ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள்


ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள்
Alchemy- Methods of making gold

ரசவாதம் (alchemy) என்றால் என்ன? தங்கத்தை செயற்கையாக தயாரிக்க முடியுமா? ஒரு உலோகத்தை மற்றொரு உலோகமாக மாற்ற முடியுமா? தங்கம் தயாரிக்க உதவிய மூலிகைகள் என்னென்ன? தங்கம் தயாரிக்க சித்தர்கள்(Tamil Alchemists) கூறியுள்ள வழிமுறைகள் என்னென்ன? தெரிந்துகொள்ளுவோம் 

ரசவாதம்(Rasavaatham/Alchemy meaning)என்றால் என்ன?

உலோகத்தை தங்கமாகும் வித்தையை
  ரசவாதம் என்பார்கள்அக்காலத்தில் பாதரசம் இந்தச் செயல்பாட்டில் மிக முக்கிய
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள்
பங்கு வகித்ததாலேயே இக்கலையை தமிழில் ரசவாதம்’(#Rasavaatham #Alchemy) என்று அழைத்தனர். பழங்காலத்திலிருந்தே  பிற உலோகங்களைத் தங்கமாக்குதல் மனிதனுக்கு ஒரு கனவு.. நம் நாட்டில் மட்டுமல்லபல வெளிநாடுகளிலும் அந்தக் காலத்தில் ரசவாத முயற்சிகள் மிகப் பிரபலம்.ரசவாத முயற்சிகளில் பிறந்ததுதான் வேதியியல் என்ற துறை என்று ஜெர்மனியில் சொல்வார்கள்.

உலகளவில் ரசவாதம் (Rasavaatham/Alchemy)

பழங்காலத்தில் கிரீஸ்சைனாஎகிப்து மற்றும் அரேபியா போன்ற நாடுகளில் தங்கம் தயாரிக்கும் முறைகள்(alchemy methods) குறித்த  ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். 1403 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி ரசவாதப் பயிற்சியை தடைசெய்தார். அப்பயிற்சிகளை மேற்கொண்டோர்(Alchemist) கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதேசமயம் இரண்டாம் ருடால்ஃப் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெருவில் உள்ள தன்னுடைய அரண்மனையில் பல்வேறு ரசவாதிகளை(Alchemist)  வர வழைத்துஅவர்களை சோதனைகள் செய்ய வைத்துஅவர்களது பணிக்காக பல்வேறு பரிசுகளை அளித்து கௌரவித்திருக்கிறார்.

ரசவாதம்-சித்தர்களின் அறிவு  

நீர்ம வடிவத்தில் இருக்கும் பாதரசத்தை திடப்பொருளாக்கும் கலையிலும் அக்காலச் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவற்றை லிங்க உருவாக்கி வழிபட்டனர். பல ஆலயங்களிலும் மக்கள் வழிபாட்டிற்காக ஸ்தாபித்தனர்.

எரியும் கற்பூரத்தை எரியா மருந்தாக்கல். ஓடும் பாதரசத்தை ஓடாத திடபொருளாககி குளிகை மற்றும் மருந்து செய்தல். வேதையின் ஒருபகுதி தங்கம் செதய்தல் என்று சித்தர்கள் பாடி உள்ளார்கள் இதற்கு அடிப்படையாக முப்பூ என்னும் ரசாயனத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். (முப்பு பற்றி அறிந்துகொள்ள கர்ப்பமுப்புக் குருநூலைப் படிக்கவும்)

ரசவாதம்-சாத்தியமா?  

 பொதுவில் இரசவாத முறை ரெண்டு நிலைகளைக் கொண்டது.  ஒன்று பாதரசத்தை தின்மமாக்கல்மற்றது மட்டமான உலோகங்களான ஈயம்வெள்ளிசெம்புபித்தளைஇரும்பு போன்றவற்றை உயர் உலோகமான தங்கமாக மாற்றுவது.

 உலோகங்கள் என்பவை பாதரசமும் கந்தகமும் பல அளவில் சேர்ந்து உண்டானவைகளே என்பதாகவும், தங்கத்திலேயே மிகவும் குறைந்த கந்தகம் இருப்பதாகவும் பண்டைக் காலத்தில் எண்ணினர்கள். செம்பு முதலிய வற்றிலுள்ள கந்தகத்தில் பெரும் பகுதியை வெளியே போய்விடும்படி செய்து விட்டால் செம்பு தங்கமாகிவிடும் என்று நம்பினர்.

            எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக்களின் மூலக் கூறுகளின் அமைப்பை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்ற முடியும் என்பது உண்மைதான். ஆனால் இரும்பை அந்த முறையில் தங்கமாக மாற்றுதல் சாத்தியமில்லை என்கின்றனர் இன்றைய விஞ்ஞானிகள்.

தாவரங்கள் எல்லா இடத்திலும் பச்சையாகவே இருப்பதில்லை. இந்த பச்சையின் நிறம் மாறுபடும்ஏன் சில இடங்களில் சிவப்பான தாவரங்களைக் கூட காண முடியும். இந்த நிறத்தை நிர்ணயிக்கும் நிறமிகளின் பின்னால் இருப்பது அந்த தாவரத்தில் மிகுந்திருக்கும் உலோக உப்புகள் என்பது தாவர இயலில் நிரூபிக்கப் பட்ட உண்மை. 

ஆக  குறிப்பிட்ட ஒரு உலோகம் அந்த செடியால் ஜீரணிக்கதக்க வகையில் உப்பாக இருக்கிறது. வேறு வகையில் சொல்வதானால் இயற்கையாகவே உலோகம் உப்பாக உருமாறி தாவரம் ஜீரணிக்கத்தக்க நிலையை அடைந்துள்ளது. உலோகம் உப்பாக மாற முடியுமானால்உப்பை ஏன் உலோகமாக மாற்ற முடியாது?

மேலும் இரும்பைக் காய்ச்சி நல்லெண்ணையில் இடும்போதும், அதையே தவிட்டில் இடும்போதும், உப்புநீரில் இடும்போதும் வேவேறான தன்மையை அடைவதை காணமுடிகிறது. எனவே உலோக மாற்று என்பது சாத்தியமான ஒன்றாகவே தோன்றுகிறது.

பழங்காலத்திலிருந்தே  தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது தங்கம் பொதுவாக ஆழமான சுரங்கங்களிலிருந்தே வெட்டி எடுக்கப்படுகிறது. இயந்திரங்கள் இல்லாத காலங்களில் எவ்வாறு தங்கம் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டி ருக்கக் கூடும்? எனவே தங்கம் வேறு வழிகளில் தாயாரிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை ஏற்க வேண்டியிருக்கிறது.

சித்தர் இலக்கியங்களில் -இரசவாதம்-  


கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம் (கொங்குமண்டல வரலாறு) என்னும் நூலில்,

யோக வயித்தியம் சொல் ரசவாதம் எலாக் கலையும்
தேக நிலைபெறும் காயகற்பங்கள் எண் சித்தியும் சொல்
போகருடன் புலிப்பாணி முதலிய புண்யரெலா
மாக முறவமர் வைகாநகர் கொங்கு மண்டலமே. 36

யோகம்மருத்துவம்ரசவாதம்தேகத்தை நலமாக்கிக்கொள்ளும் காயகற்பம்எட்டு வகையான சித்தி முறைகள் ஆகியவற்றை யெல்லாம் சொல்லும் போகர்புலிப்பாணி முதலான புண்ணியர் எல்லாரும் அமர்ந்திருந்தது வைகாநகர் (வையாவிக்கோ-நகர்பழநி). இந்த நகர் இருப்பதும் கொங்குமண்டலமே. 

தோற்றிய செம்பு தரா வீயம் பித்தளை சூழ் பச்சிலைச்
சாற்றுடனாக ரசங் கந்தகமிட்டுத் தந்திரமாய்
தேற்றும் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன் செய்து
மாற்றுரை கண்டது பொன்னூதியூர் கொங்கு மண்டலமே. 37

                செம்புதாமிரம்ஈயம்பித்தளை ஆகியவற்றில் பச்சிலைச் சாறுரசம்கந்தகம் ஆகியவற்றைக் கலந்து தந்திரமாகத் தங்கம் ஆக்கியவர் கொங்கணச் சித்தர். இவர் வாழ்ந்த பொன்னூதியூர் இருப்பதும் கொங்குமண்டலம். என்று கொங்குமண்டலத்தின் சிறப்பினை கூறும் பாடல் வரிகளில் கொங்கணச் சித்தர், போகர்புலிப்பாணி சித்தர்கள் தங்கம் தயாரித்ததாகக்  கூறியுள்ளார்.
    
பாதரசம்காரீயம்,  பிலாட்டினம்,  வெள்ளி ஆகியவற்றின் அணுத் தொகுப்பைமூலக்கூறு அணுவைஅணுச்  சிதைவு மூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம். அவ்வாறு உலோகங்களின் அணு நிறையை மாற்றி தங்கம் செய்வதற்கு பல ஆண்டுகால மனித உழைப்பு விரயமாவதுடன்பலகோடி டாலர்கள் செலவிட வேண்டிவரும் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

இரசவாதத்திற்குப் பயன்படும் மூலிகைகள்/ராசவாத பச்சிலைகள்  

திருமூலர் , போகர் , கொங்கணர்கருவூரார்சிவவாக்கியர் மற்றும் பல சித்தர்கள் ரசவாதம் மூலம் தங்கம் செய்தார்கள் என்ற குறிப்பு உள்ளது இந்தப் பொன் மாற்று வேலையைச் செய்யச் சில மர இனங்கள்பயன்படுத்தப்பட்டுள்ளன. அயம்இரும்புஎஃகுஈயம்காரீயம்துத்தநாகம்உப்புகல்லுப்புநவச்சாரம்காயம்காவிக்கல்இரசம்மனோசிலைகாந்தம்கந்தகம்செம்புதங்கம் முதலிய ஒன்பது உலோகங்களையும் - உலோகஞ் சார்ந்த அல்லது உலோகம் போன்ற பொருள் களையும் திரித்தும் மாற்றியும் பொடித்தும் பயன் உண்டாக் குகிற சில  மூலிகைகள்/ராசவாத பச்சிலைகள்  மர தாவரங்களின் பட்டியல் வருமாறு:

அயத்துக்கு உருக்கி = இரத்த மண்டலப் பூண்டு
அயத்தை ஈயமாக்கி = iழிச் செடி
அயம் உருக்கி = காட்டா மணக்கு (செடி வகை)
இரசம் தாக்கும் மூலிகை = பெரிய முள்ளங்கி (செடி)
இரும்பு அறுப்பி = கல்லி இரும்பிலை
இரும்பு நீற்றி (இரும்பைப் பொடியாக்குவது) = எருக்கிலை
இரும்பைத் தங்கமாக்கி = இரும்பிலிச் செடி (மலையகராதி)
ஈயங் கட்டி = இரும்பிலி இலை
ஈயங் கொல்லி = கரிய போளப் பூடு
ஈயத்தை நாச மாக்கி = கொடிக்கள்ளி (செடிவகை)
ஈயத்தைப் பற்ப மாக்கி = ஆராக்கீரை
ஈயமாக்கி - காட்டாமணக்கு (செடிவகை)

இங்கே தமிழ் இலக்கியங்களில் தங்கம் தயாரிக்கும் முறை குறித்து உள்ள சில பாடல்களை தருகிறேன். ஆராய்சி அறிவுடையோர்  முயன்றுபார்த்து வெற்றி பெறட்டும்
               
 ”கேட்கவே மதியில் அப்பா
கிருபையாய்ப் பத்துக்கு ஒன்று
மீட்கவே உருக்கிப் பார்க்க
மிக்கது ஓர் மாற்றாகும்
வீட்கமாய்த் தகடு அடித்து
விருப்புடன் காவி தன்னில்
ஆட்கவே புடமும் இட்டால்
அப்பனே தங்கம் ஆமே…”                    

 பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே

என்கிறது ஒரு பழம்பாடல் 


சில ராசவாத முறைகள்  (Alchemy methods) 


 1.    நாத வேதை மூலம் தங்கம் - கொங்கணவர் 

2.     காந்தரசம் மூலம் தங்கம் - போகர் வைத்தியம் 700

3.     பித்தளையை தங்கமாக்கல் -அகத்தியர் பரிபூரணம்

4.     செம்பில் இருந்து தங்கம்

5.      இரும்பை செம்பாக்கும் ரசவாதம்


 1.      நாத வேதை மூலம் தங்கம்

                மலை காடுகளின் ஊடான பயணத்தின் போது பல்வேறு பாஷாணங்கள்உப்புகளை கரைத்துக் கொண்டுகாடுகளின் மூலிகை செடிகளுடன் ஊடான பயணத்தில் இந்த நீரின் பண்பும் தன்மையும் செறிவாக மாறியிருக்கும். மலைகளின் மேல் கிணறு போல மிக ஆழமாகவும் குறுகலாகவும் உள்ள குழிகளில் தேங்கிய இம்மாதிரியான நீர் காலப் போக்கில் வெயில்,இடி ,மின்னல் போன்ற பருவ மாற்றங்களினால் வேதி மாற்றம் அடைந்து அதி வீரியமானசக்திவாய்ந்த , ஆற்றல் மிக்க நீர்மை பொருளான திரவமாக ஆகிவிடும்.இந்த நீரினையே சித்தர்கள் உதக நீர் என்கின்றனர்.

                இந்த நீரில் விழும் இலை கூட கல்லாய் மாறிவிடுமாம். இந்த மாதிரி திரவம் எல்லா இடங்களிலும் கிடைத்து விடாது என்றும்இதை கண்டறிவது அத்தனை சுலபம் இல்லை என்றும் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் எல்லா இடத்தில் இருக்கும் உதக நீரும் ஒரே மாதிரியான வேதியல் மற்றும் பௌதீக தன்மை உடையவனாகவும் இருப்பதில்லையாம்.

                இத்தகைய உதக நீரைப் பற்றி போகர் மலைவாகடம்”, ”கோரக்கர் மலைவாகடம்”, ”அகத்தியர் வாகடம்போன்ற நூல்களில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது. இதன்படி பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு பயன் படுத்தும் முறைகளை பாடல்களில் காண முடிகிறது. இந்த நீரை விசேடமான பாத்திரங்களில் சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்

"காணு நீ நாத வேதைக்
காட்டுகின்ற முறைமைக் கேளு
பூணு நீ சூதங் கட்டிப்
புகட்டிச் சாரணைகள் செய்து
தோணு நீ வில்லை போல
சுகப்பட வார்த்துத் தட்ட
வாமினி சாத்தான் கேட் கில்
அம்மட்டும் வேதையாமே"

"வேதையாம் பரிசம் தன்னில்
விளங்கிய மணியைக் கேளு
ஆதையாம் லோகஞ் செங்கல்
அடைவுடன் சுக்கான் மண்ணும்
பாதையாய் காட்டு முன்னே
பளிச்சென்று தங்கமாகும்?"
                                                               -   கொங்கணவர்

 நாத வேதை என்பது ரசத்தை மணியாகக் கட்டி அதற்க்கு முறையான சாரணைகள் செய்து அதை வில்லை போல் தட்ட அந்த சத்தம் எவ்வளவு தெளிவாக கேட்க்குமோ அந்த நேரத்தில் தங்கமாகும் என்றும் இதை பரிச மணியாக மாற்றினால் அது செங்கல்சுக்கான் கல்மணல்போன்றவற்றின் முன் காட்டினால் அவற்றை தங்கமாக்கும் தன்மை பெரும் என்றும் சொல்கிறார் கொங்கணவர்.

2. காந்தரசம் மூலம் தங்கம் தயாரித்தல் 

                போகர் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும்அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர் கூறுகிறார்.

"ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளு
அரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்
தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டு
சிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்து
வாடவே இரவிபடாது அறைக்குள் வைத்து
வன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீ
ஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்
உவகையுடன் அயக் குறட்டால் எடுத்திடாயே"

"எடுத்திட்ட அயக்குறட்டால் பிடித்துக்கொண்டே
இதமாகக் கிண்ணத்தில் தட்ட தட்ட
அடுத்திட்ட ரசமெல்லாம் சாம்பல் போலே
அப்பனே காந்த ரசம் இறங்கும் பாரே
கடுத்திட்ட காந்தம் ஒரு பலத்துக்கு அப்பா
கால்வாசி இறங்கி நிக்கும் திரட்டி வாங்கு
வெடித்திட்ட குடக் கரியில் இட்டு நீயும்
வெண்காரம் இட்டு உருக்கு கனகம் ஆமே"

"கனகத்தை கண்டு நீ மகிழ்ந்தி டாதே
கைசெலவு கற்பத்துக்கு இல்லாவிட்டால்
கனகமாஞ் செலவுக்கு கற்பத் துக்குக்
காணவே கொஞ்சமாய் செய்து கொண்டு
கனகமாம் அந்தி சந்தி கந்தன் பூசை
கருதி நீ செய்து கொண்டு அனுபவிப்பாய்
கனகமாம் உலகத்தில் வெளி செய்யாமல்
கண்டவர்முன் ஊமையை போல்இருந்திடாயே"
                                 - போகர் வைத்தியம் 700 -

ஏழு வகையான இரும்புகளையும் ஈர்த்துக் கொள்ளும் அளவு காந்த சக்தியைக் கொண்ட காந்தத்தில் ஒரு பலம் எடுத்துஅதனை ஒரு மண் பாண்டத்தில் இட்டு அதை நீலிச் சாற்றால் நிரப்பிமூடியால் மூடி சூரிய ஒளி போகாத இருட்டறையில் மூன்று நாள் வைத்திருந்து நான்காம் நாள் எடுத்து பார்த்தால்சாற்றை எல்லாம் காந்தம் உறிஞ்சி இருக்கும். இந்த காந்தத்தை அயக் குறட்டால் (இரும்புக் குறடு) எடுத்து ஒரு கிண்ணத்துக்குள் வைத்து மெதுவாக தட்டினால் சாம்பல் கொட்டுவது போல காந்தரசம் கிண்ணத்துள் விழுமாம். இதை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் இதுவே காந்த ரசம் என்று போகர் குறிப்பிடுகிறார். இந்த காந்த ரசத்தினை குடக் கரியில் போட்டு வேண்காரத்தொடு சேர்த்து உருக்கினால் தங்கம் ஆகிவிடுமாம்.

3. பித்தளையை தங்கமாக்கல்

 அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம்என்ற நூலில் பித்தளையை தங்கமாக மாற்றும் இரசவாத முறையொன்றை அருளியிருக்கிறார். அந்த விவரம் பின் வருமாறு.

பதிவாக இன்னமொரு கருமானங்கேள்
     பதிவான பிருதிவியைப் பழச்சாற்றாலே
கெதியாகத் தானரைத்து மைந்தாகேளு
     கெணிதமுடன் துருசுவெடி சாரங்கூட்டி
மதியான சருகுடனே பூரஞ்சேர்த்து
     மைந்தனே பழச்சாற்றா லரைத்துருட்டி
விதியான பித்தளையைத் தகடுசெய்து
     விரும்பியந்த மருந்ததிலே சேர்த்துமூடே.

சேர்ந்துநன்றாய் மூடியபின் மைந்தாகேளு
     சிவசிவா நிதானமுடன் புடத்தைப்போடு
பார்த்திபனே புடமாறி யெடுத்துப்பார்த்தால்
     பத்தியுள்ள பித்தளைதான் செம்பாய்ப்போச்சு
போற்றியந்தச் செம்பதனைப் பதனம்பண்ணி
     புண்ணியனே வெள்ளிதனில் நாலுக்கொன்று
வாத்திமிகத் தாங்கொடு உருக்கிப்பார்க்க
     மயங்காதே மகத்தான பொன்தான்பாரே.

பஞ்ச பூதங்களுள் மண்ணை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலகத்தை எடுத்து அத்துடன் பழச்சாறு சேர்த்து அரைத்து,பின்னர் அதனுடன் துரிசும்வெடிசாரமும்பூரமும் சம அளவில் சேர்த்து மீண்டும் அதே பழச்சாறு கொண்டு அரைத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்.

 பித்தளையை தகடாக செய்து அதன் மீது மேலே சொன்ன உருண்டைகளை பூசி நன்கு கவசமிட வேண்டுமாம். பின்னர் அதை புடமிட்டுபுடம் ஆறிய பின்னர் எடுத்துப் பார்த்தால் அந்த பித்தளையானது செம்பாக மாறியிருக்குமாம். பின்னர் அந்த செம்பின் எடைக்கு நான்கில் ஒரு பங்கு வெள்ளி சேர்த்து உருக்கினால் அது தங்கமாக மாறிவிடும் என்கிறார்.

எளிய முறைதானே!ஆனாலும் இங்கே சில விவரங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. அதாவது மண்ணை முன்னிறுத்தும் மூலகம் எது என்பதையும்எந்த வகையான புடம் போடவேண்டும் என்பதையும் அகத்தியர் இந்த நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த தகவல்கள் அகத்தியர் அருளிய மற்றொரு நூலான "அகத்தியர் 12000" என்னும் நூலின் ஒன்பதாவது காண்டத்தில் வரும் 637வது பாடலில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கரு மருவு குகையனைய காயத்தின் நடுவுட்
களிம்புதோ செம்பனை யான்
காண்டக விருக்க நீ ஞான அனல்மூட்டியே
கனிவு பெற உள்ளுருக்கிப்
பருவமறிந்துநின் னருளான குளிகைகொடு
பரிசித்து வேதி செய்து
பத்து மாற்று தங்கமாக்கியே பணி கொண்ட
பட்சத்தை என் சொல்லுவேன்?’

 4. செம்பில் இருந்து தங்கம் தயாரித்தல் 

தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும் என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இருந்து பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால் செம்பு தங்கமாகும் என்கிறார் சித்தர். இந்த பச்சை நிற களிப்பை நீக்கிவதற்கான வழி முறையையும் கூறியுள்ளார். கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும். அனால் கூத்தன் குதம்பை என்று சித்தர் எதை இங்கு குறிப்பிடுகிறார் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது.


5.இரும்பை செம்பாக்கும் ரசவாதம்

இரும்பினை செம்பாக்கும் இந்த தகவல் கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
கல்தாமரை அல்லது கற்றாமரை ஒரு கொடி வகையைச் சேர்ந்த மூலிகை..நீர்கொழும்பு பகுதியில குடபாடுஎன்னும் பகுதியில் இருப்பதாக கேள்வி)
இரும்பு ஊசியின் மேற்பரப்பை தேய்த்து சுத்தம் செய்துநன்கு பழுக்க சூடேற்றிய பின்னர் அதனை அப்படியே ஆற விடல் வேண்டும். ஆறிய பின்னர் அந்த ஊசியினை கல்தாமரை வேரில் கவனமாய் சொருகி வைக்க வேண்டும். மூன்று சாம நேரத்திற்கு பின் அந்த ஊசியை எடுத்தால் அது செம்பாக மாறியிருக்கும்.என்று கூறப்படுகிறது

சித்தர்கள் இலக்கியங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


8 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

அருமையான நுட்பங்களை வெளிப்படுத்தும் பதிவிது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வியப்பு தரும் தகவல்கள்...

Unknown சொன்னது…

அருமையான தகவல்

Unknown சொன்னது…

அருமையான தகவல்களுக்கு நன்றி

Unknown சொன்னது…

Tq😊👍

Unknown சொன்னது…

உங்களுடைய கருத்து மிகவும் தெளிவாக உள்ளது ஆனால் இன்னும் ரசவாதம் பற்றி முழு விவரம் மறைபொருளாகவே உள்ளது இதை முழுமையாக அறிய வாய்ப்பு அளியுங்கள் ஐயா,

பெயரில்லா சொன்னது…

சித்தர் தாமே எங்கே அதிகமாக உள்ளது

Edward Packiaraj சொன்னது…

உங்கள் கேள்வி புரிவில்லை