சளி இருமல் மூக்கடைப்பு சரியாக

சளி இருமல் மூக்கடைப்பு சரியாக எளிய மருத்துவ முறைகள்
To cure Cold Cough  and Congestion 


நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.

இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது. உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது. கட்டிபட்டுப்போன சளியை வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

மருந்துகள், உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சளியை வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர் ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும், மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியாலும் நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.உடலின் கழிவுகள் வெளியேற்றும் வரை சளி இருக்கும். அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக்  குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். துளசி இலையை மென்று அதன் சாரை விழுங்கினாலே சளி நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும்.

பொதுவாக இனிப்புசுவை சளியை அதிகரிக்கும். கசப்பு மற்றும் கார சுவை சளியைக் கட்டுப்படுத்தும். எனினும் கசப்பை அளவுடன் உட்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் சளியை அதிகரிக்கச்செய்யும்.  எனவே மலமிலக்கியை பயன்படுத்த சளி விரிவாக விலகும். விட்டமின் சி அதிகம் உள்ள பழங்களை சாப்பிட (நெல்லி,) விரைவில் சளி விலகும்.  இது தவிர சளிக்கு தீர்வு காண சில சுலபமான வழிமுறைகள்

பப்பாளி இலைக்கசாயம் நிலவேம்புக் குடிநீர் சளியின் மிக விரைவாகக்  கட்டுக்குள் கொண்டுவரும்

நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

கிராம்பு அல்லது மிளகாய் வாயில் அடக்கிவைக்க சளி, மூக்கடைப்பு சரியாகும்

சுண்ணாம்புடன் மஞ்சள் கலந்து குழப்பி மூக்கு நெற்றியில் பற்று இட மூக்கடைப்பு நீர்ச்சளி சரியாகும்

அதிமதுரப் பொடியை வாயில் அடக்கிவைக்க சளி கட்டுப்படும் மூக்கடைப்பு சரியாகும், இருமல் சரியாகும்

செரிமான பிரச்சினை இருப்பின் சளி அதிகரிக்கும் சீரகத்தை மென்று வாயில் அடக்க தீவிரம் குறையும்.

தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

சூட்டுக்கொட்டை மர இலைகளை அரைத்து ஆடை செய்து சாப்பிட சளி இருமல் விலகும்

வேப்பெண்ணையை துணியில் நனைத்து குச்சியில் சுற்றி தீபிடிக்கச்செய்து  அதை அனைத்தபின்னர் புகைவரும் அந்தபுகையை நுகர சளி தலைவலி விலகும்

கஸ்தூரி மஞ்சளை நெருப்பில் சுட்டு புகையை நுகர சளி விலகும்.

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.

சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.

நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும்.

பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.

வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

ஆடாதொடா இலை, வேர் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும்.

இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும்.

கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்து நெற்றி, மூக்கில் பற்றுப் போட்டால் மூக்கடைப்பு குணமாகும்

குப்பைமேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் தொண்டைக் கட்டு சரியாகும்.

பூண்டு சாறு எடுத்து அதில் வெல்லம் கலந்து குடித்தால் சளி, இருமல் குணமாகும்.

கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகவும்.

1 மேசை கரண்டி தேன் மற்றும் 2 மேசை கரண்டி எலுமிச்சை சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் 3 வேளை குடிக்க சளித்தொல்லை நீங்கும்.

1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சாப்பிட மார்புச் சளி நீங்கும். சீரகத்தை நன்கு பொடி செய்து பனங்கற்கண்டுடன் தினமும் 2 வேளை சாப்பிட வேண்டும். இது சளி இருமலை போக்கும்.

வல்லாரை சூரணத்தை தேன் கலந்து சாப்பிட்டு வர சளி இருமல் நீங்கும். கருந்துளசி இலைகளை 1 லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகுவது மட்டுமில்லாமல், அந்த துளசி இலைகளை மென்று முழுங்க வேண்டும்.

கற்பூரவல்லி இலை சாற்றை வெறும் வயிற்றில் குடிக்க சளி நீங்கும்.

பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம்.

சளி, இருமலை இயற்கை வழியில் நீக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்துக்கொள்ளவும். இதை அப்படியே மூடிவைக்கவும். 15  நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்கலாம்.

சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.

மிளகை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட சளி நீங்கும்.

தொண்டைவலி வந்துவிட்டால், உடனே வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்தொண்டை உறுத்தலை நீக்கும்சளியையும் குறைக்கும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், தண்ணீர் நன்கு கொதித்ததும், பொடிதாக நறுக்கிய வெற்றிலை, பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக நிமிடங்கள் கொதிக்க வைக்கவும் பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து வடிகட்டி அருந்த. பயங்கரமான சளி, இருமல் இருந்தாலும் ஒரே நாளில் சரி ஆகிடும்

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு அளவோடு பயன்படுத்த சளியின் தீவிரம் குறையும்

இதைப் படித்த உங்கள் அனுபவத்தில் சளியை மூக்கடைப்பை இருமலை சரிசெய்யும் எளிய மருத்துவ முறைகள் தெரிந்தால்  கருத்துப்பெட்டியில் பதிவிடுங்கள் இது பலருக்கும் பயனுள்ளதாக அமையும்

மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?

மூக்கடைப்பை சரிசெய்வது எப்படி?

கொரோனாவிளிருந்து விடுதலைபெற

கருத்துகள் இல்லை: