சுனாமி - ஏன்? எப்படி ?

Tsunami 

   ஆழிப்பேரலை குறித்து அறிவியல் வல்லுனர்களின் கருத்துக்கள் சரியா? 

   ஆழிப்பேரலை உருவாகுமுன் தோன்றும் இடத்திற்ககு அருகே உள்ள கடற்கரையில் கடல் உள்வாங்குவது ஏன்

ஆழிப்பேரலை  ஏன் எப்படி ?
ஆழிப்பேரலை/சுனாமி  
   ஆழிப்பேரலை பொதுவாக தோன்றிய இடத்திலிருந்து  மேற்கு பகுதி கடற்கரையை அதிகமாக தாக்கக் காரணம் என்ன ?

   சுனாமியின்போது ஒருபகுதியில் நிலம் உயர்வதால் அப்பகுதியில் உள்ள நீர் தாழ்வான பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது.  2004-ல் இந்தியாவை தாக்கிய சுனாமியலையின் வேகம் சுமார் 220 கி மீ எனக் கூறப்பட்டது  பூமியில் மேலிருந்து கீழே ஒரு பொருள் விழும்போது சுமார் 195 கி மீ வேகத்தில் விழும் என்று கூறப்படுகிறது அப்படியிருக்க நீர் மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு செல்வதாக இருந்தால் 195 கி மீ -க்கு  குறைவான வேகத்திலேயே தானே அலை பயணித்திருக்க வேண்டும்?

   புவியின் இரண்டு தட்டுகள் மோதுவதால்/ நகர்வதால்  நிலஅதிர்வு எனில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் இத்தனை மீட்டர் ஆழத்தில் உருவானதாக எப்படி கூறப்படுகிறது?



  இந்த கேள்விகளுக்கு இந்திய அறிவியல் கழக முதுநிலை விஞ்ஞானி திரு  த வி வெங்கடேஸ்வரன் அவர்களின் பதில்

ஆழிப்பேரலை -உண்மை என்ன? Vinganam.blogspot.com Dr.T.V.Venkateswaran
Dr.T V Venkateswaran,
ஆழிப்பேரலை உருவாகுமுன் கடல் உள்வாங்குவது ஏன்?

கடல் ஓதம் போல தான். நிலவு கடலை பிடித்து இழுக்கும். எனவே கடலின் எந்த பகுதி மேலே நிலவு உள்ளதோ அங்கே கடல் மட்டம் உயரும். சுற்றியுள்ள பகுதிகளில் கடல் மட்டம் குறையும். கடல் நீர் அந்த புள்ளி நோக்கி கசிந்து ஓடும். பூமி சுற்றும்போது நிலவு பல்வேறு பகுதியின் மேலே வரும். எனவே குறிப்பிட்ட கடற்கரையில் கடல் மட்டம் அன்று எந்த நேரத்துக்கு தலைக்கு மேலே வருகிறதோ அப்போது உயரும். எப்போது தொனூறு டிகிரி சாய்வாக உள்ளதோ அப்போது குறையும், இதை தான் டைடு அல்லது கடல் ஓடம், ஏற்ற இறக்கம் என கூறுகிறோம்/

அதே போல சுனாமி அதிர்வு கடற்கர்ரை பகுதியின் கிழே கடலின் அடியில் மோதும்போது படுகையாக செல்லும் ஆற்றல் அதிர்வு மெ நோக்கி எழும் எனவே கடல் அலை உயரும். பக்கத்தில் உள்ள நீரை எடுத்தால் தான் கடல் அலை உயர முடியும்.

சாதாரண நாட்களில் கூட கடல் அலை அடிப்பதற்கு முன்னர் நீர் உள்ளே செல்லும்.

ஆழிப்பேரலை பொதுவாக தோன்றிய இடத்திலிருந்து
மேற்கு பகுதி கடற்கரையை அதிகமாக தாக்கக் காரணம் என்ன?


எல்லா சமயத்திலும் மேற்கு பகுதியை தாக்காது. 2004 இல் ஏற்பட்ட சுனாமி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உருவானது. அதன் மேற்கு திசை நோக்கிய அலைகள் அதிர்வுகள் இந்தியா நோக்கி வந்தது.  இந்தியாவின் கிழக்கு கடற்கரை பாதிப்பு கூடுதல். மேற்கு - அரபிக்கடல் பகுதியில் கேரளாவில் மட்டும் தான் அதிக தாக்கம் இருந்தது.

சுனாமியின்போது ஒருபகுதியில் நிலம் உயர்வதால் அப்பகுதியில் உள்ள நீர் தாழ்வான பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது 2004-ல் இந்தியாவை தாக்கிய சுனாமியலையின் வேகம் 220 கி மீ எனக் கூறப்பட்டது பூமியில் மேலிருந்து கீழே ஒரு பொருள் விழும்போது சுமார் 195 கி மீ வேகத்தில் விழும் என்று கூறப்படுகிறது அப்படியிருக்க தாழ்வான பகுதிக்கு செல்வதாக இருந்தால் 195 கி மீ -க்கு குறைவான வேகத்திலேயே தானே அலை பயணித்திருக்க வேண்டும்?


கடல் நீருக்கு கீழே படுக்கை விரிப்பை உதறுவது போல மேலும் கிழும் நிலப்பபரப்பு ஆடும்போது சுனாமி ஏறப்டுகிறது. இந்த நில அதிர்வில் ஏற்படும் ஆற்றலின் அளவே அலையின் உயரம் போன்றவற்றை தீர்மானம் செய்யும். அதிர்வினால் அலை பரவும் போது நீர் மேலும் கிழும் மட்டுமே நகரும். ஆற்றல் தான் எல்லா திசைகளிலும் செல்லும். ஆழ்கடலில் நீரின் உயரம் சில செமீ மட்டுமே உயரும். எனவே தான் கடலுக்கு அடியில் இருந்த மலைகளின் சிகரங்கலான மாலத்தீவுகளில் வெறும் சில செமீ நீர் உயர்ந்தது. பனைமரம் அளவு அலை அடிக்கவில்லை.

தமிழக கடற்கரைக்கு அருவே வரும்போது கடலின் ஆழம் குறைந்து போகும். எனவே கடலின் அடியில் நிலத்தின் மீது மோதும் ஆற்றல் அலைகளால் தான் கடல் அலை உயரம் கூடும். எனவே தான் சுனாமி வரும்போது ஆகடலில் கப்பலை நிறுத்துவார்கள்.

புவியின் இரண்டு தட்டுகள் மோதுவதால்/ நகர்வதால் நிலஅதிர்வு எனில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் இத்தனை மீட்டர் ஆழத்தில் உருவானதாக எப்படி கூறப்படுகிறது?

நிலநடுக்க கருவிகள் கொண்டு எங்கே இருந்து இந்த அதிர்வுகள் புறப்பட்டன என அறிய முடியும். செல்பேசி எங்கே உள்ளது என்பதை டவர் வைத்து அறிவது போல – triangulation என்பார்கள்.  மூன்று நிலநடுக்க கருவிகள் வைத்து எந்த புள்ளியிலிருந்து எந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அறியலாம். சுனாமியிலும் அதுவே. 


மாற்றுக் கருத்து 

பூமியின் உட்கருவில் தொடர்ந்து இயங்கியும், ஓய்ந்தும் வருவது ஓர் அணுப்பிளவு [Fast Reactor] &  அல்லது அணுப்பிணைவு [Fusion] உலை.  அந்த அணு உலைப் பூத வெப்பம் சேர்ந்து பூமியின் நலிந்த பகுதியின் ஊடே புகுந்து எழுவதே எரிமலைகள் / பூகம்பங்கள். 

கடலடியில் எங்கோ திடீரென எழும் அசுர வெப்பம் கடல் வெள்ளத்தைப் பந்தல்போல் மேலே தூக்கும் போது, கடற்கரையில் உள்வாங்கிய  நீரால் பள்ளம் தெரிகிறது. 

அடுத்து புவியீர்ப்பு நீர் வெள்ளத்தை  மையம் நோக்கி இழுக்கிறது.  பூமியின் அடித்தட்டுகள் டியூனிங் ஃபோர்க்குபோல் [ இரும்புக் கவட்டை] அசைந்து
கடல் வெள்ளம் தணிந்து, எழுந்து, கரைநோக்கி சுனாமி அலைகளாய்ப் படை எடுக்கும்.

பூதப் பூகம்பம் / எரிமலை நேர்வுகள் பூமியின் சுழல் அச்சை நகர்த்தும்.  ஈர்ப்பு மையத்தை மாற்றும்.  அதனால் கடல்வெள்ளம் பூமியில்
சில இடங்களில் ஏறும் அல்லது இறங்கும்.  ஹவாயித் தீவுகள் முழுக்க முழுக்க எரிமலைக் குழம்பால் உருவானவை.  எரிமலை, பூகம்பம்
புவி அமைப்புச் சிற்பவியல் வினைப்பாடுகள்.  

துருவப் பனிக்குன்றுகள் உருகுவதும், பனியாக இறுகுவதும் பருவச் சுழற்சி நேர்வுகள்.


கருத்துகள் இல்லை: