முதலில் உருவானது எது?

பஞ்சபூதங்களில் முதலில் உருவானது எது?

 நிலம்நீர்நெருப்புகாற்றுவானம். இவை பஞ்சபூதங்கள் என அழைக்கப்படுகின்றனஇந்த ஐந்தில் எது முதலில் தோன்றியிருக்கும்?



    நீங்கள் பைபிள் -ஐ நம்புபவர் எனில் , "கடவுள் நீரின் மீது அசைவாடிக்கொண்டிருந்தார்" என்கிறது பைபிள். எனவே நீர் தான் முதலில் தோன்றியது. 

    இங்கே நீர் என்பது இரண்டு வித அணுக்களின் சேர்க்கை (hydrogen +oxygen) என்கிறது அறிவியல். எனவே காற்றுதான் முதலில் தோன்றியது.

    ஓம் என்ற ஒலியிலிருந்து உலகம் தோன்றியது என்பதை நம்புவராக இருந்தால்காற்று தான் முதலில் தோன்றியது என நம்பத்தோன்றும். ஏனெனில் காற்று இருந்தால்தான் ஒலி உருவாகும் /பரவும். எனவே காற்றுதான் முதலில் தோன்றியது.

    உலகத்தின் முதலில் தோன்றியது அல்லது என்றும் இருப்பது இறைவன் என்பதை நீங்கள் நம்பினால், வள்ளலார் இறைவன் ஒளிவடிவானவர் என்கிறார். எனவே ஒளியே முதலில் தோன்றியது.

    ஒன்றுமே இல்லாத போது ஒளி தோன்றாது. எனவே பருப்பொருள் (அணு) இருந்திருக்க வேண்டும். அணுப்பிப்போபிணைப்போ நடைபெற்றிருந்தால் மட்டுமே ஒளி தோன்றியிருக்கும். எனவே மண் (அணு) தான் முதலில் தோன்றியது.

    ஆனால் ஒன்றுமே இல்லாத ஒன்றிலிருந்துதான் ஒன்று (அணு) தோன்றியிருக்கவேண்டும். அது தோன்றுவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டிருக்கும் எனவே ஆகாயம் தான் (வெற்று வெளி) முதலில் தோன்றியிருக்கவேண்டும்.

    ஆக வெளியிலிருந்து (ஆகாயம்)  அணு (மண்/காற்று ) தோன்றியபின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட அணு மோதலில் ஒளி தோன்றியிருக்கும். 

    எனினும் ஆகாயம் என்பதற்கு "வெறுவெளி" என்னும் பொருளை விடுத்து, "அண்டவெளியின் ஈர்ப்புவிசை"எனப் பொருள் கொண்டால் ஆகாயம் முதலில் தோன்றியதாகக் கொள்ளமுடியாது.  

    அப்ப எதுதான் முதலில் தோன்றியது? உங்கள் கருத்தைப் பதிவிடுங்களேன் 

    ஆனால் உயிர் தோன்றலின் போது, புரதத்தின்(மண்) மீது குறுப்பிட்ட அளவு வெப்பமும், ஈரமும், அதிர்வும் (sound), காற்றும் பினையும்போது அங்கே உயிர் (ஆகாயம்) இணைகிறது அல்லது பிறக்கிறது. எனவே உயிர் பிறக்க முதற்காரணமாக மண் அமைகிறது.    

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கல் தோண்றிய பிறகுதானே மண்தோன்றியது ! எப்படி மண் முதலில் தோண்றியிருக்க முடியும்? அத்த கல் எப்படி வந்தது என ஆராயுங்கள் ! பெரு வெடிப்பை கூறலாம் , அந்த பெருவேடிப்பிற்க்கு முன் அவு என்னவாக இருந்தது ?

Edward Packiaraj சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Edward Packiaraj சொன்னது…

இங்கே மண் என்பது மண் தத்துவத்தைக் கொண்ட அனைத்தையும் குறிக்கும். அதாவது பாறை, உலோகங்கள் ....