சுடும் நெருப்பை வெறும் கையிலெடுக்கும் தந்திரம்
முறை 1 புலிப்பானி சித்தர் கூறியிருப்பது
மானப்பா மணத்தக்காளி சாறுகூட
மைந்தனே உத்தமாணியின் சாறுகூட்டி
வானப்பா வசலையின் சாறுசேர்த்து
வளமாக மத்தித்து வைத்துக்கொண்டு
தானப்பா கைகாலில் தடவிக்கொண்டு
தன்மையாய் தணல்மிதிக்க தணலும் நீர்போல்
ஏனப்பா யவ்விதமே செய்தாயானால்
இதமாகத் தணலதுவுந் தயங்குந்தானே...
-புலிப்பாணி சித்தர்
பொருள்:
மணத்தக்காளி சாறும்,உத்தாமணி சாறும்,வசலை சாறு இம்மூன்றையும் ஒன்றாக கலந்து கைகளில் பூசி நெருப்பை எடுக்கவும்,அல்லது கால்களில் பூசி நெருப்பை மிதிக்கவும், கை கால்கள் சுடாது... நெருப்பானது நீர்போல இருக்கும். எந்த நேரம் விளையாடினாலும் விளையாடலாம்....
முறை 2.
வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரினாலும் சுடாது.
முறை 3.
வேலிப்பருத்தியின் வேரும், கொழுந்தும் எடுத்தரைத்து கையில். பூசிக்கொண்டு கட்டை நெருப்பையும் கையில் அள்ளலாம் சுடாது.
எச்சரிக்கை: நான் படித்த சில விஷயங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் . இவற்றை அனுபவப் பூர்வமாக ஆய்ந்து பார்த்ததில்லை. இந்த முறைகள் பலன் தரவில்லை என்றாலோ, தவறாக இருந்தாலோ நான் பொறுப்பல்ல.
மேலும் வாசிக்க
தங்கம் தயாரிப்பது எப்படி? (ரசவாதம்)
1 கருத்து:
சிலவற்றை ஆய்ந்தறிந்து (பதிவில்)தருதல்
நலம்
கருத்துரையிடுக