காயகல்ப மூலிகைகள்/மருந்துகள்

 Medicine to strengthen/Healthy body

காயகல்ப மூலிகைகள்/மருந்துகள்  

நம் உடலின் செல்கள்அவ்வப்போது அழிந்து பின்னர் புதிய செல் உருவாகிக்கொண்டே இருக்கும். வயது ஆக ஆக இந்த புதுப்பிக்கும் செயல் குறைந்துவிடும். இதுவே மூப்பு தோற்றத்திற்கு அடிப்படை. சில தாவரங்கள் பொதுவாக உடலின் அனைத்துப் பகுதிகளிலும் செல் அழிவை தடுத்து அல்லது புதிய செல்களை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய  தன்மை பெற்றிருக்கும். சில தாவரங்கள் பொதுவாக உடலின் குறுப்பிட்ட பகுதிகளில் உள்ள செல்களை  மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய  தன்மை பெற்றிருக்கும். இவற்றை காயகல்ப மூலிகைகள் என்று சித்தர்கள் குருப்பிட்டுள்ளனர். இவற்றை இனம் கண்டு பயன்படுத்த நல்ல பலன்களைப் பெறமுடியும். 

உடலின் இறந்த செல்களை  மீட்டெடுக்கும் சித்தர்களின் காயகல்ப மூலிகைகள், மருந்துகள்


காயகல்பம் 

காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயுறாது நல்ல நிலையில் வைத்துக்கொள்வது என்றுபொருள். ஆக காயகல்பம் என்றால் உடலை சுத்தி செய்தல் எனவும் கொள்ளலாம். 

காயகல்பம் = காயம் -உடம்பு கற்பம்-உறுதி செய்தல் என்றும் கூறப்படுகிறது.  

சித்தர் இலக்கியங்களில் காணப்படும் காயகல்ப மூலிகைகள்

பல சித்தர்களும் வெவ்வேறு மூலிகைகளை காயகல்ப மூலிகைகளாகக் கூறியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம். 

"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்

கோலை ஊன்றி குறுகி நடப்பவன்

கோலை வீசி குலுக்கி நடப்பனே! "

காலை உணவுகளில் இஞ்சியை சேர்ப்பதும், நண்பகல்  உணவில் சுக்கினை சேர்ப்பதும், மாலையில் கடுக்காயை சிறிது சாப்பிடுவதாலும் முதுமையை தள்ளிப்போடமுடியும். குறைந்தபட்சம் ஒரு மண்டலம் (மண்டலம் என்பதற்கு 40, 42,45,48 நாட்கள் என பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன எனவே அதிகபட்சமான 48 நாளை கணக்கில் கொள்வோம் )  அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து உண்டுவரவேண்டும். 

 போகரின் காயகல்பம் 

போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடல் -

"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி 
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு 
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி 
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம் 
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு 
18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு 
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு 
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி 
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு 
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு 
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி 
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு 
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும் 
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும் 
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும் 
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும் 
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி 
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும் 
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும் 
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி 
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடல் வரிகளில்  நாற்பத்தைந்து கற்பக மூலிகைகள் கூறப்பட்டுள்ளது இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களுக்கு இறப்பு தள்ளிப்போகும். அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்; முடி நரை தள்ளிப்போகும்; தோல் வனப்புறும் ;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம் என்று கூறுகிறது. 

வள்ளலாரின் காயகல்பம் 

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து தேவை ஏற்பட்டால் சர்க்கரை கலந்து பருகிவர பல நோய்களும் நீங்கி உடல் வளம்பெறும். இது வள்ளலாரின் வழி 

இவ்வாறு சாப்பிட கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.பல  நோய்களும் குணமாகும்.என்று கூறப்படுகிறது.  வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.

வள்ளலாரின் சஞ்சீவினி மூலிகைகள் குறித்து தெரிந்துகொள்ள  இங்கே அழுத்தவும் 

ஔவையார் காய கல்பம்

வெண்தாமரை பூ இதழ் 840 கிராம்

குப்பைமேனி  700 கிராம்

தும்பை சழூலம் 560 கிராம்

கரிசாலை 300 கிராம்

செருப்படை 280 கிராம்

இவற்றை நிழலில் உலர்த்தித் தனித்தனியாக இடித்துச் சூர்ணம் செய்து சீசாவில் பத்திரப்படுத்தவும்

வேளைக்கு ஐந்து கிராம் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு சீனக் கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பசுவின் பால் சுமார் 175 மி. லிட்டர் சாப்பிடவேண்டும் இவ்விதம் காலை மாலை 48 நாட்கள் (ஓருமண்டலம்) சாப்பிடவேண்டும்.

இந்தக் காயா கல்ப மருந்தைச் சாப்பிடும்முன் பேதிக்குச் சாப்பிட்டு குடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பத்தியம்

மருந்து முடியும்வரை பாலுஞ்சாதம் தவிர எதுவும் கூடாது மலைவாழை  சேர்த்துக்கொள்ளலாம்
அதிக அலைச்சல் கடும் வெயிலில் போதல் 'மழையில் நனைதல் கூடாது.  மூன்று மாதம் வரை உடலுறவு  கூடாது இவ்விதம் சாப்பிட்டு வந்தால்இளமைப் பொலிவு ஏற்படும கபரோகங்கள் அணுகாது. மன அமைதி கிடைக்கும் 

எச்சரிக்கை :  சித்த மருத்துவ பாடல்களுக்கான சரியான விளக்கம் தமிழ் பேராசிரியர்களைவிட  சித்த மருத்துவர்களுக்கே நன்கு புலப்படும் காரணம் குறிசொற்கள். எனவே அனுபவம் மிக்க சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்துகளை தயாரிப்பது பயன்படுத்துவது நல்லது. 

 கொங்கணர் கற்பம் 

சுகமாக காயத்தில் வழலை வாங்கப
பேனப்பா ஆவின் நெய் படிகாலுக்குள் .
பேரான கையான்சார் அரைப்படிதான்
நானப்பா மெழுகுபதம் தன்னிலேதான்
நறுநெய்வடி கலசத்துட் சொலலகேளே
-கொங்கணர் கற்ப்பம் 100 பாடல் 57

வெல்லுகிறேன் என்ற மிளகு தானே
மீறாமல் லாரை களஞ்சி பொடித்துக்கொண்டு
செல்லும் பூவழலை பணவேடையும் கூட்டி
சிறப்பாக வடிகலசம் தான்னில் போடு.
-பாடல் 58

நாட்டமுடன் சுகழினையிலே மனதை நாட்டி
நலமாக மேலவாசல் கண்டத்து ஊதி
மாட்டடா பெரு விரலை நெய்யில் தோய்த்து
வலஞ்சுத்தி உள்ளேற்று வாசி ஊதி
கலட்டடா கருவழலை வழலை வாங்கு
-பாடல் 59

தாங்கியபின் இகவேன்நீர் விட்டு விட்டு
சலக்கட்டை யுறிஞ்சி கொப்பளிப்பாய்
பாங்குடனே மண்டலந்தான் செய்யும்போது
படுபாவி கண்டநஞ்சு கொல்ல பார்க்கும்
ஓங்கியே கத்தலழன் சாருதன்னை
ஓகோகோ கருவிட்டு சொல்லகேளு
-பாடல் 60

கேளப்ப தர்சனையும் மத்திமையும் கூட்டி
கேடியான தத்துவங்கள் தளர போட்டு
வாளப்பா பாவை போல் இருந்து கொண்டு
வாகாக கண்டத்தை வசைத்து வாட்டு
நாளப்பா தினந்தோறும் மிது போல்செய்து
நலமாக பின்னங்கே வழழை வாங்கே
-பாடல் 60

பேனுநீ இந்நீரில் கடுக்காய் மையை
பிதற்றாமல் கரைத்துடனே உள்ளே கொள்ளு .
வேணிநீ கொண்டபின்பு பர்ப்பமெல்லாம்
விறேசிக்க லச்சியத்தில் மேவி யூது
-பாடல் 62

ஆட்டையிலே கண்ட நஞ்சு கூமுட்டை போல்
அப்பனே அகன்று ஆரோக்கியமாகும் .
-பாடல் 64

பாடல்களின் பொருள் மற்றும் வழலை வாங்கல் செய்முறை

கரிசாலை நெய்

கரிசாலை என்ற வெள்ளை பூ பூக்கும் கரிப்பான் என்ற மூலிகை எங்கும் கிடைக்கும் அதை கழுவி தண்ணீர் காய்ந்ததபின், அரைத்து விழுதை எடுத்து  பிழிந்து சாறு எடுக்கவும் . கரிசாலை சாறு ஒருபக்குடன் அரைபங்கு நெய் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும். அனல் அதிகம் இல்லாதவாறு  எரிக்கவும் . சிறிது நேரத்தில் தண்ணீர் சத்து வற்றி மெழுகு போல்வரும் . முருகவிடகூடது . . 5கிராம் மிளகை தூள் செய்து இந்த கரிசாலை நெய்யில் சேர்த்து கிண்டி இறக்கவும் . . கரிசாலை நெய் பயன் பாட்டுக்கு தயார் .

கரிசாலை நெய் பயன்படுத்தும் முறை

கரிசாலை  நெய்யை கட்டை விரல் வெள்ளை பகுதியில் ரேகைக்கு மேல் உள்ள பகுதி முழுவதும் தடவவும் . வாயை நன்றாக திறந்து கரிசாலை நெய்யை அண்ணாக்கின் மேல்பகுதியில் தடவவும் . அங்கு கட்டை விரலால் அழுத்தி இடவலமாக(கையை ) சுற்றவும் . ஒரு நிமிடம் சுற்றினால்  தலை, தொண்டை, மார்பில் இருக்கும் சளி வெளியேறும். இது வழ வாழபாக இருப்பதால் வழலை என்று பெயர் . இப்படி வழலை வெளி வந்தபின் வெது வெதுப்பான நீரால்  கொப்பளிக்கவும்.  இவ்விதம் நான்கு முறை செய்யவும். ( இதை சிவா வாக்கியர் மூலாதாரத்தில் முளைக்கும் கோரையை தினம் நான்ங்குகட்டு அறுத்து எடுக்கவேண்டும்.. இதனால் கிழவன் பாலனாவான் என்று மறை பொருளாக சொல்கிறார்) இந்த நெய்யை ஒரு ரூபாய் வட்டம் அளவு சாப்பிட்டு நீர் அருந்தவும்..

கற்றாழை கற்பம்.

கத்தாழை கற்பம் விஷத்தை முறித்து மலமாகவும் மூத்திரமாகவும் வெளியேற்றும். இது சித்தர் அறிவியல்.

செய்முறை.

சோற்று கத்தாழை மடலில் இரண்டு அங்குலம் தோல் சீவி அதிலிருக்கும் சோற்றை எடுத்து அதில் ஒரு சிட்டிகை மிளகை சேர்க்கவும் நடுவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து கொள்ளவும் . அதன் வெள்ளை பகுதியில் கத்தாழை மிளகு கூழல் தடவவும் . வாயை நன்றாக திறக்கவும் . இந்த கத்தாழை கூழ்தேய்தத விரல்களை தொண்டைகுள் அடிபகுதிக்கு செழுத்தவும். கத்தாழங் கூழை தொண்டை அடிப்பகுதியில் தடவி விரல்களை (கையை )முன் பின்னாக அசைத்து நன்றாக தேய்க்கவும்.மீதம் இருக்கும் கத்தாழை கூழை சாபிடவும்.

கடுக்காய் கற்பம்

கத்தாழை முறித்த விசத்தையும் முறிக்காத விசத்தையும் கடுக்காய் முறித்து மலம் , வாயு , குடல் சளி வழியாக வெளியேறும்.

செய்முறை

டுக்காய்க்கு கொட்டையில் விஷம். அதை போக்க கடுக்காயை பாலில் வேகவைத்து எடுத்து கொள்ளவும். அதை வெயிலில் காயவைக்கவும். விஷம் நீங்கிவிடும். இது சுத்தி செய்த கடுக்காய். இதை கொட்டையுடன் உடைத்து மிக்சியில் அரைத்து பொடிசெய்யவும் 

கத்தாழை உண்டபின் முக்கால் ஸ்பூன் கடுக்காய தூளை ஒருடம்ளர் நீரில் கலந்தது குடிக்கவும். இவ்விதம் நாற்பது நாள் செய்யவேண்டும், அப்பொழுது மலம் வயிற்றை கலக்கி வெளியேறும்  ஆகையால் கழிப்பறை அருகில் இருக்கும் படி பார்த்து கொள்வது நல்லது. அதிகமாக வெளியேறினால் இளநீர், நீர்த்த பால் நிறைய குடிக்கலாம் . பால் சோறு சாப்பிடலாம்.

இந்த மூன்று கற்பத்தை முடித்தால் உடல் புத்துணர்வு பெரும். வாசி நிற்கும். பல நோய்கள் நீங்கும். குறிப்பாக செல்கள் புதிப்பிக்கப்படும். ஆயுள் கூடும். இளமை பெருகும். இதுவே மூலத்தில் முளைத்து வரும் கோரையை அறுத்தல் என்று கூறப்படுகிறது. 


கட்டுரைகளை தெரிவு செய்யவும் 

கருத்துகள் இல்லை: