Sittukuruvi
சிட்டுக்குருவியும் செல்பேசிகோபுரமும்
சிட்டுக் குருவிகளில் பலவகை உண்டு.
வீட்டில் வசிக்கும் சிட்டுக்குருவியை
அடைக்கலக் குருவி என்று அழைப்பதுண்டு இவை சுற்றிவரும் அழகே அழகு
கரும்புச் சிட்டு
கரும்புச் சிட்டு என்று ஒருவகை உண்டு இவை பொதுவாக கரும்பு வயல்களிலும்,
ஏரிகள் குளங்களில் காணப்படும் சம்புகளிலும்
காணப்படும். இவை மரங்களில் தொங்குகின்ற வகையில் கூட்டினை கட்டி வாழும். இவற்றை தூக்கனான்குருவி என்று அழைப்பதும் உண்டு
இவை பொதுவாக தென்னை பனை மரங்களில் அதிகமாக கூடுகட்டி வாழும். இவை கட்டும் கூடுகளை பார்க்க வியப்பாக இருக்கும்
இந்த மூன்று வகைக் குருவிகளையும் சில வருடங்களாக அதிகம் காணமுடிவதில்லை.
இதனால் இயற்கை ஆர்வலர்கள் பலவிழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இவை காணாமல் போனதேன்?
அடைக்கலக் குருவி அழிந்தது ஏன்?
வீட்டில் வசிக்கும் அடைக்கலக் குருவி மனிதனுக்கு எந்த தீங்கும்
விளைவிப்பதில்லை. இவை கூரை வீடுகளில் கீற்றுக்களுக்கு இடையே கூடுகட்டி/ஓட்டையிட்டு
வாழும் கைபேசி வந்தவுடன் நுண்ணலைகளால் பாதிக்கப்பட்டு
இவை அழிந்துவிட்டதாக பலரும் கூறுவதை பார்க்கமுடியும்
ஆனால் உண்மை என்ன?
கூரைவீடுகள் தகர,ஓட்டு வீடுகளாக மாற்றம் பெற்ற காரணத்தால் அடைக்கலக்
குருவிகள் கூடுகட்ட போதுமான வசதியின்றி போனது. ஓரிரு கூரை வீடுகளை நம்பியிருந்த குருவிகள் தொங்கும்
மின்விசிரிகளில் அடிபட்டன. மின்விசிரிகளுக்கு தப்பித்தவை மற்ற இடங்களில் கூடு கட்டின.
இவை பூனைகளுக்கும் பாம்புகளுக்கும். இரையாகிப்போகின. தொலைக்காட்சிப்
பெட்டிகளும் இவற்றிற்கு தொல்லையாகிப்போயின. வலசை போகும் பழக்கம் இவற்றிடம் இல்லை.
எனவே இவ்வகை அடைக்கல குருவிகள் அருகிப்போயின.
கரும்புச் சிட்டு (தூக்கனான் குருவி )
கரும்புச் சிட்டு பெரும் கூட்டமாக வாழும் இவை மனிதனால் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன.
இவை வலசை போவதுண்டு. நெல் கம்பு சோளம் போன்ற விவசாயத்தில் இவற்றின் பாதிப்பு மிக அதிகம். தகர டப்பாக்களை தட்டி
வெடிகளை வெடித்து மனிதனைப்போன்ற பொம்மைகளை அமைத்து இவ்வகை குருவிகளை
விரட்டுவதுண்டு.
சிட்டுக் குருவிகள் அழிந்ததேன்? அருகியதேன்?
கரும்புச் சிட்டுக்குருவிகள் புன்செய் விவசாயப் பகுதிகளில் இரைதேடிவிட்டு
நெற்கதிர் பால் பிடிக்கும் சமயங்களில் நன்செய் வயற்பகுதிக்கு உணவு தேடி சென்றுவிடும்.
கரும்புச் சிட்டு தோகைக்கு வெளியே கதிரை நீட்டிக்கொண்டிருக்கும்
பொன்னி, சீரக சம்பா, போன்ற நெல் ரகங்களையே விரும்பி அதன் பாலை பருகும். பொன்னி நெல் குலைநோயினால் அதிகம் பாதிக்கப்படவே ஆந்திர பொன்னி
போன்ற குட்டை நெல் ராகங்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஆம்பித்தன. குட்டை நெல் ரகங்களில் தோகை
கதிருக்கு வெளியே நீட்டியிருக்கும் இவற்றில் இறங்கி பால் பருகுவது இல்லை. இதுபோன்ற
நெல் ரகங்கள் அதிகம் பயிரிட ஆரம்பித்தபின் சிட்டுக்குருவிகளின் நடமாட்டம் குறைய ஆரம்பித்தது.
மழை குறைவினால் கோடை விவசாயம் கானல் நீரானதால் சிட்டுக் குருவிகளுக்கும் உணவு பஞ்சம்
ஏற்பட்டது
கரும்பு வெட்டுவதற்கு ஆள் கிடைக்காத சூழலில் கரும்பு வயல்கள்
ஒட்டுமொத்தமாக தீக்கிரையாக்கப்பட்டு எரியாமல் மிஞ்சியிருந்த கரும்புகள் வெட்டி ஆலைக்கு
அனுப்பப்பட்டன. இவ்வாறு கரும்பு வயல்கள் ஒட்டுமொத்தமாக
தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் அதில் கூடுகட்டியிருந்த சிட்டுக் குருவிகள் கூண்டோடு
அழிக்கப்பட்டன.
ஏரி , குளங்களில் நீர் வற்றியநிலையில் சம்புகளில் வசித்த சிட்டுக் குருவிகளுக்கும்
இதே நிலை
இந்த சூழலில் இந்தப்பகுதிகளில் வாசித்த சிட்டுக் குருவிகள் பெரும்பகுதி
அழிந்தன / அழிக்கப்பட்டன மிஞ்சியவை வலசை சென்றுவிட்டன
இவையே சிட்டுக் குருவிகள் அழிந்தமைக்கான காரணங்கள்
கடந்த ஆண்டு மழை ஓரளவிற்கு பொழிந்த காரணத்தால் தற்போது மீண்டும்
கரும்புச்சிட்டுகள் லட்சக்கணக்கில் மீண்டும்
வலம் வருகின்றன.
சிட்டுக்குருவியும் செல்பேசிக்கோபுரமும்
பலரும் செல்போன் கோபுரங்கள் வெளிப்படுத்திய மின்காந்த அலைகளே அல்லது கதிர் வீச்சே சிட்டுக் குருவிகள் அழிவிற்குக் காரணம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
இது ஒரு கருத்தேயன்றி ஆராய்ச்சி முடிவன்று.
மின்காந்த அலைகளே / கதிர் வீச்சே காரணம் எனில் தற்போது எப்படி கரும்புச்சிட்டுகள் லட்சக்கணக்கில் மீண்டும் வலம் வருகின்றன.
ஒரு சில கிலோமீட்டர் தொலைவுவரை மட்டுமே பயன்படும் வகையில் அமைக்கப்படும் செல்போன் கோபுரங்கள் வெளிப்படுத்திய
மின்காந்த அலைகள உயிரைக் கொல்லுமாயின், சில நூறு கிலோமீட்டர் தொலைவுவரை பயன்படும் வகையில், கடுமையான மின்காந்த அலைகளை வெளியிடும்
வானொலி நிலைய கோபுரங்களை கண்காணிப்பவர்கள் , பாராமரிப்பவர்களின் நிலை என்னவாயிருக்கும்?
சற்று சிந்திப்போம்?
இந்தக் கட்டுரை திருச்சி மாவட்டத்தில் சிட்டுக் குருவிகளை உற்று
கவனித்து வந்தவகையில் எழுதப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக