பெருவெடிப்பு கோட்பாடு முரண்பாடுகள்

Contradictions in big bang theory :

பிக்பாங் கோட்பாடு முரண்பாடுகள்

 பிக்பாங் கோட்பாடுப்படிபெருவெடிப்பினால் சூரியனிலிருந்து பூமி உட்பட பிற கோள்கள் பிரிந்து சென்றன. அதாவது சூரியனின் சுழற்சி அதிகமானதால் மைய விலக்கு விசையின் காரணமாக சூரியனில் இருந்து பிறகோள்கள் வீசி எறியப்பட்டன. சரி இது சரியாக இருக்கும் பட்சத்தில் கீழ்காணும் கேள்விகளுக்கான பதில்களை தேடவேண்டியுள்ளது .   

  • அண்டவெளியில் எதிர்விசை இல்லாத போது குறிப்பிட்ட  தொலைவு சென்ற கோள்கள் அதை தாண்டி செல்லாமல் போனது ஏன்?
  • எதிர் விசை இல்லா அண்டத்தில் சுழன்று வரும் கோள்கள் சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படாமல் போவது எப்படி? 
  • ஒருவேளை சூரியனின் ஈர்ப்பு விசையினால் விலகிச் செல்லவில்லை என்றால் பிரிந்து சென்ற கோள்கள் வட்டமாகத்தானே சூரியனை சுற்றிவர வேண்டும். ஆனால்,  வட்டப்பாதையில்  சுற்றாமல்  நீள்வட்டப் பாதையில் சுற்றுவதன் காரணம் என்ன?
              1. Big bang effect-vinganam.blogspot.com
                Big Bang

  • புவியிலிருந்து விலகிச்சென்ற நிலவின் ஈர்ப்பின் காரணமாக பவுர்ணமி அன்று கடலின் அலை அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக மிகச் சிறிய ஒரு நிலவு பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது சூரியனின் தாக்கம் (ஈர்ப்பு ) புவியில் அதிகம் இருக்கத்தானே செய்யும்?  ஆக நண்பகல் வேளையில் கடல் அலை உயர்வாக இல்லாமல் போவது ஏன்? 
  • சூரியனின் ஈர்ப்பு விசையினால் கோள்கள் அதிகம் விலகிச் செல்லவில்லை என்றால் சில நாட்களில் சூரியனும் மற்ற கோள்களும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில்  அதாவது சூரியனின் ஒரேபக்கம் வரும் நிகழ்வு ஏற்படும் போது அனைத்து கோள்களும் ஒன்றாக சேர்ந்து விடாமல் தடுப்பது என்ன?
  • கோள்களின் சுழற்சியால் நிலாக்கள் உருவாகின என்றால் அந்த நிலவுகள் அனைத்தும் ஒரே திசையில்தானே சுற்ற வேண்டும்? வியாழன் உள்ளிட்ட சில கோள்களின் நிலவுகளில் சில  எதிர் திசையில் சுற்றுவது எப்படி?
  • பெரிய எட்டுக் கோள்களை சூரியன் தனது வசம் தனது ஈர்ப்பு விசையால் தக்கவைத்துக்கொள்கிறது என்றால் பூமியை விட்டு தொலைவு சென்ற சிறிய விண்கலங்கள் (செயற்கைகோள்கள்)  சூரியனால் ஈர்க்கப்படாமல் போவது ஏன்?
  • ஒருவேளை சூரியன் உள்ளிட்ட பிற வான்பொருட்களின் (பிறகோள்களின்) தாக்கமின்றி பூமி (கோள்கள்) சூரியனை சுற்றி வருகின்றன எனில்  பெரிய விண்கற்கள் புவியில் மோதியபோது அவை புவியின் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு  தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. (காரணம் ஒருவருடத்திற்கான கால அளவிலோ, நாளுக்கான மணி அளவிலோ மாற்றம் இல்லை )
  • சூரியனின் ஈர்ப்பு விசையால் கோள்கள் வெளியே அதிகம் விலகிச் செல்லவில்லை எனில் அமெரிக்கா அனுப்பிய வாயேஜர் விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு விலகிச் செல்வது எப்படி? சூரியனை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய Parker Solar Probe சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனில் விழுந்து விடாமல் இருப்பது எப்படி?
  • ஒவ்வொரு கோளுக்கும் ஈர்ப்புவிசை உண்டு இது தொலைவு செல்ல செல்ல குறையும். மாறாக நின்றுவிடாது என்று கூறப்படுகிறது நிலவும் பூமியும் அருகருகே உள்ளன. பூமியும் நிலவும் ஒன்றுக்கொன்று ஈர்த்துக்கொள்கிறது. (இங்கே மையவிலக்குவிசை இருக்கவேண்டுமானால் ஒரு மையப் புள்ளி இருக்கவேண்டும்.)  அவ்வாறிருக்க இரண்டும் ஒன்றாக சேராமல் இருப்பது ஏன் 

  • சூரியனைச் சுற்றி காந்த மண்டலத்தால் ஆன நிலையான பாதை


  • எனவே சூரியனை கோள்கள் சுற்றி வருவதற்கு சூரியனின் ஈர்ப்புவிசை காரணம் என்னும் வாதம் பொருத்தமாக இல்லை மாறாக நிலையாக அமைக்கப்பட்ட ஒரு பாதை அதில் கோள்கள் உருண்டுகொண்டிருக்கின்றன. அந்தப் பாதை எதோ ஒருவித காந்த கண்ணுக்கு புலனாகா ஒருவித மண்டலத்தால் ஆகியிருக்கக்கூடும்.
  • மேலும் வாசிக்க பௌர்ணமியும் கடல் அலையும்

கருத்துகள் இல்லை: