பரிணாமக்கொள்கை முரண்பாடுகள்

The contradictions of the evolutionary theory
             பரிணாம வளர்ச்சிக் (Theory of evaluation )கொள்கையின்படி, குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது பரவலான கருத்து. (குறிப்பு; குரங்கிற்கும் மனிதனுக்கும் ஒரே மூதாதையர் என்றுதான் டார்வின் கூறியுள்ளார்) 
இங்கு சில கேள்விகள்


பரிணாமக் கொள்கையில்  முரண்பாடுகள்
  • சில குரங்குகள் மனிதனாக மாறிய போது மற்றவை மாறாமல் குரங்காகவே இருப்பதான் ரகசியம் என்ன?
  • பரிணாம  (Theory of evaluation )கொள்கையின்படி, மனிதனின் மூதாதையர் குரங்குகள் எனில் குரங்குகளின் மூதாதையர் யார்?/எது?
  • பரிணாம வளர்ச்சிக் கொள்கை (Theory of evaluation ) உண்மையெனில் வேறு எந்தஎந்த உயரினங்கள் மாற்று வடிவம் பெற்றிருக்கின்றன ? ஆடு மாடு யானை நாய் இவற்றின் மூதாதையர் எது? 
  • ஆடு, மாடு, யானை, நாய். குரங்கு, புலி இவையெல்லாம் ஒரே இனத்தில் இருந்து வந்ததா? அல்லது தனிதனியான இனமா? 
  • ஒரே இனத்தில் இருந்து வந்திருப்பின் ஒரேப்பகுதியில் வாழ்ந்த இவற்றிற்கு வேவேறு வகையில் மாறவேண்டிய அவசியம் எப்படி ஏற்பட்டது?
  • பரிணாம வளர்ச்சிக் (Theory of evaluation )கொள்கை குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்கிறது அப்படியெனில் மனிதக்குருதியும் குரங்கின் குருதியும் ஒத்துப்போகும் தானே. இன்று பலருக்கும் பல நேரங்களில் குருதி தேவைப்படுகிறது. ஏன் குரங்கின் குருதி மனிதனுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை. 
  • தரையிலே வசித்த ஒரு உயிரி தானே பின்னர் மரத்தில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் மரத்தில் வாழ்ந்த உயரினம் தரைக்கு வந்தது ஏன் ?
  • பரிணாம வளர்சிக் (Theory of evaluation) கோட்பாட்டின்படி, தேவை உருவாக்குகிறது. மண்ணைத் தோண்டி உணவை எடுக்க வேண்டிய சூழல் இருப்பின் கடினமான நகமும் விரல்களும் நாளடைவில் ஏற்பட்டுவிடும். இந்த அடிப்படையில் தான் பறவைகளுக்கு இறக்கைகள் தோன்றின. அப்படியெனில் மயிலுக்கும், நெருப்புக் கோழிக்கும், இறக்கை முளைத்தது ஏன்?
  • உடலின் வெளிப்புற உறுப்புகள் தேவையின் அடிப்படையில் ஏற்பட்டது எனில்  உள்ளுறுப்புகள் எதனடிப்படையில் உருவாகின ? 
  • ஒரு செல் உயிரி  பல செல்  உயிரியாக மாற்றம் பெற்றது ஏன்?   அவ்வாறு மாறியபோது இனப்பெருக்க உறுப்புகள், உணவை சக்தியாக மாற்றுவதற்கான உறுப்புகள்,  சுவாச உறுப்புகள் இவை தோன்றக் காரணமாய் இருந்தது எது? 
  • சிந்திக்கத்தெரியாத ஒருசெல் உயிரிக்கு  எப்படி தன்  இனத்தை பெருக்கவேன்டும் என்ற எண்ணம் உருவானது ?


கருத்துகள் இல்லை: