மூக்கடைப்பிற்கு முற்றுப்புள்ளி

மூக்கடைப்பு ( Nasal Congestion)

  • மூக்கடைப்பு ஏன்? எப்படி?
  • மூக்கடைப்பிற்கு எளிய மருத்துவ முறைகள்
  • மூக்கடைப்பிற்கு ஹோமியோ மருத்து
  • மூக்கடைப்பிற்கு வர்ம மருத்துவம்
இந்தக் கட்டுரை  சிறந்த சித்த மற்றும் ஹோமியோ மருத்துவர்களின் ஆலோசனையுடன் சொந்த அனுபவத்துடனும் எழுதப்பட்டது 

மூக்கடைப்பு ஏன்? எப்படி?

பணிக்காலம் என்றாலே பலருக்கும் பெரிய தொந்தரவாக இருப்பது மூக்கடைப்பு

மூக்கடைப்பு ஏற்பட பல காரணங்கள் கூறப்பட்டாலும் சளி என்பது முக்கியமானது. மலக்கட்டு இருந்தாலும் மூக்கடைப்பு Nasal Congestion ஏற்படும் மலக்கட்டு இருப்பின் இதைப் படிக்கவும் 

இரண்டு மூக்கு துவாரத்தையும் அடைத்துக் கொண்டால் தான் அது மூக்கடைப்பு

சாதாரணமாக எப்போதும் இரண்டு மூக்கிலும் சுவாசம் நடைபெறாது

அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். நல்ல (உடல்) நிலையில் உள்ள ஒருவருக்கு எந்த நேரத்தில் எந்த மூக்கு துவாரம் வழியே சுவாசம் நடைபெறும் என்பதை சரநூல் பயின்றவர்கள் அறிவர்.(வாசிவரும் வகையறிந்தால் ஈசனுக்கு நிகராம் )

வலது நாசி வழியே சுவாசம் நடைபெறும்போது உடல் சூடு பெறும்

இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும்போது உடல் குளுமை பெறும். எனவே சளிபிடித்திருக்கும் நேரங்களில் வலதுபுறம் சுவாசம் நடைபெரும்படி செய்தால் சளியின் தொந்திரவு குறையும்.

சித்தர்கள் இப்படி சரத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள கவட்டை போன்ற ஒரு குச்சியை கை முட்டிக்கும் தோள்பட்டைக்கும் நடுவில் வைப்பர் இதை "தண்டம்" என்பர்

மூக்கடைப்பை சரி செய்ய எளிய மருத்துவமுறைகள்

மூக்கடைப்பிற்கு எளிய மருத்துவ முறைகள்

  • வலது நாசியில் சுவாசம் நடந்தால் இடது நாசித்துவாரம் சற்று அடைத்ததுபோல் இருக்கும் ஒருவேளை நன்கு அடைத்திருந்தால் வலது கைப்பகுதியை கீழே வைத்து ஒருக்கணித்து படுத்தால் ஒருசில நிமிடங்களில் சுவாசம் மாறி அடுத்த மூக்குததுவாரம் அடைபடும்.
  • அதாவது எந்த நாசித்துவாரத்தின் வழியாக சுவாசம் நடைபெறுகிறதோ அந்தப் பகுதி கீழ் இருக்குமாறு ஒருக்கணித்துப் படுக்க சுவாசம் மாறும்.
  • சிறிது மஞ்சள் மஞ்சள் தூள் சிறிது எடுத்து சிறிது எடுத்து அத்துடன் சுண்ணாம்பைக் கலந்து மூக்கின் மீது பற்று இட மூக்கடைப்பு நீங்கும்
  • மிளகு அல்லது கிராமம் கிராம்பு ஒன்றை எடுத்து வாயின் முன் பகுதியில் மேலுதட்டில் அடக்கிக்கொள்ள மூக்கடைப்பு நீங்கும் மூக்கடைப்பு நீங்கும்
  • அதிமதுரப் பொடி சிறிது வாயில் மேல் உதட்டில் அடக்கி வைத்திருக்க மூக்கடைப்பு நீங்கும்
  • அரிசியை ஒரு துணிப்பையில் கட்டி அதை தலையானையாக வைத்துக்கொண்டு உறங்க நல்ல மாற்றம் தெரியும்.
  • மிளகு,மஞ்சள், வேப்பங்கொட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி அதன் புகையை இழுக்க மூக்கடைப்பு Nasal Congestion நீங்கும்.
  • நல்லெண்ணையை விரலில் அல்லது காது குடைவதற்காக கடையில் கிடைக்கும் நுனியில் பஞ்சு கொண்ட குச்சியைகொண்டு அடைத்திருக்கும் மூக்கில் உள்ளே (அடைத்திருக்கும் பகுதியில் ) தடவ உடனடியாக சரியாகும் 

மூக்கடைப்பிற்கு ஹோமியோ மருத்து

மூக்கடைப்பு ஏற்பட பல காரணங்கள் கூறப்பட்டாலும் சளி என்பது முக்கியமானது. பனிக்காலத்தில் மூக்கடைப்பு Nasal Congestion ஏற்படுவது அதிகம் இதற்கு சிறந்த மருந்து dulcomara 200 என்ற ஹோமியோபதி மருந்து

மூக்கடைப்பிற்கு வர்ம மருத்துவம்  

வர்ம முறையில் மின்வெட்டிக்காலம் திலர்த காலம் இவற்றை சரியான முறையில் இயக்க தற்காலிக பலன் கிடைக்கும்

கருத்துகள் இல்லை: