பெட்ரோல் மண்ணுக்கடியில் புதையுண்ட விலங்குகளின் கொழுப்பால் உருவானது என்று பாடப் புத்தகத்தில் படிக்கின்றோம் உண்மை என்ன?
நிலக்கரி மண்ணில் புதையுண்ட காடுகள் / மரங்கள் என்றும் பாடப் புத்தகத்தில் படிக்கின்றோம்.காடுகள் உள்ள பகுதிகளில் விலங்கினங்கள் அதிகம் வசித்தன என்றும் படிக்கிறோம்
அப்படியெனில் நிலக்கரியும் பெட்ரோலும் ஒரே இடத்தில் தானே காணப்பட வேண்டும் ஆனால் நிலக்கரி ஒருபுறமும் பெட்ரோல் வேறுபகுதியிலும் கிடைப்பது எவ்வாறு?
சாதாரணமாக எவ்வளவுதான் பெரிய உடம்புடன் இருந்தாலும் ஒரு மனிதனின் உடம்பில் 10 அல்லது 15 விழுக்காட்டிற்கு மேல் கொழுப்பு இருக்க வாய்ப்பு இல்லை எனில் 5-லிருந்து 10 கிலோவுக்கு மேல் கொழுப்பு இருக்க வாய்ப்பு இல்லை. கடல் போன்று எடுக்க எடுக்க பெட்ரோல் வருகிறதே அப்படியெனில் எவ்வளவு உயிர்கள் ஒரே இடத்தில் வாழ்ந்திருக்கும்?
அப்படி ஒரே இடத்தில் பல உயிர்கள் வாழ்ந்திருந்தால் அவற்றிடையே உணவு போட்டியினால் சண்டை ஏற்பட்டு பிரிந்து சென்றிருக்காதா? இறந்த உடல்களை கரையான் புழு போன்ற நுண்ணுயிர்கள் சிறு உயிரிகள் உண்ணாமல் போனது எப்படி?
எவ்வளவு தான் அடர்த்தியான காடாக இருந்தாலும் அவை அப்படியே மடியும்போது ஓரிரண்டு அடி உயரத்திற்கு மட்டுமே இருக்கும் ஆனால் நிலக்கரி சுரங்கங்களில் பல மீட்டர் உயரத்திற்கு நிலக்கரி கிடைப்பது எவ்வாறு?
பல இடங்களில் திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் இருப்பதை காணமுடிகிறது அந்த நிலக்கரி எவ்வாறு உருவானது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக