நோய்கள் தாக்கம் அதிகம் ஏன்?
உடல் பற்றிய கவலை
உடல் பற்றிய கவலை இல்லாத உயிரினங்களுக்கு / மனிதர்களுக்கு நோய் தொற்று மிகக் குறைவாக இருக்கும். (மன நிலை பாதிக்கப்பட்டு தெருவில் திரிவோர்க்கு டெங்கு உள்ளிட்ட எந்த வைரல் நோயும் வருவதில்லை
நோய் எதிர்ப்பு-அனிச்சை
இயற்கையில் நம் உடலை பாதுகாக்கும் முறைகள் நம் ஆழ் மனதிற்கு (அனிச்சையாக) உண்டு. அவற்றை தேவையின்றி மாற்றி அமைத்து நம் கையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்போது பிரச்சினைகள் முளைக்கின்றன
கவனிப்பு அதிகமின்றி மண்ணில் விளையாண்டு கண்டதை உண்டு குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அதிகமாக இருக்கும்
ஏதேனும் ஒரு வேளையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும்போது இரவு நன்கு உறக்கம் வரும் உறக்க வேளையில் நம் அனிச்சை செயல்பாடுகளால் உடலின் இயக்கங்கள் சரி செய்யப்பட்டுவிடும் (முழு ஈடுபாட்டுடன்அலுவலகங்களில் பணிபுரிவோர் மெடிக்கல் விடுமுறை எடுப்பது மிகக்குறைவு )
நோய்எதிர்ப்புசக்தி குறைந்ததேன்?
நன்கு கவனித்துப் பாருங்கள் சிலர் நல்ல திடமான உடல்வாகுடன் இருப்பார் அவரை 50 கி மீ சைக்கிளில் செல்லச்சொன்னால் 5 கி மீ சென்றவுடன் அசந்துவிடுவார். ஆனால் காய் விற்கும் ஒரு நபர் 40, 50 கி மீ பயணித்தாலும் சோர்வதில்லை.
இதற்குக்காரணம் பழக்கம்.
வயல்வெளியில் காலை முதல் முன்னிரவு வரை நடவு செய்த பெண்கள் வீட்டிற்கு சென்று சமைத்து சாப்பிடுவர். ஆனால் அவர்கள் நடுவதற்கு நாற்று கொடுத்த ஆண் அசந்து படுத்துவிடுவர்.
இதற்குக் காரணம் பழக்கம்.
ஆக உடல் வலிமையைவிட பழக்கம் அதிக சக்தி வாய்ந்தது.
பில்டர் வாட்டர் குடிக்கும் பழக்கம் வந்ததால், கிருமிகள் உடலில் குறைந்தன. இதனால் நமது உடலில் உள்ள நோய் எதிர்க்கும் சக்தி துயில் கொண்டுவிட்டது .இந்த சூழலில் கிருமிகள் உடலில் புகுந்தால், உடனடியாக அதை எதிர்க்கும் சக்தி உடலுக்கு கிடைப்பதில்லை. இதனால் தான் எளிதில் நோய் தாக்குகிறது.
பொத்தி பொத்தி சுடுநீரில் குளிப்பாட்டி சுகாதாரமாக வளர்க்கப்படும் குழந்தைகளை, நோய்கள் அதிகம் தாக்கும். சாதாரண நீரைக்குடித்து, குளித்து வந்தால் நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் சமயங்களில் மட்டும் பில்டர் வாட்டரை பயன்படுத்துவது நல்லது.
தூய்மையான நீர்
எனவே இதுபோன்ற நீரைப்பருக்கும்போது சிறிது சிறிதாக மெதுவாக பருகுவது நல்லது.
சமீப காலமாக காய்ச்சல் அதிகமாக வருவதை பார்க்கிறோம் இவை மருந்துகளுக்கு அதிகம் கட்டுப்படுவதில்லை
விஷக்காய்ச்சலுக்கு மிக மிகச்சிறந்த தீர்வு பப்பாளி கஷாயம் பாதி இலையை பறித்து சிறிதாக கிள்ளி 1/2 லிட்டர் நீர் விட்டுஅடுப்பில் வைத்து 150/200ml அளவு வரும் வரை நன்கு காய்ச்சி அந்த நீரை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு முடக்கு குடித்து வர ஒரே நாளில் குணம் பெறலாம். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
காயகல்ப மூலிகைகள்
நோயெதிர்ப்பு குறித்த சில முக்கிய குறிப்புகள்
- இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்பவர்களிடையே நோய் தாக்கம் அதிகம் இருப்பதில்லை.
- பகல் முழுதும் வேலை செய்து இரவு கண்யார்ந்து தூங்குபவர்களிடைய அதிக நோய் இருப்பதில்லை.
- உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களிடையே நோயின் தாக்கம் அதிகம் இருக்கும்
- சிறுவயதில் சுத்தம், சுகாதாரம், சார்ந்த கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாமல் வளர்பவர்களுக்கு நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகம் இருக்கும்
- எந்த நேரமும் வீட்டுக் கதவுகளையும் ஜன்னல் கதவுகளையும் மூடி இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய்கள் விருந்தாளியாக வந்து பங்காளியாக வாழும்
4 கருத்துகள்:
சில பிழைகள் திருத்திக் கொள்ளவும் உதாரணம் சில மருந்துகள் (கட்டுப்படுவதில்லை)
மிக்க நன்றி
Edward sir good article
அருமை வாழ்த்துக்கள் சார்
கருத்துரையிடுக