சஞ்சீவி மூலிகைகள்

 வள்ளலார் கூறியுள்ள  சஞ்சீவி மூலிகைகள்  Sanjeevi herbs

 எச்சரிக்கை; இந்தப் பதிவு வள்ளலார் பற்றிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. சித்தர்கள் பலவற்றை மறைத்து சில குறிச்சொற்களுடன் கூறுவது இயல்பு. அதன் உட்பொருளை சரியாக அறியாமல் மேம்போக்கான பொருளைக் கொண்டு பார்க்கும்போது தவறான முடிவுகள் கிடைக்கும். எனவே அனுபவம் உடையவரிடம் கேட்டு தெளிந்தபின்னர் செயல்படுதல் அவசியம்.  

1. கறுப்பு நாயுருவி

கறுப்பு நாயுருவிக் கஷாயத்தை ஐந்து மாதத்துக் கர்ப்பிணிக்கு அடிக்கடி மூன்றுதர மீந்தால் - தசமதியாய் - அஞ்சு கடிகைக்குள் தத்துவ பூர்த்தியாய்ச் சுகப் பிரசவமாம்.

(வேறு குறிப்பு)

கறுப்பு நாயுருவிக் கஷாயம் 5 மாதத்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க, கொடுத்த ஐந்து நாழிகைக்குள் 10 மாதத்துப் பூர்ண கர்ப்பம் உண்டாய்ப் பிரசவமாகும்.2. குளிர்ந்த கொள்ளி (குளுந்த கொள்ளி) யென்பதைக் கசக்கிக் குக்குடாண்டத்திற்குக் கவசித்து இரண்டரைக் கடிகை மூடிவைத்தால், நவீனமான பார்ப்பு ஜனிக்கும்.


2.குளிர்ந்த கொள்ளி


குளிர்ந்த கொள்ளி என்னும் பச்சிலையைக் கசக்கிக் குக்குட அண்டத்தின் கீழும் மேலும் வைத்து மூடிய இரண்டரை நாழிகைக்குள் கரு முற்றிக் குஞ்சு பொரிக்கும்.

3. தீப்பூடு


தீப்பூடு நசுக்கி இறந்த கிளி முதலிய பறவைகளின் வலது காதில் வைக்க அவை பிழைக்கும்.

(வேறுகுறிப்பு)

தீப்பூடு பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் பிழைப்பான்.

4. முத்துப் பூண்டு


முத்துப்பூண்டுச் சாற்றை எல்லாப் பக்ஷிகளின் காதிலும் சிறுகச் சிறுக இரண்டரை நாழிகை பிழிய சீவிக்கும்.
(வேறுகுறிப்பு)

முத்துப் பூண்டுச் சாற்றை இறந்துபோன பக்ஷி எது ஆனாலும் அதன்மேல் சிறுகச் சிறுக இரண்டரை நாழிகை பிழிந்தால் பிழைக்கும்.

5. கருங்காந்தள்


கருங்காந்தளிலையைக் கசக்கி வெட்டுண்ட கைத்துண்டைச் சேர்த்து மேற்படி மூலிகையை யப்பிக் கட்டக் கை கூடும்.

(வேறுகுறிப்பு)

கருங்காந்தள் இலையைக் கசக்கி, வெட்டுப்பட்ட துண்டுகளைச் சேர்த்து, அவற்றோடு சேர்த்துக் கட்டி இரண்டரை நாழிகை வைத்திருந்தால், துண்டுகள் ஒன்றாய்ச் சேர்ந்து போகும்.

வலுவான, திடமான சரீரத்துக்கு வள்ளலார் கூறும் மருத்துவக் குறிப்பு 

கெட்டி மிளகு அரைகிலோ எடுத்துக்கொண்டு, அதைப் பேயன் வாழையின் கிழங்குச் சாற்றில் மூன்று நாள் ஊறவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் ஊறவைத்துப் பகலில் நிழலில் காயவைக்க வேண்டும்.

இந்த முறையைப் பின்பற்றி, வாழைக் கிழங்கின் சாறில் ஊறவைத்து, நிழலில் காயவைத்த மிளகை, அதன்பின் இளநீரில் மூன்று நாள், கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் மூன்று நாள், பொன்னாங்கண்ணி கீரைச் சாற்றில் மூன்று நாள், பசுங்கோமயத்தில் மூன்று நாள், பசும்பாலில் மூன்று நாள் எனத் தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காயவைத்து, தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, தினம் காலையில் ஐந்து மிளகுகளை உட்கொண்டால் வலுவான, திடமான சரீரம் அமையும். 

வள்ளலாரின் காயகல்ப மூலிகைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும் 

ரசவாதம் - தங்கம் தயாரிக்கும் முறைகள் 

கட்டுரைகளை தெரிவு செய்யவும் 


கருத்துகள் இல்லை: