உயிரைப் படைத்த ஆண்டவனுக்கு குருதி உணவாகுமா?. அவனுக்கு பசி ஏது? இச்சை ஏது? இருப்பிடம் ஏது?
பலி, வழிபாடு என்கிற நோக்கில் உறவுகளை, நண்பர்களை, அழைத்து ஒன்றாக உண்டு மகிழ்கிறோம். ஏழைகளுக்கு உணவு கொடுக்கிறோம். அந்த வகையில் ஒரு ஒற்றுமை, ஈகை நிகழ்கிறது.
உயிர்களை கொல்லாமல் இருக்க முடியாது. எனினும், உயிர்களை தேவையின்றி கொல்லுதல் கூடாது. உதாரணமாக பல ஆயிரம் பட்டுப் புழுக்களைக் கொன்று அதனால் உருவாகக்கப்படும் பட்டு சேலை, வேட்டியை தவிர்க்கலாம். ஏனெனில்,பருத்தி, செயற்கை இலை துணிகளை உடுத்தி வாழ முடியும்.
இருந்தாலும் சில, பல கொலைகளை நிதமும், செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
கொசுவை அடிக்காமல் இருக்கமுடியுமா?
விவசாயி எலிகளை, பூச்சிகளை கொல்லவில்லையெனில் உணவு கிடைக்குமா?
தீவில் வசிக்கும் ஒருவர் மீனை கொல்லாவிடில் போதிய உணவு கிடைக்குமா?
பாச்சையை, எரும்பை, மூட்டைப்பூச்சியை, கொன்றுக்கொண்டுதானே இருக்கிறோம்
நம் உடலில், (குடலில் ) உள்ள பூச்சிகளை, நுண்கிருமிகளை அழிக்காமல் வாழ முடியுமா?
கிருமி நாசினிகளை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?
மாடு கன்றுக்காக சுரக்கும் பாலை ஆட்டைபோட்டுவிட்டு கன்றை மெலியச்செய்வதும் குற்றம் தானே.
ஆக பாவம், புண்ணியம் என்பதெல்லாம் இடத்திற்கு இடம், மக்களுக்கு மக்கள் வேறுபடும். இது அவரவர் சிந்தையைப் பொறுத்தது