ஒன்றையும் , ஒன்றையும் கூட்டினால் எவ்வளவு ?
கணிதம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டே சரியான பதிலை தரும்
ஒன்றையும் , ஒன்றையும் கூட்டினால் இரண்டு. இது சிறு வயதில் நாம் பயின்றது. இன்று நம் குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறோம். குழந்தை ஒன்றையும் , ஒன்றையும் கூட்டினால் இரண்டு எப்படி வரும் ? என்று கேட்டல் நம்மில் எத்தனை பேருக்கு விளக்கி சொல்லத்தெரியும் ?
பிரச்சினை அதுவல்ல. ஒன்றையும் , ஒன்றையும் கூட்டினால் இரண்டு என்பது சரியா?
பின்வரும் கேள்விகளைக் கவனிக்கவும்
1 ஒரு பேனா ஒரு கையில் மற்றொரு பேனா மற்றொரு கையில் இப்பொழுது மொத்தம் எத்தனை பேனா? என்று கேட்டால் இரண்டு என்போம் சரியாக
2.ஒரு பேனா ஒரு கையில் மற்றொரு கையில் ஒரு பென்சில் இப்பொழுது மொத்தம் எத்தனை பேனா? என்று கேட்டால் விடை ஒன்று
3.மொத்தம் எத்தனை பொருள் என்று கேட்டால் விடை இரண்டு
4. ஒரு பேனா ஒரு கையில் மற்றொரு கையில் ஒரு சொட்டு மை இப்பொழுது மொத்தம் எத்தனை பேனா? என்று கேட்டால் விடை ஒன்று
மொத்தம் எத்தனை என்று மொட்டையாகக் கேட்டால்? எத்தனைபேர் பொறுமையாக பதில் சொல்லுவோம் கேட்பவருக்கு எப்படி சொல்லிப் புரிய வைப்போம் ?
அருதியிட்டுக் கூற முடிந்த ஒன்றை கணிதம் என்கிறோம் ஆனால் இங்கேயும் பிழை இருக்கிறது
ஒரு பொருளோடு அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு பொருளைச் சேர்த்தால், விடை மன்னிக்கவும் கணக்கு சரியாக வரும்
ஒரு யூனிட் மணல் அத்துடன் ஒரு யூனிட் சிமெண்ட் சேர்க்க 1+1=<2
ஆனால் இங்கே 1+1=2 என்று வரவேண்டுமானால்
ஒரு டன் மணல் +ஒரு டன் சிமெண்ட் =2 டன் கிடைக்கும்
ஆக சில கருதுக்கோலுக்கு உட்பட்டே விடையும் இருக்கும்
உட்காரணத்திரக்கு சில
ஒரு பொருளுடன் அதே விதமான பொருளை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிட்டால் மட்டுமே 1+1=2 என்ற பதில் வரும் ஒரு கல் + ஒரு கல் =2 கல்
அளக்கும் அலகு சமமானதாக இருக்க வேண்டும்
ஒரு லிட்டர் நீர் +ஒரு லிட்டர் நீர் = 2 லிட்டர் நீர்
ஒரு லிட்டர் நீர் +ஒரு அவுன்ஸ் நீர் = 2 ___ ?
கணக்கிடும் அலகும் விடைதேடும் அலகும் ஒத்து இருக்கவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக