புவியின் எடை (நிறை) அதிகரிக்குமா?

மக்கள்தொகை பெருக்கத்தால் செயற்கைக் கோள் செலுத்தப்படுவதால், விண்கல் புவியில் விழுவதால் விமானம் பறப்பதால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?

பூமியின் எடை அதிகரிக்குமா? குறையுமா?

முதலில் கேள்வியில் சிறு திருத்தம்.

எடை என்பதற்குப் பதிலாக நிறை எனக் குறுப்பிட வேண்டும்.

அதாவது பூமியில் உள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவு அந்தப் பொருளின் எடை.

பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை நிறையால் அளவிடுவோம். 

புவியின் நிறை M = 5.9722×1024 kg,  (5 972 200 000 000 000 000 000 000 Kg)

இப்போது பதிலுக்கு வருவோம்.

மக்கள்தொகை பெருக்கத்தால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?

பூமியில் புதிதாக எதுவும் உருவாகுவதில்லை. அதேபோல் அழிவதும் இல்லை.

ஒரு நிலையில் இருக்கும் அணு மற்றொரு வித அணுவாக உருமாற்றம் பெறுகிறது.

மனிதன், விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட எந்த ஒன்றும் உருவாக புவியின் வெளிப்பகுதியில் இருந்து அதற்கான மூலங்களை கொண்டுவருவதில்லை. மாறாக உருமாற்றம் பெறுகிறது. 

எனவே உயிரினங்களின் தோற்றத்தால் புவியின் நிறை மாறாது.

செயற்கைக் கோள் செலுத்தப்படுவதால், விண்கல்  விழுவதால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?

புவியிலிருந்து புவிமண்டலத்தைத் தாண்டி விண்ணுக்குச் செல்லும் செயற்கை கோள்களால் புவியின் நிறை சற்று குறையும். ஆனால் 

புவியில் விழும் வின்கற்களால் புவியின் நிறை சற்று அதிகரிக்கும்.

வேறு ஏதேனும் வகையில்புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?

சூரியனில் இருந்து நியூட்ரினோ துகல்கள் புவியை வந்தடைகின்றன. இவை புவியை துளைத்து வெளியில் கடந்துவிடுகின்றனவாம்.

 எனினும் சிறிதளவு சில குலோரினுடன் வினைபுரிந்து புவியில் தங்கக்கூடும். இதனால் புவியின் நிறை சற்று அதிகரிக்கும். 

இதேபோல் புவியில் இருந்தும் ஆன்டி நியூட்ரினோ துகள்கள்  வெளியேறுகின்றன. இதனால் புவியின் நிறை சற்று குறையலாம்.

இதேபோன்று புவியில் உள்ள உயிரினங்களின் உடலில் ஏன் நமது உடலிலிருந்தும் கார்பனின் சிதைவு காரணமாகவும் நியூட்ரினோ துகள்கள் வெளியேறுகின்றன. இதனால் புவியின் நிறை சற்று குறையலாம்.

விமானம் பறப்பதால் புவியின் எடையில் மாற்றம் ஏற்படுமா?

புவியின் நிறை என்பது புவியின் வளிமண்டலத்தின் நிறையையும் சேர்த்ததுதான்.  எனவே புவியீர்ப்பு மண்டலத்தில் பறக்கும் எந்த ஒரு விமானத்தாலும் / பொருளாலும் புவியின் நிறையில் மாற்றம் இராது

புவி மண்டலத்தின் வெளியே செல்லும் செயற்கை கோள்களால் புவியின் நிறையில் மாற்றம் ஏற்படும் எனினும் பூமியின்மீது எரி கற்களும் விழுந்துகொண்டு இருக்கின்றன. எனவே புவியின் நிறையில் அதிக மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று கூற முடியாது. 

மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன


கட்டுரைகளை தெரிவு செய்யவும் 

.

கருத்துகள் இல்லை: