பௌர்ணமியும் கடல் அலையும்

பௌர்ணமி அன்று கடல் அலை உயரம் அதிகரிக்க நிலவின் ஈர்ப்புவிசை காரணமா? புவியில் இருக்கும் நீரை ஈர்க்க முடிந்த நிலவால் அதன் அருகே சென்ற செயற்கைக்கோள்களை ஈர்க்க முடியாமல் போவதெப்படி?

relation between Big tidal and moon-vinganam.blogspot.com


நிலவு புவியின் ஈர்ப்புவிசையில் பத்தில் ஒரு பங்கு கொண்டது என்று படிக்கிறோம். இதனால் தான் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி ஸ்லோ மோஷனில் ஓடுவது போன்ற காட்சிகளை நாசா வெளியிட்டது. பௌர்ணமி அன்று கடலின் நீர் மட்டம் உயர நிலவின் ஈர்ப்புவிசை காரணம் என்றும் படிக்கிறோம். தன் பரப்பின்மீதுள்ள ஒரு பொருளை வேகமாக இழுக்க முடியாத ஒரு கோள் எப்படி லட்சக்கணக்கான மைல் தொலைவில் உள்ள புவியில் எடை மிகுந்த நீரை இழுக்க முடிகிறது? புவியின் எடை மிகுந்த நிலவிலிருந்து சற்று அதிக தொலைவில் உள்ள கடலின் நீரை இழுக்கும் சக்தி நிலவிற்கு உள்ளதெனில்,  வான்வெளியில் நிலவிலிருந்து சற்று குறைந்த  தொலைவில் உள்ள எடை/நிறை குறைந்த வாயுக்களை  நிலவு  தன்னை  நோக்கி ஈர்த்துவிடாமல் இருப்பது எப்படி ?

நிலவின் தொலைவிற்கும்  பௌர்ணமி, அல்லது அமாவாசைக்கும் தொடர்பு இல்லாதபோது, (அதாவது பௌர்ணமி அன்று நிலவுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொடர்பு மாறாதபோது)  பௌர்ணமி அன்று கடல் அலை உயரம் அதிகரிக்க நிலவின் ஈர்ப்புவிசை காரணம் என்பது எந்த அடிப்படையில் உண்மையாகிறது?

பௌர்ணமி அன்று கடல் அலை உயரம் அதிகரிக்க நிலவின் ஈர்ப்புவிசை காரணமா? புவியில் இருக்கும் நீரை ஈர்க்க முடிந்த நிலவால் அதன் அருகே சென்ற செயற்கைக்கோள்களை ஈர்க்க முடியாமல் போவதெப்படி? 

கடலோர நகரங்கள் நீரில் மூழ்குமா? https://vinganam.blogspot.com/p/will-cities-sink-into-sea.html

கருத்துகள் இல்லை: