ஆறாம் அறிவு Sixth Sense
"மனிதனுக்கு ஆறறிவு விலங்குகளுக்கு ஐந்தறிவு" இது காலம் காலமாய் நாம் கூறிவருவது.
உண்மையில் மனிதனுக்கு ஆறறிவுதானா விலங்குகளுக்கு ஐந்தரிவுதானா? அலசுவோம் இங்கே. உங்களின் மேலான கருத்துக்களையும் கருத்துப்பெட்டியில் சேர்க்கலாம்.
பார்த்து உணரும் அறிவு , கேட்டு உணரும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு, நுகந்து உணரும் அறிவு, தொட்டு உணரும் அறிவு, இதோடு நல்லது கெட்டதை உணரும் அறிவு இப்படி மனிதனுக்கு ஆறறிவு என்று காலம் காலமாக பேசிவருகிறோம்.
ஆனால் மனிதனுக்கும் மேலும் சில அறிவுகள் உண்டு
பார்த்து அறியும் அறிவு
கேட்டு அறியும் அறிவு
தொட்டுப்பார்த்து/ தொடும் போது உணரும் அறிவு
சுவைத்துப் பார்த்து அறியும் அறிவு
நுகர்ந்து பார்த்து உணரும் அறிவு
சிந்திக்கும் அறிவு
இவையோடு
உள்ளுறுப்புகள் மூலம் உணரும் அறிவு (எ கா பசியை, தாகத்தை உணர்தல் )
சிலருக்கு ஏற்படும் "எதோ ஒன்று நடக்கவிருக்கிறது' என்பதை அறிவுறுத்தும் உள்ளுணர்வு சார்ந்த அறிவு.
இச்சை, எழுச்சி சார்ந்த உணர்வுகளை உணரும் அறிவு (துக்கம், சிரிப்பு, காமம் சார்ந்த உணர்வுகள், கிளுகிளுப்பு, புல்லரித்தல்)
இப்படி தொடர்கிறது
ஆனால் மேம்போக்காகப் பார்க்க ஆறறிவு மட்டும் புலனாகும்.
ஐந்தறிவு என்று நாம் கூறும் பல விலங்குகளுக்கும் பகுத்தறியும் அறிவு உண்டு.
உதாரணமாக வளர்ப்பு விலங்குகள் தனது நெருக்கமான மனிதனையும், மற்றவரையும் இனம் காண்கிறது. நாம் கூறும் விசயங்களை ஓரளவிற்கு புரிந்துகொள்கிறது
மழை வரும் காலத்தை முன்னறிந்து எறும்புகள் தங்களது முட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துகிறது.இது எறும்பின் பகுத்தறிவு
பறவைகளும், காட்டு விலங்குகளும் உணவு தடையின்றி கிடைக்குமா என்பதை முன்கூட்டியே உறுதி செய்தபின் இனப் பெருக்க செயல்களில் ஈடுபடுகின்றன. சில வலசை சென்றுவிடுகின்றன. இது பறவைகளின் பகுத்தறிவு
ஆனால் எது எப்படி இருப்பினும் மனிதன் பிற உயிர்களில் இருந்து மேம்பட்ட அறிவைக் கொண்டுள்ளான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் புதிய கண்டுபிடிப்புகளை செய்தல் இவற்றை மனிதன் மட்டுமே செய்வதாகத் தோன்றும். ஆனால் விலங்குகளுக்கு, எட்டாத சற்று தொலைவில் ஒரு தின்பண்டத்தை வைக்க, அதை எப்படி எடுக்கலாம் என பல விதங்களில் முயற்சிகளை செய்யும். இங்கேயும் மனிதன் தனித்துவம் கொண்டவன் எனக்கூறமுடியாது.
ஆனால் இந்த மேம்பாடு எந்த இடத்தில் என்பதை வரையறை செய்வதில்தான் குழப்பம்.
எனவே விலங்கினத்திற்கு ஐந்தறிவு, மனிதனுக்கு ஆறறிவு என்பது எல்லாம் அதிகம் சிந்திக்காதவர்களின் அல்லது மேம்போக்கான பேச்சு
விலங்கு பறவையினம் இவற்றிலிருந்து மாறுபட்டு மேம்பட்டு காணப்படும் மனித அறிவு சார்ந்த விஷயங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் கருத்துப்பெட்டியில் பதிவிடலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக