உலகில் இன்னும்
சில வருடங்களில் குடிநீர் பஞ்சம் வந்துவிடும் என்பது உண்மையா?
நிலத்தடி நீர் உருவாகும் விதம் |
தண்ணீர் என்பது பெட்ரோல் போன்று என்றோ உருவாகி பூமியின் அடியில் நிலையாக தங்கியிருக்கும் ஒரு வளம் அல்ல. (எனினும் வெகு அரிதாக சில இடங்களில் பூமிக்கடியில் இருப்பதாக கேள்விப்படுகிறோம்) புவியின் மேற்பகுதியில் பொழியும் மழை நீர், ஆறு குளம் ,ஏரி கடல் நீர் இவையே பூமிக்கு அடியில் சென்று நகர்கிறது .
தரைக்குக்கீழே மணற்பரப்பு இருப்பதும் உண்டு இவை பொதுவாக அதிக ஆழத்தில் இருப்பதில்லை. அறுகளை ஒட்டிய பகுதிகளில் இதுபோன்ற பகுதிகள் அதிகம் காணப்படும். இந்தப்பகுதியில் இருக்கும் நீர் ஒவ்வொரு வருடமும் பொழியும் மழையின் அளவைப்பொருத்து ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படும். அதாவது மேலிருந்து கீழே சென்று ஆறுபோல் வேறு இடம் நோக்கி சென்றுகொண்டிருக்கும். எனவே தண்ணீர் பஞ்சம் இந்தப் பகுதிகளில் மழை பொழியாத ஏதேனும் ஓரிரு வருடங்கள் ஏற்படலாம். ஆனால் நிலையான பஞ்சம் ஏற்படாது.
பாறை இடுக்குகள் வழியாக புவியின் மேற்புறத்தில் இருக்கும் நீர் உள்ளே சென்றுகொண்டே இருக்கும் இதை நீர்த்தாரை என்பது கிராம வழக்கு.இவ்வாறு பாறைக்குள் நீர் சென்று தேங்க பாறையின் தன்மையைப் பொறுத்து நாட்கள் அதிகம் எடுக்கும். இதுபோன்ற பகுதிகளில் நீர்த்தேக்கங்களை ஏற்ப்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீரை சேமிக்கலாம்.
மழை ஒருபகுதியில் தொடர்ந்து பொய்த்துப்போனால் மட்டுமே அந்தப்பகுதியில் தண்ணீர் பஞ்சம் வரும். ஆனால் ஒட்டுமொத்த உலகிற்க்கே தண்ணீர் பஞ்சம் என்பது ஏற்பட வாய்ப்பே இல்லை.
உலகம் வெப்பமயமாகி வருகிறது இதனால் உலகில் மழை பொழிவது குறைந்து வருகிறது எனவே உலகில் இன்னும் சில வருடங்களில் நிலத்தடி நீர் வற்றி குடிநீர்/தண்ணீர் பஞ்சம் வந்துவிடும் என்பது முற்றிலும் தவறான கருத்து
உலகம் வெப்பமயமாகிராதா? மழை குறையுமா என்பதை அறிய உலக வெப்பமயமாதல் உண்மையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக