சாயா தரிசனம்
சாயா தரிசனம் |
உங்களின் நிழலை எவ்வளவு பெரிதாகப் பார்த்திருக்கிறீர்கள் பத்து
மடங்கு? .....நூறு மடங்கு?....சரி பத்தாயிரம் மடங்கு பார்க்க முடியுமா?
முடியாது என்பவர்கள் தொடர்ந்து படிக்கவும்
பூமியில் மேடு பள்ளம் இல்லாத இடத்தில் நின்றுஆகாயத்தில் மேகம் மறைவில்லாமல் சூரியன் அல்லது நிலவு காயும் போது தன் நிழல் 5 அடி நீளம் முதல் 10 அடிக்கு உட்பட்ட தருணத்தில் நாம் அந்நிழல் முகமாய் நின்று கைகள் இரண்டையும் தொங்கவிட்டு கண்ணிமைக்காமல் நம் நிழலை ஐந்து நிமிடம் உற்றுப் பாருங்கள் .
அப்படியே இமைக்காமல் ஆகாயத்தை பார்த்தால் அங்கே நம் உருவம் தோன்றும் பிரமாண்டமாகத்தோன்றும்.
இதை சாயா தரிசனம் என்பர். இந்த நிழல் தோன்றும் விதத்தை வைத்து நமது ஆயுளை கணக்கிட முடியுமாம்.
அப்படித் தோன்றும் உருவம் ,
- வெண்மை நிறமாக காட்சி அளித்தால் அவருக்கு மரணம் இப்போதைக்கு இல்லை.
- செம்மை நிறமாக காட்சி அளித்தால் ஆயுளுக்கு கேடு உள்ளது என்று பொருளாம் .
- பொன்னிறமாக தெரிந்தால் அதைப்பார்பவர்க்கு செல்வம் உண்டாகும்.
- *வெண்மையாக தெரிந்தால் உயிர் பயம் இல்லை, அயுள் வளரும்.
- *கருமையாகத் தெரிந்தால் வியாதிகள் வரலாம்.
- *அந்த உருவத்தில் கை,கால்கள் தெரியதிருந்தால்தலையே இல்லாமல் தெரிவது நல்லதல்ல
- மனோன்மணியாள் சொரூபம் போல் உன் ரூபத்தை கண்டாயானால் இவ்வுலகில் நீ வெகுகாலம் இருப்பது உறுதி.
சாயா புருஷ தரிசனத்தை கண்டவர்க்கு எல்லாம் சித்தியாகுமாம். பனிரெண்டு ஆண்டுகள் இதை கண்டவர்க்கு மட்டுமே இது சித்தியாகும்,
இந்த முறையை அகத்தியர் தனக்கு சொன்னதாக கூறுகிறார் போகர் தனது "போகர்ஏழாயிரம்" என்னும் நூலில்.
இந்த சாயா தரிசனம் (நிழல்) விடாமல் 12 ஆண்டுகள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வந்தால் தன் முன் நிற்கும் நிழல் தன்னுடன் பேசும் என்றும் அப்படிப் பேசினால் அதன் மூலம் சில சித்திகளை பெறலாமாம். சில நாட்களில் அந்த நிழல் உருவம் தனியே பிரிந்து திரியும் நமக்கு வரும் நன்மை தீமைகளை முன்னதாகவே எடுத்துரைக்குமாம்.
இவ்வாறு நிஜானந்த போதம் என்னும் சித்தர் நூல் கூறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக