும்‌ தீராதென்று அறிந்து

கொள்ளல்‌ வைத்தியர்களின்‌ தலையாய கடனாம்‌.

 

கிறுநீரின்‌ நிறம்‌ : மஞ்சள்‌, சிவப்பு, பச்சை, கருமை, வெண்மை

என்னும்‌ ஐந்து நிறமுள்ளதாயிருக்கும்‌. மஞ்சள்‌ நிறம்‌ ஆறு

வகைகளாகவும்‌. சிவப்பு நான்கு வகைகளாகவும்‌, பச்சை ஐந்து

வகைகளாகவும்‌. கறுப்பு நான்கு வகைகளாகவும்‌. வெண்மை இரண்டு

வகைகளாகவும்‌ பிரிக்கப்படலாமென்று மருத்துவ நூல்கள்‌

கூறுகின்றன.

 

மஞ்சள்‌ நீறின்‌ நிறவகை: மழையில்‌ நனைந்து ஊறிய

வைக்கோலிலிருந்து இறங்குகின்ற நீரின்‌ நிறத்தையுடைய சிறுநீர்‌

சீரணக்குறைவால்‌ உண்டானதாகும்‌. சிறுநீர்‌ துரிஞ்சிப்பழ நிறத்தை

அடையுமானால்‌ அது சீரண பக்குவத்தால்‌ உண்டானதென்று

அறியவேண்டும்‌. சிறுநீர்‌ சிவப்பும்‌. மஞ்சளும்‌ கலந்த நிறத்தை

அடையுமானால்‌ மிக்க வெப்பத்தால்‌ விளைந்ததெனக்‌ கொள்ளல்‌

வேண்டும்‌. காட்டு நாரத்தம்‌ பழத்தோலின்‌ நிறமாய்‌ வெளிப்பட்டால்‌

அது சூட்டைக்‌ கொடுப்பதற்கான சிறுநீராகும்‌. கொதிக்கின்ற தீயின்‌

நிறத்தையடைந்தால்‌, சிறுநீர்‌ மிகுந்த வெப்பத்தை அடைந்ததென

உணரவேண்டும்‌. மஞ்சள்‌ நிறமும்‌ அரைத்த குங்குமப்பூ நிறமும்‌

வரி வரியாய்க்‌ காணப்பட்டால்‌, சிறுநீர்‌ வெப்பத்தின்‌ உச்சத்தை

அடைந்ததாகக்‌ கருதப்படும்‌.

 

சிவப்பு நிறமுள்ள சிறுநீரின்‌ வகைகள்‌: சிறுநீர்‌ செம்மையும்‌.

கருமையும்‌ கலந்த நிறத்தையுடையதாக இருந்தால்‌, இரத்தம்‌

பொங்குதலாகிய சிறுநீராகும்‌. இரத்தக்கொதிப்பால்‌ இறங்கும்‌ நீர்‌

முகுந்த செந்நிறமுள்ள பன்னீர்ப்பூ நிறத்தைக்காட்டும்‌. இரத்தம்‌

அதிகமாகப்‌ பொங்கிய குறியைக்காட்டும்‌ நீர்‌ கறுப்பும்‌, இதில்‌ சிறிது

செம்மையும்‌ கலந்த நிறமும்‌, அல்லது தனித்த அதிக சிகப்பு நிறமும்‌

உடையதாயிருக்கும்‌.

 

பச்சை நீரின்‌ வேற்றுமை இயல: சிறுநீர்‌ கறுப்பு நிறத்தையும்‌.

சிறிது பச்சை நிறத்தையும்‌ அடைந்தால்‌, சீதளத்தினாலான

தென்றறிய வேன்டும்‌. நஞ்சினால்‌ ஏற்பட்ட சீதளம்‌ அதிகரித்தால்‌.

நீர்‌ ஆகாய நிறத்தையொத்திருக்கும்‌.

 

சிறுநீரில்‌ நீலச்சாயை காணப்படுமானால்‌, அது மிக்க

சீதளத்தினாலுணடானதென்று அறியவேண்டும்‌. இந்நீர்‌

பாலர்களுக்கும, கிழவர்களுக்கும்‌ வாத நோயை உண்டாக்கும்‌, நீர்‌

தடித்து நீல நிறத்தில்‌ காணப்பட்டால்‌, அது வாத. பித்த. கபங்களைப்‌

பாதிக்கும்‌. நீர்‌ இலைப்பச்சை நிறத்தை யொத்திருக்குமாயின்‌, வாத

பித்த, கபங்கள்‌ கெட, உண்டாகும்‌ கொடிய நீராகும்‌.

 

கருமைதிரவேற்றுமை : நீரில்‌. குங்குமப்பூ. நிறத்துள்‌ கருமை

நிறம்‌ தோன்றினால்‌. அந்தநீர்‌ காமாலை அல்லது பித்தநோய்க்குக்‌

காரணமாகும்‌. இன்னும்‌ குங்குமப்பூ நிறத்துடன்‌ கலந்த கறுமையோடு

செம்மையும்‌ சேர்ந்திருந்தால்‌ அது இரத்தக்‌ கெடுதியைக்‌ காட்டும்‌.

 

சிறுநீரில்‌ கருமையும்‌. சிறிது பச்சையும்‌ கலந்திருந்தால்‌ அது

இரத்தத்தில்‌ அழுக்கு சேர்ந்திருப்பதைக்‌ குறிக்கும்‌. கருவையும்‌.

வெண்மையும்‌ கலந்த நிறத்தைக்காட்டினால்‌, சிலேத்தும வாத

தோஷங்கள்‌ அதிகமானதைக்குறிக்கும்‌. இது பல நாட்களுக்குமுன்‌

வெப்பத்தினாலுண்டானதென்பர்‌. கரநோயால்‌ பீடிக்கப்பட்டவர்களும்‌

கிழவர்களும்‌ பாதிக்கப்படுவார்கள்‌ (கபத்தைத்‌ தரக்கூடிய

உணவுண்பதால்‌ இக்கொடிய நீர்‌ உண்டாகும்‌.

 

வெண்மை திறமுள்ள சிறுநீரின்‌ 6 வேற்றுமை : நீர்‌

வெண்மையாயும்‌, தெளிந்துமிருந்தால்‌, சுத்த சீதளத்தால்‌

உண்டானதாகும்‌. மருந்துகளினால்‌ இதைக்கட்டுப்படுத்த முடியாது.

இந்நீருள்ளவன்‌ கடல்‌ அலையில்‌ சிக்கியவனைப்போல்‌ பிழைப்பது

அரிது. நீர்‌ அதிகமாக வெளுத்தும்‌ சலியைப்போலுமிருந்தால்‌ அது

கபத்தின்‌ கொதிப்பாலானது. இது பாலின்‌ நிறத்தை அடைந்தால்‌

எலும்பை உருக்கியதாலேற்படும்‌ சிறுநீராகும்‌. முடிவில்‌ இது

எலும்புருக்கி நோயைப்‌ புலப்படுத்துகின்றது. சிறுநீர்‌ சீழ்‌ கலந்து

துர்நாற்றம்‌ வீசினால்‌ கருப்புப்‌ பையினுள்ளும்‌

கொப்பூழிடத்தினுள்ளும்‌. ஆண்குறித்‌ துளையினுள்ளும்‌ புண்‌

இருப்பதைக்‌ காட்டும்‌. அவ்வாறு புண்‌ இல்லையானால்‌ கல்லடைப்பு

நோயுண்டாகுமென்று அறிந்து கொள்ளலாம்‌.

 

..ம்‌ - சந்நிபாதம்‌: விந்தைப்போன்று இறங்கும்‌ சிறு நீர்‌

கோழைநோய்‌. சந்நிநோய்‌ இரண்டையுங்‌ குறிக்கும்‌.

 

உப்பு; சிறுநீர்விட்ட இடத்தில்‌ உப்பு உறையும்‌, அப்படி

உறையாவிட்டால்‌ அந்நீர்‌ கெடுதியை விளைவிக்கும்‌. சிறுறீர்‌

மோரைப்போலவும்‌, பாலைப்போலவும்‌ தனித்தனி இறங்கினால்‌

கொடிய வெப்பத்தினால்‌ உண்டான கூற்றுவனைப்‌ போன்றதாகும்‌.

 

வெப்பம்‌: நீர்‌ கெட்டுப்போன புலாலைக்‌ கழுவின நீரின்‌

நிறத்‌ தையொக்குமானால்‌, குண்டிக்காயின்‌ வன்மை

கெட்டுப்போனதாலுண்டாவதாகும்‌. இக்குறைவு கோழையும்‌,

குருதியும்‌, கொதிப்படைந்ததனால்‌ ஆகும்‌. தடிப்பாயிருக்கும்‌

சிறுநீரும்‌, நெய்ப்பசையை ஒத்திருக்கும்‌. சிறுநீரும்‌ மிகக்‌ கொடிய

தன்மையைக்‌ காட்டும்‌.

 

கிர இலக்கண வாதப்பிணி: சிறுநீர்‌ வெண்மையாகவும்‌,

உதிரத்தின்‌ நிறத்தையும்‌ அடைந்தால்‌ வாத நோயைத்‌ தரும்‌.

 

பித்தப்‌.பிணி: சிறுநீர்‌ பழுத்த பொம்மனமாகுப்‌ பழத்தின்‌

நிறத்தையுங்‌, கனமுள்ள செளவிீரத்தின்‌ ஒளியின்‌ நிறத்தையும்‌, எள்‌

நெய்யின்‌ நிறத்தையும்‌ அடைந்தால்‌ பித்த நோயைத்‌ தருமென்று

சித்தசாரனவம்‌என்னும்‌ நூல்‌ கூறுகின்றது.

 

பதத காமாலை: சிறுநீர்‌ மஞ்சள்‌ (பித்தம்‌) நிறமாயும்‌

தள்ளப்பட்ட உதிரத்தினை ஒத்ததாயிருக்குமானால்‌, பித்த காமாலை

நோயால்‌ பிறந்தனவென்றுசித்தியவித்தியாதரம்‌என்னும்‌ நூல்‌

கூறுகின்றது.

கபப்பிணி நீர்‌ நிறம்‌. சிறுநீரில்‌ வெண்ணிறமும்‌, நுரையும்‌.

குமிழியும்‌ இருக்குமானாலும்‌, அல்லது அது சுத்தநீலரபம்‌

போலிருக்குமானாலும்‌, நெய்யைப்‌ போன்று இருப்பினும்‌, அதில்‌

பல நிறங்கள்‌ கலந்து தோன்றினாலும்‌, கபநோய்‌ உண்டாகும்‌.

 

சளி இருமல் மூக்கடைப்பு சரியாக எளிய மருத்துவ முறைகள்

தொந்தப்பிணி நீர்‌ நிறம்‌: தொந்த நிறத்துடன்‌இழியும்‌ சிறுநீரில்‌

கறுமை நிறமும்‌ காணப்படும்‌ என்று வேறு ஒரு சாரார்‌ கூறுவர்‌.

 

மேக்நோயின நீர்‌ நிறம்‌: சிறுநீரில்‌ உதிரம்‌ காணப்பட்டால்‌

மேகநோம்‌ அல்லது மகாநோய்‌ உண்டாகுமென்றுநித்திய

நாதீயம்‌" என்னும்‌ நூல்‌ கூறுகிறது.

 

சரப்பிணி நீர்‌ நிறம்‌: சுரப்பிணியில்‌ நீர்‌ மஞ்சள்‌ நிறமாக

இருக்கும்‌.

 

அசாததியநீர்‌ நிறம்‌ : சுரநோயோ. மேகநோயோ

தாக்கியிருக்கும்‌ காலத்தில்‌ சிறுநீர்‌ மிகப்பெருக்கமாக இறங்குமானால்‌

உயிரை நீக்கும்‌.

 

நிறை இலக்கணம்‌: கனம்‌ இன்றியும்‌. தெளிவுடனுமிருக்கும்‌

சிறுநீர்‌. சீதள நிலைபெற்று கபத்தை இளக்களாலுண்டாகியது. இந்நீர்‌

நீர்ப்‌பையிலும்‌, இந்திரியப்பையிலும்‌, வன்மைக்‌ குறைவால்‌

உண்டானதென்று கொள்ளவேணடும்‌. நீர்‌ தடித்து இறங்கினால்‌, வாத

பித்த, கபங்களின்‌ கெடுதலைக்‌ காட்டும்‌. இதனால்‌ வீக்கம்‌ கட்டிகள்‌

உண்டாகும்‌. இவை நாளுக்குநாள்‌ குறைந்தால்‌ நலனாகும்‌. இன்றேல்‌

கொடிய வெப்புப்பிணி பீடிக்கும்‌.

 

இயற்கை நீர்‌: தடிப்பும்‌, மிக்க தெளிவுமில்லாத சிறுநீர்‌

சுகத்தைக்‌ கொடுக்கும்‌ உடலியற்கை நீராகும்‌. இது மிகவும்‌ நன்று.

 

மன இலக்கணம: சீதளம்‌ குறைந்த

உடலைப்பெற்றவர்களுக்கு. நீர்ப்பெருக்கத்துக்குள்ள நாற்றமுடன்‌.

அப்பெருக்கத்தின்‌ நிறம்‌ கனத்தைப்‌ பொறுத்து சிறுநீர்‌ இறங்கும்‌.

சிறுநீர்ப்பை, நாளப்புண்‌ நீர்‌: சிறுநீரிலிருந்து கொடிய மணம்‌

வீசினால்‌, மூத்திரப்பை,. மூத்திரநாளம்‌ இவற்றில்‌ புண்‌ உள்ளதென்று

உணர்க. அல்லது வாத பித்த கபங்களின்‌ கெடுதலே என்று உணர்க.

சிறுநீரில்‌ புளிப்பு மணம்‌ மிகுதியாயிருக்குமானால்‌, அது

உஷ்ணப்பிணி சம்பந்தப்பட்டதாகும்‌. அந்த உஷ்ணம்‌ நோயாளியை

தீயினின்று உண்டாகும்‌ நீர்போல சீதளத்தில்‌ கொண்டு விடும்‌.

 

இரத்‌ சமிகுதியால்‌ உண்டாகும்‌ ீர்‌: சிறுநீர்‌ இனித்த மணம்‌

வீசினால்‌ இரத்தம்‌ மிகுந்து உண்டாகிய விருத்தத்தினாலானது என்க.

அல்லது இரத்த விருத்தியால்‌ ஏற்பட்ட பிணிக்கூட்டத்தைச்சார்ந்தது

என மருத்துவ நூல்‌ ஆராய்ந்தோரின்‌ கொள்கையாகும்‌.

 

பித்த விகறப நீர்‌: கருமை நிறமுள்ள மானினிடத்து

உண்டாகும்‌ மணம்‌ வீசினால்‌, அந்நீர்‌ பித்தத்தின்‌ மாறுபாட்டால்‌

விளைந்ததாகும்‌.

 

உடற்பசை நீர்‌: சிறுநீரில்‌ புலால்‌ நாற்றம்‌ வீசுமானால்‌, அது

உடற்பசைக்‌ கேட்டினாலாகும்‌. இக்‌ கேடு

அப்பொழுதில்லையாயினும்‌, இது உணடாவதற்குத்‌ தக்க

சமயமென்று அறிக. இந்நீர்‌ மிகக்‌ கெடுதலை உண்டாக்குமென்று

மருத்துவ நூல்கள்‌ கூறுகின்றன.

 

காயகல்ப மூலிகைகள்/மருந்துகள்

நுரை இலக்கணம்‌: உடலுறுதிக்காக இருக்கும்‌ பசை

இலகினால்‌ வாயு சிறுநீரில்‌ சம்பந்தப்பட்டு, சிறுநீர்‌ நுரையுடன்‌

இழியும்‌.

 

காமாலை நீர்‌: நுரை பொருந்திய அந்நீர்‌ மஞ்சள்‌, கருமை.

சிவப்பு நிறங்களக்‌ காட்டினால்‌, காமாலை நோய்‌ உண்டாகும்‌ என்று

ஆராய்ச்சி செய்த வைத்தியர்கள்‌ கூறுவர்‌.

 

வாதம்‌ பித்தம்‌ கபம்‌ மூன்றும்‌ குறையும்‌ நீர்‌: சிறு நீர்‌ நுரை

குறைந்து இழிந்தால்‌, வாத பித்த கபங்களின்‌ வன்மை குறைந்து

வருவதைக்‌ காட்டும்‌.

 

பாண்டு தோயைக்‌ காட்டும்‌ சிறுநீர்‌: மிக்க அளவில்‌

நீர்ப்பொருள்கள்‌ அடங்கிய உணவை உண்ட போதிலும்‌ சிறுநீர்‌

இயற்கை அளவுக்குக்‌ குறைவாக இருக்குமானால்‌ பாண்டு நோயைக்‌

காட்டுவதாகும்‌. இந்நோயால்‌ நீக்கக்கூடாத பேதியும்‌, அயர்வும்‌ ஏற்படும்‌.

  

சிறுநீரில்‌ எள்நெய்‌ விட்டுப்‌ பார்க்குங்குறி

 

வட ஆலமரத்தின்‌ கீழ்‌ அமர்ந்து ஒப்பற்ற கைக்குறியினால்‌.

சின்‌ முத்திரை காட்டி, உணமைப்பொருள்‌ விளக்கிய

சிவபெருமானை வணங்கி, உடற்குறி நிறக்குறி, ஒலிக்குறி கண்குறி.

நாக்குறி, சிறுநீர்க்குறி, மலட்டுக்குறி, கைக்குறி (கையில்‌ நாடிக்குறி)

நீரில்‌ எண்ணெய்‌ விட்டுப்‌ பார்த்து நோய்களையறியும்‌ நெய்க்குறி

நூலை இப்பெரிய உலகின்கண்‌ சொல்லலாம்‌.

 

சிறுநீரில்‌ எண்ணெய்‌ விட்டுப்‌ பார்க்கும்‌ விதி: சிறுநீரின்‌

நிறத்தின்‌ குறியால்‌ நோயைக்‌ கண்டு பிடிப்பதற்காக கூறிய விதி

இது. சிறு நீரில்‌ ஒரு சிறுதுளி எண்ணெயை நடுவில்‌ விட்டு

காற்றினால்‌ எண்ணெய்த்துளி ஆடாதபடி வெய்யிலில்‌ வைத்து அந்த

 

எண்ணெய்த்துளி போகின்ற வழியைக்கண்டுூ அத்துளி

தெரிவிக்கும்‌ குறிகளிலிருந்து நோயை வைத்தியர்கள்‌

உணரவேண்டும்‌.

 

வாதம்‌ (வாயு): சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி

பாம்பு போல்‌ நீளமானால்‌ வாத (வாயு) நோயைக்காட்டும்‌

வளைவும்‌ கொள்ளப்படல்‌ வேண்டும்‌)

 

பித்தம்‌ (சூடு): எண்ணெய்த்துளி மோதிரம்போல்‌ வட்ட

வளைவாயிருக்குமானால்‌, அந்நீர்‌ நோயைக்‌ காட்டும்‌.

 

கபம்‌ ர்‌): எண்ணெய்த்துளி முத்து வடிவத்தைப்போல்‌,

பரவாமல்‌ இருந்தால்‌, அது ஐய (நீர்‌) நோயைக்‌ காட்டும்‌.

 

தொர்தக்குறி: சிறுநீரில்‌ எண்ணெய்த்துளி விட்டுப்‌

பார்க்கும்போது பாம்பில்‌ மோதிரமும்‌, மோதிரத்தில்‌ பாம்பும்‌.

பாம்பில்‌ முத்தும்‌, மோதிரத்தில்‌ முத்தும்‌ கலந்திருந்தால்‌, அந்நீர்‌

கலப்புக்‌ குற்றத்தாலாய தென்று அறிய வேண்டும்‌.

 

முக்குற்றக்குறி: சிறுநீரில்‌ எண்ணெய்‌ விட்டபோது அத்துளி

அழுத்தினாலும்‌, முக்குற்றங்களில்‌ தனித்தனி காணப்பட்ட

நெய்க்குறிகள்‌ சேர்ந்து காணப்பட்டாலும்‌ முக்குற்றமென்றே உணர்க.

 

தீரும்‌ குறி: சிறுநீரில்‌ துளி எண்ணெய்‌ விடு, இது

வட்டமாயும்‌, மெல்லப்‌ பரவலுமாய்க்‌ காணப்பட்டால்‌, எவ்வித

நோயும்‌ நீங்கும்‌. சிறுநீரில்‌ விட்ட எள்நெய்‌ திருமாலின்‌ இடது

தோலில்‌ இருக்கும்‌ சங்கினைப்்‌ போலவும்‌.

சிங்‌காசனத்தைப்‌ போலவும்‌ நின்றால்‌, அந்நீரையுடைய

நோயாளியின்‌ உயிர்க்குக்‌ குற்றமில்லை. இன்னும்‌ அந்நெய்‌ குடை

போலவும்‌, யாழைப்போலவும்‌ காணப்பட்டால்‌ நோயாளி

காப்பாற்றப்படலாம்‌. சிறு நீரில்‌ எண்ணெய்த்துளி முல்லை மொட்டுப்‌

போலவும்‌ தாமரைப்‌ பூப்போலவும்‌ காணப்பட்டால்‌, அந்த

நீருடையவர்க்கு நோயொன்றுமில்லை.

தீராக்குறி: நோயாளியின்‌ சிறுநீரில்‌

எணணெய்த்துளியைவிடு. அது பொங்கி நீர்‌ முழுதும்‌ பரவினால்‌

நோயாளிக்கு இவ்வுலகில்‌ மருந்தே கிடையாது

 

சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி கடுகைப்போல்‌, தனித்தனி

சிதறிவிட்டாலும்‌, நோய்க்கு மருந்தில்லை என்க.

 

அந்த எண்ணெய்த்‌ துளியும்‌. சிறுநீரும்‌ வெவ்வேறாக

உணரமுடியாமல்‌ ஒன்றுபடக்‌ கலந்தால்‌, நோயாளியின்‌ உயிர்‌

நீங்குமென்பது கெளதமர்‌ கூற்று.

 

எள்‌, நெய்த்துளி சிறுநீருக்குள்ளே அழுந்திவிடுமானால்‌,

அந்நோய்‌ தீராதென்று மாதவ கற்பம்‌ என்னும்‌ நால்‌ கூறுகிறது.

 

சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி, அம்பு, வாள்‌

இரும்புலக்கை, சூலம்‌, ஈர்வாள்‌, கும்பம்‌, வெற்றிலை ஆகிய

இவைகளில்‌ ஒன்றின்‌ குறிப்பாகத்‌ தோன்றினால்‌ இந்த நோய்‌

தீராதென்று உணரவேண்டும்‌.

 

எருது, சிங்கம்‌, ஆளி, யானை, புலி, ஆடு. பன்றி, மனிதன்‌,

பாம்பு, ஆமை. பறவை, நரி, குரங்கு, கழுதை, பூனை. தேள்‌

இவைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றாகத்‌ தோன்றினாலும்‌, நோய்‌ தீருமென்று

சொல்வதற்கில்லை.

 

தீரும்‌ தீராக்குறி: சிறுநீரில்‌ விடும்‌ எண்ணெய்த்துளி விரைந்து

பல கண்களையுடைய சல்லடைபோல்‌ தோன்றினால்‌, நோயாளியின்‌

நாடியைப்பார்க்க வேண்டாமென்று கெளதமர்‌ கூறுகிறார்‌,

இருப்பினும்‌, உடலில்‌ கபம்‌ இருந்தாலும்‌ அம்மாதிரி குறி

காணப்படுதலால்‌, நோயாளியின்‌ நோய்‌ தீருமென்று சொல்வாரும்‌ உளர்‌.

கரும சாந்தி: : நோய்கள்‌ உண்டாவது கருமத்தால்‌, ஆதலால்‌

சிவனார்‌ செய்த கருமகாணடம்‌ என்னும்‌ நூலில்‌ சொன்னபடி

கருமசாந்தி செய்து பின்னர்‌ நோயாளிகள்‌ உயரிய மருந்துகளை

உட்கொள்ளலாம்‌. அவர்கள்தங்கள்‌ நோய்கள்‌ நீங்கப்பெற்று

தேவர்களைப்போல்‌ அறம்‌, பொருள்‌, இன்பப்பயனை அடைந்து

நலமுடன்‌ வாழ்வார்கள்‌.

 

இீர்க்குறி: வாதநோயால்‌ பீடிக்கப்‌ பட்டவர்கள்‌ சிறுநீர்‌ கடுத்து

நொந்து சிறுத்துப்பொருமி விழும்‌. பித்த நோயுற்றவர்களுக்கு, சிறுநீர்‌

பசுமையுடனசிவந்து எரிச்சலுடன்‌ கடுத்து இறங்கும்‌.

கபநோய்க்காரர்களுக்கு சிறுநீர்‌ வெண்மையாயும்‌, உறைந்தும்‌ விழும்‌.

தொந்த நோயுடையவர்களின்‌ சிறுநீர்‌ பலநிறமாக அந்தந்தக்‌

குற்றத்தின்‌ சேர்க்கைக்குத்‌ தக்கவாறு இருக்கும்‌.

 

வாத நோயுற்றாரின்‌ சிறுநீர்‌ வெளுத்திருக்கும்‌. பித்த

நோயுற்றார்க்கும்‌ சிறுநீர்‌ சிவப்பு, மஞ்சளுமாகவிருக்கும்‌. ஐய

நோயுற்றார்க்கு சிறுநீர்‌ நுரையைப்போலிருக்கும்‌.

 

நீரின்‌ நெய்க்குறி : பிணியாளரின்‌ சிறுநீரை ஒரு கண்ணாடிக்‌

குவளையில்‌ பிடித்து சூரியன்‌ முன்னர்‌ வைக்க வேண்டும்‌. ஒரு

துரும்பில்‌ எண்ணெய்த்‌ தோய்த்து, ஒரு துளி எண்ணெயை அந்நீரில்‌

விடவும்‌. அத்துளி நீரில்‌ சேர்ந்து பாம்பின்‌ வடிவம்‌ போல்‌ நீண்டும்‌

சிறிது வளைந்தும்‌ காணப்பட்டால்‌ வாதநோய்‌ என்றும்‌, மோதிரம்‌

போல்‌ இடைவிட்ட வட்டமாக காணப்பட்டால்‌ பித்தநோய்‌ என்றும்‌,

முத்துப்போன்று இருந்தால்‌ (ஐயநோம்‌) சீதள நோயென்றும்‌

அறியவேண்டும்‌.

 

வாதபித்தம, கபவாதமுடையாறின சிறுறீர்‌ நெய்க்குறி:

தொந்த நோயுடையார்‌ சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி புல்முனை

போல்‌ பரவினால்‌ வாதபித்தக்கலப்பு நோயாகும்‌. கந்துருபோல்‌

பரவினால்‌ கபவாதக்‌ கலப்பு நோயாகும்‌.

 

பித்த கபநீர்‌ சந்நிவாதமுடையோரின சிறுறீர்‌ நெய்க்குறி

பித்த கப நோயுடையோரின்‌ சிறுநீரில்‌ விடும்‌ எண்ணெய்த்துளி பாதி

மேலும்‌ பாதி கீழுமிருக்கும்‌.

 

சந்நிவாதநோயுடையாரின்‌ சிறுநீரில்‌ விடும்‌ எண்ணெய்த்துளி

நீரினுள்ளே அழுந்திவிடும்‌. இந்நிலை நோயாளி பிழைப்பது அரிது

என்பதை உணர்த்தும்‌.

 

சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி கண்ணாடி, சிங்கம்‌, பறவை,

ஆமை, செந்நாய்‌, குக்குடம்‌, வராகம்‌. வானரம்‌, பூனை. தேள்‌ அரசர்‌

கையிலிருக்கும்‌ சூலம்போல பரவிக்‌ காட்டினால்‌.

அந்நீரையுடையாரின்‌ நோய்‌ தீரவே தீராது

 

தீரும்‌ நோயின்‌ குறிகள்‌: சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி.

சங்கு. வீணை. பிசாசு. சிவன்‌. வில்‌. கொடி போல்‌ பரவியிருந்தால்‌

அந்த நோய்‌ தீரும்‌.

 

தீரும்‌ நோய்‌ தீரா நோய: நோயாளி இரவில்‌ தூங்கி

விடியற்காலையில்‌ விடும்‌ சிறுநீரை ஒரு கண்ணாடிக்‌ குவளையில்‌

 

பிடித்து அதை வெய்யிலில்‌ வை. அதில்‌ ஒரு துளி

எண்ணைய்விட்டு அது பரவும்‌ வகையைக்‌ கவனி. அது நன்றாகப்‌

பரவினால்‌ மெல்லத்‌ தீரும்‌ என்றும்‌ விட்டதுளி விட்டபடியே

பரவாமல்‌ இருக்குமானால்‌, அந்நோய்‌ எவராலும்‌ தீர்க்க முடியாது

என்றும்‌ உணர வேண்டும்‌.

 

வாதபித்தம்‌ காமாலை நீர்கள்‌: உண்மையான மருத்துவ

நூல்கள்‌ நோயாளிகளின்‌ சிறுநீர்க்‌ குறிகளை ஆராய்ந்து உடலிலுள்ள

நோய்களைக்‌ கண டறியலாமென கூறுகின்‌ றன.

வாதநோய்க்காரருக்கு சிறுநீர்‌ வெண்மையாயிருக்கும்‌. பித்த

நோய்க்காரருக்கு சிறிதளவு சிவந்த மஞ்சள்‌ நிறமாயிருக்கும்‌. மஞ்சள்‌

காமாலை நோயுற்றார்க்கு மிக்க செம்மஞ்சள்‌ நிறமாயிருக்கும்‌.

 

கபவாத பிதீதங்களின தெய்ச்குறி

கபவாதநோயால்பீடிக்கப்பட்டவரின்‌ சிறுநீர்‌ நுரைபோலிருக்கும்‌.

அந்த நீரில்‌ விடப்பட்ட எண்ணெய்த்துளி நீளமானால்‌ வாத

நோயாகும்‌. - அது சிதறிக்காட்டினால்‌ பித்த நோயாகும்‌.

 

கபம்‌ முக்குற்றம்‌ சார்பான நெமக்குறி: முற்கூறிய

கபநோய்க்காரரின்‌ சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி

சல்லடைக்கண்போல தோன்றும்‌. முக்குற்ற நோயாளியின்‌ சிறுநீரில்‌

விடப்பட்ட எண்ணெய்த்துளி மூன்று குறிகளையும்‌ கலந்து காட்டும்‌.

தீராத நோயுடையார்க்கு எண்ணெய்த்துளி பரவாமல்‌ விட்டபடியே

நிற்கும்‌. அது மெல்லப்‌ பரவினால்‌ நோய்‌ தீரும்‌ குறியைக்காட்டும்‌

 

குறிப்பு: எண்ணெய்த்துளி சல்லடைக்கண் போல்‌

காணப்படுவதை தீராநோய்‌ என்று கெளதமர்‌ கூறிய போதிலும்‌, தேரர்‌

அக்கொள்கையை மறுத்து அது கபத்தின்‌ குறியேயாதலால்‌ தீரும்‌

நோய்க்குறியே என்றும்‌ கூறியுள்ளார்‌.

 

தீரா நோய்க்குறி: சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளிஅதில்‌

அமிழ்ந்து போனால்‌, அந்நோய்‌ தீராது. கண்ணாடிக்‌

குவளையிலன்றி மட்பாண்டத்திலும்‌ நீரைப்பிடித்து எண்ணெய்த்துளி

விட்டுப்‌ பார்க்கலாம்‌.

 

தீரும்‌ நோய்க்குறி: நோயாளியின்‌ சிறுநீரில்‌ விட்ட

எண்ணெய்த்துளி கீழ்க்கண்டவைபோல்‌ மனிதன்‌. மீன்‌,கோவில்‌,

கோவில்‌ மதில்‌ சுற்று, பெரிய யானை, மலை, குடை மரம்‌. வெண்‌

 

சாமரை, தாமரைப்பூ. யானையின்‌ கொம்பு, குல்லாய்‌, சங்கு

கண்ணாடி, மகர தோரணங்கள்‌. பூமி, வீணை. சதுரமாயிருக்கின்ற

வீடு, பாகல்‌ இலை, வண்டு, தாமரை, மொக்கு, சிம்மாசனம்‌ போல்‌

காணப்படுமானால்‌ நோய்‌ தீரும்‌. மேலும்‌ சிறு நீரில்‌ விடப்பட்ட

எண்ணெய்த்துளி மத்தளம்‌, கொடி, பானை, பன்றி, காட்டு விலங்கு,

குயவன்‌ சக்கரம்‌ போல்‌ தோன்றினால்‌ நோய்‌ தாமத சாத்தியமாகும்‌.

 

தீரா நோயின்‌ குறிகள்‌: நோயாளியின்‌ சிறுநீரில்‌ விட்ட

எண்ணெய்த்துளி, கீழ்க்கண்டவைப்போல்‌ தோன்றும்‌.

 

ஒருகால்‌, மூன்று கால்கள்‌. நான்கு கால்களையுடைய மனிதர்‌,

உடல்‌ பருத்த மனிதர்‌, தலையில்லாத மனிதர்‌, முன்‌ கையில்‌ கத்தி,

சூலம்‌, உலக்கை, வில்‌, அரிவாள்‌. பாம்பு. பூனை, எலி, அம்பு, நண்டு,

சுரைக்காய்‌. கோழி, புலி, குரங்கு, சிங்கம்‌, குதிரை,

வெற்றிலைக்கொடி, எருது, கரடி, பறவை,ஆமை. தேள்‌,

எண்ணெய்த்துளி பரவாமை, பொங்கிப்‌ பரவல்‌, இலை

காணப்பட்டால்‌, நோய்தீராது. இக்குறிகள்‌ யாவும்‌ அகத்திய

முனிவரால்‌ கூறப்பட்டுள்ளவை.

 

வேறு

 

சந்நிவாத நோயும்‌, தீரும்‌ நோயும்‌: நோயாளிகளின்‌ சிறுநீரில்‌

துரும்பாலிட்ட எண்ணெய்த்துளி பாதி மிதந்து பாதி கீழிறங்குமாயின்‌,

அவன்‌ நோய்‌ சந்நிவாத நோயாய்‌ மாறும்‌. அவ்வெண்ணெய்த்துளி

சதுர வடிவாகவும்‌. தாமரை கண்ணாடி, குடை. சங்கு, தேர்ச்சக்கரம்‌,

சாய்ந்த மரம்‌, குண்டலி போலவும்‌ தோன்றினால்‌ அந்நோய்‌

தீருமெனக்‌ கொள்ளலாம்‌.

 

தீரும்‌ குறியும்‌, தீராக்‌ குறியும்‌: நோயாளியின்‌ சிறு நீரில்‌

விட்ட எண்ணெய்த்துளி சோற்றுக்கும்பம்‌, குள்ளன்‌ வெற்றிலை,

குதிரை, எருதுபோல்‌ தோன்றின்‌ அவனிடமுள்ள நோய்கள்‌ தீர்ந்து

இனிதே வாழ்வான்‌. பறவை, ஆமை. நாய்‌, சிங்கம்‌. பன்றி, பாம்பு

குரங்கு, தேள்‌, பூனை மனிதன்போல்‌ தோன்றினால்‌, நோயாளி

இறந்தான்‌ என்றே கொள்ளல்‌ நன்று.

 

மோரும்‌ சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்‌ தலையில்லா முண்டம்‌

போல்‌ தோன்றின்‌ இறப்பான்‌ என்றும்‌.ஒரு நாம வட்டம்‌ போல்‌

தோன்றின்‌ இறவான்‌ என்றும்‌ அறிதல்‌ வேண்டும்‌

 

சுரநீ.ர்‌ விகற்பம்‌. சுரநோயால்‌ பீடிக்கப்பட்டவனின்‌ சிறுநீர்‌

தெளிவாயிருந்தால்‌, வாத நோயால்‌ பாதிக்கப்படுவான்‌.

சுருக்காகவும்‌. பச்சை நிறமுடையதாகவுமிருந்தால்‌, அச்சுரநோய்‌

பித்தவெட்டை காரணமாய்‌ வந்ததாகும்‌. சிவப்பு

நிறமுடையதாயிருந்தால்‌ தோஷம்‌ அல்லது சந்நி உண்டாகும்‌.

சுரமுடையவன்‌ சிறுநீரில்‌ சுண்ணம்‌ போல்‌ படிந்திருக்குமாயின்‌,

அந்நோய்‌ தீராது.

 

சிறுநீர்‌ பெருக்கம்‌. உண்ணும்‌ நீர்‌ பொங்கி, உடற்‌ கருவிகளில்‌

தங்காமல்‌ நீர்ப்பையிலே தங்கி பலப்பல நிறமாக இடை விடாது

சிறுநீர்‌ இழியுமானால்‌, உடலுக்குக்‌ கெடுதியை விளைவிக்கும்‌.

 

மேகநீரீ: சிறுநீர்‌ விடப்பட்ட இடத்தில்‌ சுண்ணம்‌

படிந்திருந்தால்‌, எலும்புருக்கி நோய்‌ உண்டாயிருக்கவேண்டும்‌. நீர்‌

கலந்த மோர்‌ அல்லது நெய்‌ போலும்‌ படிந்திருந்தால்‌ மேகவெட்டை

நோய்‌ காரணமாகும்‌. இழிவதற்கு முன்னும்‌ பின்னும்‌ நீர்த்தொளை

அடைந்திடின்‌ பிரமியம்‌ காரணமாகும்‌. இழிந்த சிறுநீரில்‌

எறும்புகளும்‌ ஈக்களும்‌ மொய்த்தால்‌ அந்நீரையுடையவனின்‌ நோய்‌ தீராது.

 

சிறுநீர்‌ இலக்கணம்‌: சிறுநீர்‌ தெளிந்திருந்தால்‌ வாத நோய்‌

காரணமாகும்‌. மஞ்சள்‌ நிறத்திலிருந்தால்‌ பித்த நோய்‌ காரணமாகும்‌.

வெண்மையாய்‌ நுரைத்திருந்தால்‌ கபநோய்‌ காரணமாகும்‌.

கலந்திருந்தால்‌ தொந்தநோய்‌ காரணமாகும்‌.

 

தீர்ச்குறிச்‌ சிறப்பு: வைத்தியர்களுக்கு நாடிக்‌

குறிகளைக்கொண்டு நோயைக்‌ கணிப்பது மயக்கத்தைக்‌ கொடுத்தால்‌,

அவற்றை விட நீர்க்குறிகள்தான்‌ இன்ன நோயென்றறிய

சிறப்பானவை.

இரத்தச்‌ கொதிப்பு நீர்‌: சிறுநீர்‌ சிவந்திருந்தால்‌, அது இரத்தக்‌

கொதிப்பால்‌ உண்டான நீரென அறிதல்‌ வேணடும்‌.

உஷணமிகுதியினால்‌ கொதிப்பு ஏற்பட்டு, நீர்‌

சுருங்குவதனால்‌இக்குறி தென்படும்‌.

 

பித்த கோப நீர்‌: முற்கூறிய சிறுநீர்‌, மிகச்சிவந்திருந்தால்‌,

அது பித்த மிகுதிகாரணத்தால்‌ உண்டாகும்‌. மூலச்‌ சூட்டால்‌ எரிந்து

சிவப்பாய்த்‌ தோன்றிற்றென்றும்‌ சொல்லலாம்‌.

 

சேத்தும கோபறீர்‌: சிறுநீர்‌ அளவில்‌ குறைந்து

வெண்மையாயிருந்தால்‌ அது சேத்துமத்தால்‌ உண்டாகும்‌.

குளிர்ச்சியினால்‌ வெண்மை நிறமாகலாம்‌. இரத்தக்‌ குற்றத்தால்‌

அளவிலும்‌ குறையலாம்‌.

 

சிறுநீர்‌ வெம்மையாயிருந்து

தெளிந்துமிருந்தால்‌அது வாத மிகுதியினால்‌ உண்டாயிருக்கும்‌

குளிர்ச்சியினால்‌ வெண்மை நிறமும்‌, வறட்சியினால்‌ தெளிவும்‌

ஏற்பட்டதெனக்‌ கொள்ளல்‌ வேண்டும்‌.

 

இரத்தவாத பித்தக்‌ கலப்புறீரீ: சிறுநீர்‌ கனத்தும்‌

இறுகலாயுமிருக்குமானால்‌ அஃது இரத்தக்‌ கொதிப்பால்‌ ஏற்பட்ட

நீராகும்‌. தசை மென்மையாகக்‌ கரைந்து சிறுநீரில்‌ கலந்து

வெளிப்பட்டால்‌ பித்த வாதக்‌ கலப்பால்‌ ஏற்பட்டதாகும்‌.

 

வயது, காலம்‌,நட்சத்திரவ்களினால்‌ சிறுநீரின்‌ மாற்றம்‌:

இதுவரை சொல்லப்பட்ட சிறுநீர்க்குறிகள்‌, வயதினாலும்‌,

பருவத்தினாலும்‌. நட்சத்திரங்களின்‌ மாற்றத்தினாலும்‌, பித்தம்‌

மிஞ்சினதால்‌ ஏற்பட்ட குறிகளாகும்‌.

 

உஷ்ணறீர்‌: சுரத்தால்‌ பீடிக்கப்பட்டவரின்‌ சிறுநீர்‌ வெள்ளை

நிறத்துடனும்‌ உவர்‌ பொருந்தித்‌ தெளிந்திருந்தாலும்‌, அது

உஷ்ணத்தினாலாயது.

 

முறைக்காய்ச்சல்‌ நீர்‌: முறைக்காயச்சலுள்ளவர்களின்‌ சிறுநீர்

கனத்திருந்தால்‌ அக்காய்ச்சல்‌ விரைவில்‌ குணப்படும்‌.

 

சிறுநீர்‌ சிவந்து மிகவும்‌ தெளிவுற்றிருந்தால்‌. அந்நீர்‌ மூன்று

நாளைக்கொருதரம்‌ வரும்‌ காய்ச்சலாகும்‌. அந்நீர்‌ இறுகிச்‌ சிவந்து,

பின்பு வெள்ளையானால்‌, அந்நீரையுடைய நோயாளிக்குக்‌

கபாலத்தில்‌ பித்தம்‌ போயடையும்‌

 

தலைக்கனப்பு, மயக்கம்‌ கண்ணாடிக்குவளையில்‌ விட்ட

சிறுநீர்ப்பரப்பில்‌, வளையம்போல்‌ பரந்து நின்றால்‌ அந்நீருடையவர்‌

தலை கனத்து மயக்கமடைந்திருப்பார்‌ என மருத்துவ நூல்‌

ஆராய்ந்தோர்‌ சொல்லுவார்கள்‌.

 

தலையின்‌ இடப்பக்க நோய்‌: கண்ணாடிக்‌ குவளையில்‌

பிடித்து வைத்த சிறுநீர்‌ அதன்‌ அடியிற்‌ சிவப்பாயிருந்தாலும்‌.

மஞ்சளாயிருந்தாலும்‌, தெளிவுற்றிருந்தாலும்‌, தலையின்‌ இடது பக்கம்‌

நோயால்‌ பீடிக்கப்பட்டதென்று உணர்க.

 

தலையின்‌ வலப்பக்க நோய: சுரமுடையோர்க்குச்‌ சிறுநீர்‌

வெணமமையாயும்‌, கருப்புமாகித்‌ தெளிந்திருந்தால்‌ நோயாளிக்குத்‌

தலையின்‌ வலப்பக்கத்தில்‌. துன்பத்தைக்‌ கொடுக்கும்‌ நோயென்று

விளக்கமாய்ச்‌ சொல்லலாம்‌.

 

காய்ச்சலுடன்‌ கூடிய மார்பு நோயைக்‌ காட்டும்‌ நீரின்‌

நிறம்‌: பாத்திரத்தில்‌ பிடித்து வைத்த நீரின்‌ அடிப்பாதி சிவந்து,

கலங்கியும்‌, மேற்பாதி தெளிவுற்றுமிருந்தால்‌அந்நீரையுடையவனுக்கு

நெஞ்சுவலி, காய்ச்சல்‌ இருக்கும்‌ என்று மருத்துவ நூல்‌ வல்லோர்‌ கூறுவர்‌.

 

நீர்க்குண்டிக்காயில்‌ கல்லிருப்பின்‌ அதையுணர்த்தும்‌ நீர்‌:

சிறுநீர்‌ தயிர்நீர்‌ அல்லது பால்போல்‌ இழிந்து அதன்‌ அடியில்‌

வண்டல்‌ இருந்தாலும்‌ அந்நறீரையுடையவருக்கு நீர்குண்டிக்காயில்‌

கல்லிருப்பதால்‌ ஏற்பட்டதென்று சொல்லலாம்‌.

 

இரத்த தொந்த நோய்‌

 

ஈரல்‌ சுரம்‌: சிறுநீர்‌ சிவந்து சிறிது தெளிவுற்றிருந்தால்‌, அது

இரத்த தொந்திப்பாலுணடானது. அது கலங்கிச்‌ சிறிது

கருத்திருக்குமாயின்‌, வெப்பம்‌ ஈரலைத்‌ தாக்கியதாலுண்டான

காய்ச்சல்‌ என்று அறியவேண்டும்‌.

 

இருதய நோய: சிறுநீர்‌ தலைமுடியின்‌ நிறத்தை யொத்தால்‌.

தமரகப்‌ பிணியுண்டாகுமென்று சொல்லுவர்‌.

 

நெய்க்குறி (வேறு): சிறு நீரின்‌ குணங்களைக்‌ கொண்டு

நோய்களையறிய மற்றொரு சோதனையாகிய நெய்க்குறி கூறப்படும்‌.

கிறுழீரச்‌ சேகரிக்கும்‌ நே..ம்‌ : விடியற்காலத்தில்காலை 4

மணிக்கு விடும்‌ சிறுநீரைப்‌ பீங்கானில்‌ பிடித்து வைத்திருந்து,

அந்நீரில்‌ எண்ணெய்விட்டுப்‌ பார்க்க வேண்டும.

 

இரத்த மிகுந்த வெப்பு: சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி

வீசிப்பறந்து வட்டமாய்‌ நின்றால்‌, இரத்தம்‌ பொங்குதலால்‌

ஏற்பட்டதென்று அறியவேண்டும்‌.

 

இரத்தக்‌ குறைவு: எண்ணெய்த்துளி, விரைவில்‌ கதிர்போல்‌

நீண்டால்‌. இரத்தம்‌ கெட்டுக்‌ குறைந்ததாலுண்டானதென்று

அறியவேண்டும்‌.

 

பித்த மிகுதி: அந்த எண்ணெய்த்துளி கதிரமுனையைப்போல்‌

நீண்டால்‌, பித்தத்திள்‌ மிகுதியால்‌ உண்டானதென்றறிய வேண்டும்‌.

இந்நோயில்‌ பேதி உண்டானால்‌ நோய்‌ அற்றுப்போகுமென்று நூல்‌

வல்லோர்‌ கூறுவர்‌,

 

சீதமிகுதி: எண்ணெய்த்துளி நெகிழ்ச்சி அடையாமல்‌

அப்படியே நின்றால்‌ சீதமிகுதியால்‌ உணடானதென்று

அறியவேணடும்‌.

 

தோய தீராச்குறி: சிறுநீரில்‌ விட்ட எண்ணெய்த்துளி நீரினுள்‌

அமிழ்ந்தால்‌ அந்நீரையுடையவனின்‌ நோய்‌ தீருவது அரிது.

 

குளிர்மை: நாவரட்சி இல்லாமலும்‌, உடம்பில்‌

குளிரிருந்தாலும்‌, உடலில்‌ நடுக்கமிருந்தாலும்‌, வாயில்‌ நீர்‌

ஊறினாலும்‌, உடல்‌, கை, கால்‌ வெம்பினாலும்‌ இரவிலே அதிக நீர்‌

கழிந்தாலும்‌, உடலினமிக்க சீதளத்தைக்‌ குறிக்குமென்பர்‌.

 

முலைப்‌ பசல்‌ குறி: நோயாளியின்‌ சிறுநீரில்‌, ஆண்‌

பிளளையைப்பெற்ற தாயின்‌ முலைப்பாலை விடு. இது அச்சிறுநீரில்‌

கலந்தால்‌. நோய்‌ தீரும்‌. கலவாவிட்டால்‌ நோயாளி இறப்பான்‌எனறும்‌ கொள்க.

 

மரணமநறிய: நோயாளியினகாலில்‌ மேல்‌ புறமும்‌ கீழ்ப்புறமும்‌

பன்றியின்‌ கொழுப்பைத்‌ தடவவும்‌. பின்பு அதை வழித்து நாய்க்கு

இடு.நாய்‌அதைத்தின்று சீரணித்துக்‌ கொண்டால்‌ நோயாளி

பிழைப்பான்‌ என்க. நாய்‌ சீரணிக்காமல்‌ வாந்தி செய்தால்‌,

நோயாளியின்‌ நோய்‌ தீர்தலரிது.

 

குருதிக்குறி: நோயாளியின்‌ இரத்தத்தில்‌ இருதுளியெனக்‌

குளிர்ந்த நீரில்‌ விடு. அஃது உள்ளே அழுந்தின்‌ மரணம்‌

நேரிடுமென்று அறிக.

 

சிறுரீர்சோதனை: நோயாளியின்‌ சிறுநீர்‌ மஞ்சள்‌

நிறமாயிருந்தால்‌ அஃது உத்தமம்‌. தேன்‌ போன்ற நிறமாயிருந்தால்‌

மத்திமம்‌. பால்‌ போல்‌ வெண்ணிறமாயிருந்தால்‌, அது அதமமாகும்‌.

இந்த பதிவு குறித்த உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


கருத்துகள் இல்லை: