நிலத்தடிநீரைக் கண்டுபிடிப்பது எப்படி?

நிலத்தடிநீரைக் கண்டுபிடிப்பது எப்படி? 

Water Dowsing/ Divining

    நிலத்தடியில்  நீர் எங்கே இருக்கும் என்ற ஆராய்ச்சி பழங்காலம் தொட்டே இருந்துவந்திருக்கிறது.   

    கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் வராகமிகிரர் குறிப்பிட்டுள்ளார்.

   அத்திமரம் உள்ள இடங்களில் அடியில் தண்ணீர் இருக்கும் என்று கிருப சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    பூமியில் எங்கே நீரோட்டம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க பல வழிகளை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர். அவற்றைப் பார்க்கலாம்.

  பொதுவாக கிணறு தோண்டுவதற்கும், ஊற்றுக்கள் கண்டறிவதற்கும் இடம் நிர்ணயிப்பது அத்தி மரத்தின் பக்கத்தில். நம் முன்னோர்கள் அத்திமரம் தெய்வீக தன்மை வாய்ந்தது, அது நீர் உறவிடங்களுக்கு மேல் வளரும் என்று நம்பிவருகின்றனர். நீரூற்றுக்கு மேல் அத்திமரம் நன்றாக வளரும் என்றும்  நம்பினர். 

    கரையான்: கரையான் புற்று உள்ள இடத்தில் கண்டிப்பாக நீர் இருக்கும், அதுவும் சுவையான நீர் கிடைக்கும், கரையான் பொதுவாக ஈரமான பகுதியில் மட்டுமே புற்று கட்டும் என்பது நான் அறிந்ததே. இன்றும் கூட கிராமங்களில் தண்ணீருக்காக இடம் பார்க்கும் போது கரையான் புற்று உள்ள இடத்தை தேர்ந்து எடுப்பார்கள். (ஆனால் பம்ப் செட் வைத்து நீர் இறைக்கும் அளவிற்கு நீர்கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.)

    கிணறு வெட்ட வேண்டிய இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால், சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் புற்று இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும் என்றும் நம்பினர்.

    மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்றும் நம்பினர்.

பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும் என்றும் நம்பினர்.

    மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்றும் நம்பினர்.

    நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விட அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்றும் நம்பினர்.

    கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய விட்டு  அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம் . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

இவை ஒருபுறமிருக்க, தற்காலத்தில் தேங்காயை வைத்து, குச்சியை வைத்து, கம்பிகளை வைத்து, பெண்டுலம் வைத்து நீர்பார்க்கும் முறைகள் (Water dowsing or Divining) நடைமுறையில் பரவலாகக்காணப்படுகின்றன.  இவற்றின் அடிப்படை காந்தசக்தி என்று கூறப்பட்டாலும் மனோசக்தியே காரணியாக உள்ளது. 

. இது ஒன்றும் கடினமான செயல் அல்ல..அதேபோன்று நீங்களும் தண்ணீர் (Water Dowsing/ Divining) பார்க்கமுடியும். அது எப்படிஅதை தெரிந்துகொள்வதற்கு முன் சில அடிப்படைகளை புரிந்துகொள்ள வேண்டும்.

நிலத்தடி நீரைக் கண்டுபிடிப்பது எப்படி ? How to water divining - dowsing -Explanation
Dowse with coconut

மனோசக்தி 

நம் ஆழ் மனதிற்கு அபார சக்தி உள்ளது. இந்த சக்தியின் மூலம் நம்மைப்பற்றிய தகவல் மட்டுமின்றி, பிறரின் அந்தரங்க விஷயங்களைக்கூட அறியமுடியும் என்று மனோதத்துவ வள்ளுனர்கள் கூறுகின்றனர். அதிக உணச்சிவசப்படும் சிலருக்கு  சில நேரங்களில் அவர்களது ஆழ்மனது வெளிப்படும். இதுபோன்ற சமயங்களில் அவர்கள் தன்னை மறந்து செயல்படுவர். 

நோயாளியை ஆழ்நிலை துயிலுக்கு கொண்டு சென்று சில தீர்க்க முடியாத நோய்களையும் மனோதத்துவ மருத்துவார்களால் தீர்க்க முடியும். (இந்தமுறை பலநாடுகளில் புழக்கத்தில் உள்ளது) இதற்கு நோயாளியை ஆழ்நிலை துயிலுக்குக் கொண்டு சென்று பின்னர் நேர்மறையான கட்டளைகளை இடுவார். இந்த நேர்மறை கருத்துக்கள் ஆழ் மனதில் பதிந்தால் அதற்கேற்றாற்போல் நாம் உடல் செயல்படத்தொடங்கும். விரைவில் தீராத நோய்களும் தீரும். எனினும் இந்தக்கலை நல்லவர் பயன்படுத்தும் போது விளையும் நன்மையைவிட, தீயவர்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மிக அதிகம் என்பதால் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.  இந்த கலையை மெஸ்மரிசம், வசியப்படுத்துதல், ஹிப்நட்டிசம் என்றெல்லாம் கூறுவதுண்டு.

மதத்தின் போர்வையில் பல போலி மனிதர்கள் இந்தக்கலையை மக்களை அடிமையாக்க அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது. மனோ சக்தி அதிகம் உள்ளவரால் நிலத்தடிநீரை எளிதாக கண்டுபிடிக்க இயலும்.     

மனோசக்தியை அதிகரிக்கும் முறைகள் 

    சிலருக்கு இயற்கையிலேயே இந்த மனோசக்தி அதிகம் இருக்கும் .
தியானம், விளக்கின் ஒளியை பார்த்தல், மின்விசிறி சுலல்வதை பார்த்தல் மூக்கின் நுனியை பார்த்தல், புருவ மையத்தை பார்த்தல், வெள்ளைத்தாளில் சிறு கருப்பு மை இட்டு அதை தொடர்ந்து பார்த்தால் (மேலும் படிக்க நிஜானந்த போதம் எனும் தமிழ்ச் சித்தர் பாடல் சார்ந்த நூல் )  .இப்படி பல பயிற்சிகளை மேற்கொண்டு மனோசக்தியை வளர்த்துக்கொள்வோரும் உண்டு. நல்ல மானோசக்தி உடையவர்களால், அவர்கள் நல்ல தெளிவான அமைதியான மனநிலையில்  நீர் பார்க்கப்படும் (water Divining) சமயத்தில் வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகம். அது எப்படி?.

நிலத்தடிநீரைக் கண்டுபிடிப்பதில் உள்ள அறிவியல்

Dowsing/ Divining

உங்கள் மனதிற்குள் சில கட்டளைகளை கொடுங்கள் "நீர் இருக்குமானால் தேங்காய் நிமிரட்டும்" என்பது போல். சில இடங்களில் உங்களை அறியாமலேயே தேங்காயை நிமிர்த்திவிடுவீர்கள். இங்கே கவனிக்க வேண்டியது தேங்காய் தானாக நிமிர்வதில்லை. உங்கள் ஆழ் மனதின் கட்டளைக்கு உட்பட்டு நீங்களே நிமிர்த்திவிடுவீர்கள்.

சரி இப்போது நிலத்தடிநீரை (ground water finding techniques) எப்படி பார்ப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.

ஒரு நூலில் ஒரு கூரான ஒரு பொருளைக்  கட்டி தொங்கவிடுங்கள் அது உலோகமாகவோ, மரமாகவோ,கல்லாகவோ, அல்லது வேறு எதுவாகவாயினும் இருக்கலாம். தரையில் உங்கள் நிலத்தின் வரைபடத்தை (முடிந்தால் கூகிள் மேப் மூலம் உங்கள் நிலத்தை புகப்படம்)  எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது மூச்சை நன்கு மெதுவாக இழுத்து மெதுவாக வெளியிடுங்கள் இப்படி ஒரு சில முறை செய்தபின் உங்கள் நில வரைபடத்தின் மீது நீங்கள் நூலில் கட்டிவைத்திருக்கும் பெண்டுலத்தை தொங்கவிட்டுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு  நீர் இருக்கும் இடத்தைக்காட்டு என்று மனதிற்குள் கட்டளை இடுங்கள். சிறிது நேரங்கழித்து ஏதேனும் ஒரு இடத்தில் உங்களை அறியாமல் நிறுத்தியிருப்பீர்கள். இப்போது கண்ணைத்திறந்து பாருங்கள். உங்களின் மன வலிமையின் அளவைப்பொருத்து நீங்கள் சரியான இடத்தை தெரிவுசெய்வீர்கள். 

இங்கே கவனிக்க வேண்டியது உங்கள் வரைபடத்தில் உள்ள எந்த இடத்திலும் நீர் இல்லையெனினும் நீங்கள் ஏதேனும் இடத்தைக்காட்டக்கூடும். எனவே உங்கள் வரைபடம் உங்கள் நில எல்லையைத் தாண்டி  பெரிய அளவில் எடுத்து அதில் பார்த்துவிட்டு பின்னர் படிப்படியாக சிறிய பகுதிக்கு வருவது நல்லது. பலமுறை முயன்று பார்த்து ஒரே இடத்தை உங்களால் தெரிவு செய்ய முடிந்தால் Water Dowsing/ Divining) அந்த இடத்தில் நீர் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. இதே முறையில் ஆழம், நீரின் தன்மை போன்றவற்றையும் அறியலாம்.

 எச்சரிக்கை. ஓரிருமுறை பார்த்த உடனேயே முடிவுக்கு வந்துவிட வேண்டாம்  இதைப்பற்றி விரிவாக அறிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்கள்



கருத்துகள் இல்லை: