காக்கைக்கு உணவு இடுவது ஏன்?

 

காக்கைக்கு உணவு இடுவது ஏன்?

The reasons behind feeding crows

       காக்கைக்கு உணவு இடும் பழக்கம் எப்படி வந்திருக்கும்?  

    போட்டியும் பொறாமையும் நிறைந்தகாலம். தனக்கு பரிமாறப்படும் உணவில் ஏதேனும் விஷம் கலந்திருக்கிறதா என்று பரிசோதனை செய்ய விரும்பிய மனிதன் மற்ற உயிரினங்களுக்கு அந்த உணவைக் கொடுத்து நன்றாக சாப்பிடுகிறதா, சாப்பிட்டபின் நன்றாக இருக்கிறதா என்று ஆய்வு செய்திருக்கிறான். 

reasons behind feeding crows

    அப்படி பார்த்தபின்னர் எந்த பாதிப்பும் நிகழாமல் இருந்தால் அந்த உணவை உண்டிருக்கிறான். எதிரிகள் நிறைந்த எவரோ ஒருவரால் செய்யப்பட்ட இந்த நுட்பம் பின்னர் அது சாத்திரமாகிப்போனது.

சரி இதற்கு காகம் ஏன்?

    காகம் மனிதனை அண்டி, அவன் உண்ணும் அனைத்தையும் உண்டு வாழும் குணமுடையது. இதேபோன்று நாயும், பூனையும் இருக்கிறது இருந்தாலும், ஒரு பரிசோதனைக்கு பல நாள் பேணி வளர்த்த ஒரு உயிரைப் பயன்படுத்த எப்படி மனது வரும்? எனவே பூனையும் நாயும் தப்பித்துக்கொண்டான.

    அதோடு நாய் அல்லது பூனை சிறு அளவிலான விஷம் கலந்த உணவுகளை உண்டால் அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. நாய் வாந்தி எடுத்துவிடுவதும் உண்டு. எனவே இவற்றை பரிசோதனைக்குப் பயன்படுத்துவது போதிய பலனைத் தராது.

    பொதுவாக விஷம் கலந்த உணவுகளை காக்கை உண்ணுவதில்லை. குறிப்பாக அண்டங்காக்கை மிகவும் எச்சரிக்கயுடன் இருக்கும்.

     ஒருவேளை உணவை உண்டுவிட்டாலோ விரைவில் பதிக்கப்பட்டுவிடும். எனவே உணவின் தன்மையை விரைவில் அறிந்துகொள்ளலாம்.என்பதால் காக்கை இந்த பரிசோதனைக்குப் பயன்பட்டிருக்கிறது. 

    இது ஒருபுறம் இருக்க காக்கைக்குத்தான் இந்த உணவு என்று வைப்பதில்லை. பொதுவாக வைக்கப்பட்ட உணவு. காக்கை மற்ற பறவைகளைவிட அதிக பலம் கொண்டவை. கூடவே கூட்டமாய் வாழ்பவை. எனவே இவை மற்ற பறவைகளை விரட்டிவிட்டு முந்திக்கொள்கிறது. அவ்வளவே.

     உணவில் விஷம் உள்ளதா எனக் கண்டறியும் சோதனை நடக்கும்போது எவரோ பார்த்துவிட்டார் போலும். கடினப்பட்டு தயாரித்த உணவை உண்ணக்கொடுக்கும் போது அதை தான் உண்ணாமல் மற்ற விலங்குகளுக்கு பறவைகளுக்குக் கொடுத்தால் யாருக்குத்தான் கோபம் வராது? பின்னர் உணவு கிடைக்குமா?

     காக்கைக்கு உணவை போட்டதற்கு சரியான ஒரு காரணம் சொல்லவேண்டும். அப்போதுதான் அடுத்தவேளை சோறு கிடைக்கும். இப்போது அந்தக் புத்திசாலி சாதுர்யமாகச்  செயல்படுகிறான். காக்கை நமக்கு மூதாதையர்கள் என்று அடித்துவிடுகிறான். பெரியவாள் சொன்னால் பெருமாளே சொன்னதுமாதிரி. இன்றும் அது சாத்திரமாகத் தொடர்கிறது.

     ஒருவேளை இந்த நிகழ்வு இப்போது நடந்திருந்தால் "காக்கை நமக்கு மூதாதையர்கள் என்றால் நமக்கு காக்கையின் ரத்தத்தை செலுத்த முடியுமா?" என்று கேட்கப்பட்டிருக்கும்.  

    எது எப்படியோ. இன்றைய காகங்கள் கொடுத்துவைத்தவைகள். இவற்றிற்கு விஷங்கள் கிடைக்கப்போவதில்லை. அதோடு வகைவகையான சாப்பாடும் தெய்வத்திற்கு உரிய வழிபாடும். .  


கருத்துகள் இல்லை: