நகரங்கள் கடலில் மூழ்குமா?

Will cities sink into the sea?
பனிப்பாறைகள் உருகுவதால் பூமியின் நிலப்பகுதிகள் கடலினுள் அமிழும் வாய்ப்பு உள்ளதா?

A Sinking Statue Of Liberty Usa - Free photo on Pixabay
நகரங்கள் கடலில் மூழ்குமா?

சுற்றுச் சூழல் பாதிப்பினால் ஓசோன் மண்டலம் ஓட்டை விழுகிறது இதனால் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்கள் பூமியைத்தாக்கி புவியை வெப்பமடையச்செய்கிறது.  புவி வெப்பமடைவதால் துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. எனவே கடலின் நீர்மட்டம் உயர்ந்து பூமியின் தரைப்பகுதி கடலினுள் அமைந்துவிடும் அபாயம் உள்ளதாக பல எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. இதன் உண்மை குறித்து ஆராய்வோம்.
    

     துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுமா? 

   துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுமா? எனில், உருகும். ஆறுமாத காலத்திற்கு சூரியக்கதிர்கள் தொடர்ந்து விழுவதால் பனிப்பாறைகள் உருகும் இது இயல்பான ஒன்று. வருடா வருடம் நிகழும். ஆனால் மீண்டும் அடுத்த ஆறுமாத காலத்தில் பனி உருவாகிவிடும். 


       சில இடங்களில் கடலுக்கடியில் இருக்கும் வெந்நீர் ஓட்டம், திடீரென ஏற்படும் வெந்நீர் ஊற்றுக்கள் இவற்றால் அந்தப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகலாம். எனினும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. சரி ஒருவேளை ஏதேனும் காரணத்தினால் பெருமளவில் பனி உருகினால் என்ன நிகழும்?

பூமியில் சுமார் 79 விழுக்காடு நீரால்  சூழப்பட்டுள்ளதுமீதமுள்ள இருபத்திஒரு விழுக்காடு தரைப்பகுதி.. 

பூமியின் நிலப்பகுதி நெருப்புக் குழம்பின் மேல் மிதந்து கொண்டிருக்கிறது. இந்த பூமியின் நிலப்பகுதி பல துண்டுகளாக உள்ளது. புவியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் குறிப்பாக எரிமலைவிண்கல் மோதல்பெரிய சுரங்கங்கள் போன்ற காரணங்களால் இந்த தூண்டில் ஏதேனும் ஒன்று அதிக எடை பெறுமானால் அல்லது அழுத்தப்படுமானால் அதன் நிறைக்கு தகுந்தார்போல் மற்ற பகுதிகள் மேலே எழும்பும். இவ்வாறு பூமி எப்பொழுதும் தன்னை சரி செய்து கொண்டே இருக்கிறது இவ்வாறு சரி செய்வதால் ஏற்படுவதே நிலநடுக்கங்கள்.

    துருவப்பகுதியில் பனிக்கட்டி உருகி அதனால் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் எனில்அந்த அதிகரித்த கடற்பரப்பில் அழுத்தம் ஏற்பட்டு அந்த பகுதி சற்று அமிழும். இதற்கு இணையாக பூமியின் மற்ற பகுதிகள் சற்று மேலே எழுப்பி விடும். எனவேதான்கடலின் மட்டம் எப்பொழுதும் நிலையாக இருப்பது இல்லை. இது கடலோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நன்கு புரியும். சில நாட்களில் கடலின் நீர்மட்டம் அதிகரித்தும் சில நாட்களில் கடலின் நீர் மட்டம் குறைந்து காணப்படும்.
             
                இது ஒருபுறமிருக்க பூமி ஒரு முழுமையான உருண்டை வடிவிலோ அல்லது கோல வடிவிலோ இல்லை மாறாக ஒழுங்கற்ற உருவம் கொண்டுள்ளது. எனவே பூமியில் ஒரு இடம் பள்ளம் என்பதையோ அல்லது மேடு என்பதையோ நிர்ணயம் செய்வது பூமியின் ஈர்ப்பு விசைதான். 
      

   எனவே எவ்வளவுதான் பனிப்பாறைகள் உருகினாலும் பூமியின் தரைப்பகுதியின் அளவில் பெரும் மாற்றங்கள் நிகழாது. அப்படி ஒருவேளை ஏதேனும் தரைப்பகுதி கடலினுள் முழுகினால்புதிய நிலப்பரப்பு தோன்றும். இது போன்ற நிகழ்வுகள் வெகு அரிதாகவே நிகழும் ஆனால் ஒட்டுமொத்த நிலப்பகுதியானது கடலுக்குள் சென்று விடும் என்பது முற்றிலும் தவறானது.

மேலும் வாசிக்க 1.ஓசோன் ஓட்டை விழுமா?
                                    2. உலக வெப்பமயமாதல் உண்மையா?

கருத்துகள் இல்லை: