நீரிழிவிற்கு நிரந்திரத்தீர்வு

style="text-align: center;">நீரிழிவை சர்க்கரை நோயை (diabetes) முற்றிலும் குணப்படுத்தும் அதிசய மூலிகை (பச்சிலை) சிறுகுறிஞ்சான் 

சர்க்கரை நோய் -மறைக்கப்படும் உண்மைகள், எளிய மருத்துவ முறைகள் 

  சர்க்கரை நோய்/ நீரிழிவு  இதை நிரந்திரமாக தீர்க்க இயலும். அல்லது கட்டுப்பாட்டில் வைக்க இயலும். அதற்கான மூலிகைகள், பயிற்சிகள், உணவுமுறைகள், பழக்கவழக்கங்கள் குறித்தது இக்கட்டுரை 

சர்க்கரை நோய்க்கு அற்புத மருந்து

இந்தக்கட்டுரை அண்மையில் நான் சந்தித்த இந்திய அரசின் மூலிகை ஆராய்ச்சி மைய இயக்குனர் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது 

சர்க்கரை நோய்(diabetes) எனப்படும் நீரிழிவு நோய். இது நிறைய மருத்துவரை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. பலபேரை மாய்த்துக்கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கபட்டோர் நிறையபேர். என்பதைவிட பாதிக்கப்பட்டுள்ளதாக தவறாக நினைத்துக்கொண்டு மருந்துகளை தேவையின்றி சாப்பிட்டுக்கொண்டிருப்போர் அதிகம். இது  தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஒருவரின் கருத்து 

சர்க்கரை நீரிழிவு நோய்-மறைக்கப்படும் உண்மைகள், எளிய மருத்துவ முறைகள்

சர்க்கரை நோயை/அளவைக் (diabetes) கண்டுபிடிக்க இதுவரை சரியான கருவி கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரே குருதி மாதிரியை வெவ்வேறு ஆய்வகங்களில் கொடுத்தால் வெவ்வேறு முடிவுகள் தருவார்கள். அதுமட்டுமல்ல ஒருவருக்கு ஒவ்வொரு நேரத்திலும் சர்க்கரையின் அளவு வெவ்வேறு அளவில் இருக்கும்.  (இந்தத்தகவல் திருச்சியில் உள்ள பிரபல சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை நடத்திய இலவச மருத்துவ முகாமில் நோயாளி ஒருவரின் கேள்விக்கு சிறப்பு மருத்துவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் )

சர்க்கரை நோய் என்பது ஒரு ஏமாற்று வேலை என்கிறார் இந்த மருத்துவர். 




  சர்க்கரை நோய் -அறிகுறி  

  ஒருவருக்கு அடிக்கடி தாகமெடுத்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ, அத்துடன் உடல் மெலிவு ஏற்பட்டாலோ அவருக்கு சர்க்கரை நோய்/நீரிழிவு நோய்  இருக்குமென்று சந்தேகப்படலாம்.

         நல்லமுறையில் நடமாடிக்கொண்டிருந்த பலர் தவறான ஆய்வகக் கணிப்பினால் சர்க்கரை உள்ளது என மருந்து சாப்பிட உடல் சோர்வுற்று சிலமாதங்களில் இறந்தோர் பலர்.

நீரிழிவு ஏன்? எப்படி?

கோதையர் கலவி போதை

கொழுத்தமீ னிறைச்சி போதைப்

பாதுவாய் நெய்யும் பாலும்

பரிவுட ணுன்பீ ராகில்

சோதபாண் டுருவ மிக்க

சுக்கில பிரமே கந்தான்

ஒதுநீ ரிழிவு சேர

உண்டென வறிந்து கொள்ளே

உடலுறவில் அதிக அளவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி, நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தல்  போன்ற காரணங்களால்  இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். 

நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் (பீட்டா செல்) இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. என்கிறது நவீன அறிவியல் 

  சர்க்கரை நோய் -காரணங்கள் 

       சர்க்கரை நோய்க்கு | நீரிழிவிற்கு (diabetes)மிக முக்கிய காரணம்  தோல் நோய் சுவாச  நோய் உள்ளிட்ட சில முக்கியமான தருணங்களில் அலோபதி மருத்துவர்களால் தரப்படும் steroid மருந்துகள்.

        இந்த மருத்துவர் ராசியானவர் ஒரு ஊசி போட்டால் போதும் உடனடியாக நோய் பறந்துவிடும் என்ற பெயர் பெற்ற மருத்துவர்களில் பெரும்பாலானோர்  steroid மருந்துகளை பயன்படுத்துகின்றனர் 

    இது இப்படியிருக்க இன்று தங்களை சர்க்கரை நோயாளிகளாக (sugar patients) நினைத்துக்கொண்டிருக்கும் பலருக்கும் உண்மையில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் (diabetes) இல்லை என்பது உண்மை.

   சர்க்கரை நோய் - மருத்துவமுறைகள் 

 பொதுவாக துவர்ப்பு சுவை சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாக உள்ளது எடுத்துக்காட்டாக நாவற்கொட்டைஆவாரம் பூமாங்கொட்டை பருப்புகடுக்காய்ப் பொடி இவற்றை அளவோடு உண்ணவேண்டும். நெல்லிச்சாறு, அருகம்புல் சாறு உள்ளிட்ட குருதியை சுத்தப்படுத்தும் உணவுகள்/மருந்துகள் சர்க்கரை நோயை (diabetes) கட்டுப்படுத்தும்

வர்ம மருத்துவத்தில் உறுமிக் காலம், வாயுக்காலம். நங்ஙனாப்பூட்டு, ஆமைக் காலம் போன்ற வர்மங்கள் சர்க்கரைநோயை தீர்க்க பயன்படுகின்றன.

     மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக நல்லது  மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நாளடைவில் நீரிழிவு (diabetes) ஏற்பட மிக அதிக வாய்ப்பு உண்டு. இரவில் கோதுமையால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பதுபழங்களை உண்ணுவது மலச்சிக்கலை சரிசெய்யும்எனினும் இது வெகுசிலருக்கு வேலை செய்வதில்லை
    சூடான இடங்களில் வேலைசெய்வோர், கணினியில் அதிக நேரம் செலவிடுவோர், வாகன ஓட்டிகள் போன்றவர்களுக்கு இரவில் கண் எரிச்சல் கண் பொங்குதல் ஏற்படுவதுண்டு. இதனால் தூக்கம் பாதித்தல் அதன் பின்விளைவாக மலச்சிக்கல் அதன் பின்விளைவாக நீரிழிவு (diabetes) ஏற்பட வாய்ப்பும் உண்டு. இவ்வாறான பிரச்சினை உள்ளவர்கள் இரவு படுக்குமுன் ஒரு கேரட் சாப்பிட்டுவிட்டு படுக்க கண் எரிச்சல் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும் மேலும் வாசிக்க மலச்சிக்கலை தீர்ப்பது எப்படி?

சர்க்கரை நோய்க்கு பயிற்சிகள்     

பொதுவாக நெஞ்சின் அடிப்பகுதி வயிற்றின் மேற்பகுதி அழுந்தும் வகையில் செய்யப்படும் வேலைகள், ஆசனங்கள்பயிற்சிகள் சர்க்கரை நோயை சரிசெய்யும். 

சர்க்கரை நோய்க்கு உணவு முறை 

        உணவிற்கு பின்னர் வெற்றிலை (தாம்பூலம் தரித்தல்) போடுபவர்களிடையே சர்க்கரை நோய்(diabetes)மிக அரிதாகவே காணப்படுகிறது. அளவாக மது அருந்துபவர்களிடமும் சர்க்கரை நோய் அதிகம் காணப்படுவதில்லை. எனவே உணவை நல்ல முறையில் செரிக்க உதவும் பொருட்களை உணவில் சேர்ப்பது நலம். 

நீரிழிவு நோய்க்கு நிரந்திர தீர்வு - சர்க்கரைக் கொல்லி



சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்க்கு நிரந்திர தீர்வு - சர்க்கரைக் கொல்லி சிறுகுறிஞ்சான் ஜிம்னிமா herbal medicine for diabetes


 இந்திய அரசின் மூலிகை ஆராய்ச்சி மைய இயக்குனர் அவர்கள் தனது  அனுபவத்தில் செய்து பார்த்து கூறிய தகவல் 

சிறு குறிஞ்சான் (ஜிம்னிமா)  மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். இதன் இலைகளில் ஜிம்னீமிக் அமிலம், குர்மாரின் மற்றும் ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுகிறது.

 சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பானில் ஜிம்னீமா தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா இலைகள் பெரிதும் பயனுள்ளவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 சர்க்கரைக் கொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சான்  இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 சிறுகுறிஞ்சான் இலைகள். நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஜிம்னீமிக் அமிலம் சர்க்கரைக்கான ஆசையினை கட்டுப்படுத்துகிறது. நாவிலுள்ள உணர்ச்சி மொட்டுக்களை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்கிறது. மேலும் கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.

டிரைகிளிசரைடு ஆகியவற்றின் அளவைக் குறைப்பது மட்டுமன்றி, நல்ல கொழுப்பான H.D.L. ன் அளவை அதிகரிக்கவும் செய்கிறது. ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்து மாரடைப்பு ஏற்படுவதை  தடுக்கிறது.

.சிறுகுறிஞ்சான் இலையை தினமும் ஒரு இலை சாப்பிட்டுவர, நீரிழிவிற்கு நிரந்தரமாக குட் பை கூறமுடியும். இது சர்க்கரை நோய் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து 100 நாட்கள் கூட ஆகலாம்  

மேலும் வாசிக்க 

மலச்சிக்கலை தீர்ப்பது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததேன்?

உடலை வளமாக்கும் வள்ளலாரின் காயகல்பம் 

கொரோனாவிற்கான சரியான மருந்துகள் 

இந்தக் கட்டுரையில் ஏதேனும் கருத்துக்களை சேர்க்கவேண்டியிருந்தாலோ, மாற்றம் வேண்டியிருந்தாலோ அதை கருத்துப் பெட்டியில் இடும்படி கேட்டுக்கொள்கிறேன்.