அயல் கிரகங்களில் உயிர்கள் - சாத்தியமா?
·
121லிருந்து 130 செல்சியஸ் வெப்பத்தை தாங்கி வாழக்கூடிய நுண்ணயிர்! (அதாவது
கொதிக்கும் நீரிலும் உயிர் வாழும் )
·
-58செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழும்
திறன் கொண்ட வண்டு
· -273 செல்சியஸ் வெப்பநிலையையும்
தாக்குபிடிக்கக்கூடிய ஒரு வகைப்புழு (சூரிய மண்டலத்தின் கடைஎல்லையிலும் அவ்வளவு குளிர் இல்லை) எனவே அயல்
கோள்களில் உயிர்கள் வாசிப்பது சாத்தியமே
பூமி அல்லாத பிற கோள்களில்/அயல் கிரகங்களில் உயிர்கள் வாசிக்கின்றனவா என்ற ஆய்வு நெடுங்காலமாகவே மேற்கொள்ளப்பட்டுவந்துகொண்டுள்ளது சிலகோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பொதுவாக அங்கு குளிர்ந்த தரை நீர் பிராணவாயு என்ற அடிப்படை காரணிகளை கொண்டு ஆராயப்படுகிறது. சூரியனிலிருந்து பூமியின் தொலைவு அடிப்படை முக்கிய காரணியாக கொள்ளப்படுகிறது.
ஆனால் உயிர்கள் வாழ நீர், உயிர்க்காற்று, நிலையான தரை தேவையா?
பொதுவாக உயிர்வாழ தேவையென கருதப்படும்
காரணிகளையும் அவற்றின் சரித்தன்மையையும் இங்கே ஆய்வது கட்டாயமாகிறது
முதல் கருதுகோள் : ஒவ்வொரு உயிர்க்கும் அடிப்படை
பிராணவாயு
பாறைக்குள் தேரை இருப்பதை
கல்லுடைக்கும் தொழிலாளிகள் அறிவர்
மாம்பழத்திற்குள் வண்டு வாழ்கிறது
அதற்க்கு சுவாசிக்க எப்படி பிராண வாயு கிடைக்கிறது
மலக்குடலில் வாழும் புழுக்களுக்கு
பிராண வாயு கிடைக்குமா?
பிராணவாயு அல்லாமல் பிரவாயுக்களை
சுவாசிக்கும் உயிர்களும் மண்ணில் வாழ்கின்றன
எனவே பிராண வாயு உயிர்கள்
அனைத்திற்கும் தேவை என்பது பொய்யாகிறது
அடுத்த கருதுகோள் : ஒவ்வொரு உயிர்க்கும் அடிப்படை நீர்
மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டிலிருந்து ஐந்து லிட்டர் நீரைப் பருகுகிறான் ஆனால் நன்செய் வயல்களில் காணப்படும்
நண்டுகள் கோடைகாலங்களில் சுமார் ஏழு மாதங்கள் நீர் இன்றி வாழ்கின்றன. கங்காரு எலி போன்று வருடம் முழுதும் நீர் பருகாமல் வாழும் உயிரினங்களும்
உண்டு மோஜாவே மற்றும் சோனோரான் பாலைவனங்களில்
காணப்படும் பல ஆமை இனங்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீர் பருகாமல் வாழும் திறன்
கொண்டுள்ளன
எனவே நீர் இல்லாமல் உயிர்கள் எதுவும்
வாழ முடியாது என்பது பொய்யாகிறது
அடுத்த கருதுகோள் : ஒவ்வொரு உயிர்க்கும் தகுந்த வெப்பநிலை
வேண்டும் அதாவது அதிக அல்லது குறைந்த வெப்பநிலையில் உயிர்கள் வாழமுடியாது
நாசா இயக்கிய செயற்கைக்கோள்கள் அறிவிப்புப்படி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 2003
ல் கிட்டத்தட்ட 157 ° F வெப்பநிலை பதிவாகியுள்ளது. அப்போது அங்கே Greater Bilby எனப்படும் ஒருவகை எலியினம் அங்கே வசித்து வந்தது
Strain 121 |
ஆதாரம் 1 animals
in heat deserts
அதேபோன்று Red
Flat Bark Beetle எனும் வண்டு -58செல்சியஸ் வெப்பநிலையில் உயிர் வாழும் திறன் கொண்டது
Water Bear or Tardigrade எனும் ஒரு வகைப்புழு -273 செல்சியஸ் வெப்பநிலையையும் தாக்குபிடிக்கக்கூடியது என்று
கண்டறியப்பட்டுள்ளது அதேபோன்று 150செல்சியஸ் வெப்பநிலையையும் தாங்கி
உயிர் வாழும் திறன் கொண்டது
ஆதாரம்:animals that can take the extreme heat and cold
எனவே ஒவ்வொரு உயிர்க்கும் தகுந்த வெப்பநிலை வேண்டும் அதாவது அதிக அல்லது குறைந்த வெப்பநிலையில் உயிர்கள் வாழமுடியாது என்ற கருதுகோளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிறது
எனவே ஒவ்வொரு உயிர்க்கும் தகுந்த வெப்பநிலை வேண்டும் அதாவது அதிக அல்லது குறைந்த வெப்பநிலையில் உயிர்கள் வாழமுடியாது என்ற கருதுகோளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிறது
அடுத்த கருதுகோள் உயிர்கள் வாசிக்க நிலம் அல்லது நீர் வேண்டும்
நுண்ணயிர்கள் பலவும் காற்றிலேயே மிதந்துகொண்டிருப்பதை அனைவரும் அறிவோம் எனவே உயிர்கள் வாசிக்க நிலம் அல்லது நீர் வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை.
Fungi in Space Station |
பூமியைப் பொறுத்தவரையில் எங்கு எந்த சூழல் நிலவுகிறதோ அந்த சூழலுக்கு தகுந்தாற்போல் அங்கு உயிரினங்கள் வசிக்கின்றன. இதேபோல் நமது சூரிய மண்டலத்தில் இயங்கும் மற்ற கோள்களிலும் அந்தந்த கோள்களின் சூழலுக்கேற்றாற்போல் உயிரினங்கள் வாழக்கூடும்.
பூமியைப்போன்ற தட்பவெப்ப நிலை கொண்ட கோள்கள் எங்கு இருக்கின்றன என்பதை தேடுவதை விட பூமிக்கு அருகில் உள்ள கோள்களில் உயிர்கள் வாழ்கின்றனவா? புவியில் மாறுபட்ட சூழலில் வாழும் உயிரினங்களில் எவை அடுத்த கோள்களில் வசிக்கும் சக்திகொண்டன என்ற ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
நமது உடலில் முகம், உள்ளங்கால், உள்ளங்கை அதிக வெப்பநிலை வேறுபாடுகளை தாங்கும் திறன் பெற்றிருக்கிறது. இதற்கான அடிப்படை செல்களை ஆராய்ந்து அதன் ஜீன்களை பிரித்து மற்ற இடங்களில் உள்ள தோல்களிலும் இணைக்க செய்தால் பூமியின் கடுமையான வெப்ப மாறுதல்களை மனிதனாலும் தாங்க இயலும்.
அடுத்த கட்டமாக கடுமையான சூழலில் உயிர்வாழும் திறன் கொண்ட உயிர்களின் ஜீன்களை பிரித்தெடுத்து மனிதனில் செலுத்தி அயல் கோள்களில் மனிதன் வசிக்கும் நாள் தொலைவில் இல்லை
உங்களின் மேலான கருத்துகளையும், விமர்சனங்களையும் கமெண்ட் பகுதியில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
3 கருத்துகள்:
Good
நல்ல தகவலுக்கு நன்றி...
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
கருத்துரையிடுக