சனி, 11 நவம்பர், 2017

முகப்பு


தமிழ் ஊறும் சிந்தை கொண்டோர் அனைவருக்கும் வணக்கம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள்: 423 

அறிவியல் தமிழ் உலகிற்கு அறிவியல் (Science) சார்ந்த செய்திகளையும் கருத்துக்களையும் விஞ்ஞான கட்டுரைகளையும் வழங்கும் நோக்கோடு இந்த வலைப்பூவை இயக்குகிறேன்.

உலகிற்கு அறிவியலால் நன்மைகள் பல கிடைத்துள்ளன. உலக வளர்ச்சியில் அறிவியல் பல சாதனைகளை புரிந்துள்ளது. அறிவியல்/விஞ்ஞானம்  என்பது ஆய்ந்து தெளிந்து நிருபிக்கப்பட்டது என்று பலர் கூறக்கேட்டிருக்கிறேன்.

அனால், "அடுத்த ஒரு மாற்றுக்கருத்தை ஒருவர்தெளிவாக பலரும் ஏற்கும் வாகையில் கூறும் வரையில்,  இதுவரை கூறப்படுவது உண்மை என்று நம்புவது அறிவியல் உலகம்" என்பது எனது தனிப்பட்ட கருத்து.
 உலகில் இதுதான் உண்மை என்று உறுதியாகக் கூறமுடிவதில்லை. உலகம் உண்மை என்று நம்பும் பல விஷயங்கள் பொய் என்று பின்நாட்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறன;  நாளை பொய் என நிருபிக்கப்படலாம்.

எந்த ஒரு தகவலையும் எந்த ஒரு அறிவியல் வல்லுநர் தெரிவித்திருந்தாலும் அதை ஆய்ந்து பார்த்தபின் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல அறிவியல் வல்லுனர்களை(Scientist) நேர்காணல்செய்தபோது விடை கிடைக்காத சந்தேகங்களை இங்கே கொடுத்துள்ளேன். அறிவுடை சான்றோர்(விஞ்ஞானிகள்)  தகுந்த விளக்கமளிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் கூறுவதுதான் உண்மை/சரி என்று கூற விரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது பொய் என்றால் நிரூபிக்க வேண்டியதும் நியாயம் தானே.

புதிய அறிவியல்/விஞ்ஞான கண்டுபிடிப்புகளை தமிழில் தெரிந்துகொள்ள/ பகிர்ந்துகொள்ள, பழைய அறிவியல்/ விஞ்ஞான (science theories ) கோட்பாடுகளை புரிந்துகொள்ள/ஆய்வு செய்ய/மாற்றி யோசிக்க, ஒருங்கிணைவோம். கூகிள் குரூப் மின் அஞ்சல் முகவரி vinganam@googlegroups.com




கட்டுரைகளை தெரிவு செய்யவும் 

3 கருத்துகள்:

  1. Edward Packiaraj. உண்மை என்ற ஒரு பொருள் ஒரே பொருள் Black matter+akash
    மற்றவை கூடிப்பிரிந்து இயங்கி மறைபவை என ஆன்மீகத்தில் சொல்வாகள்.

    Dark matter சுத்தவெளி,பாழ், தெய்வம், ஆற்றல் என பலவாறாய் அழைப்பர்.
    விண் என்ற ஆகாஷ் சுழல ஆரம்பித்ததும் காலம் தூரம் பருமன் வேகம் என்ற நால்வகை கனிப்புக்குள் வந்திடும்.
    இந்த நான்கு கணிப்பு விகித மாறுபாடுகளே இன்று உண்மையாயும் நாளை அது மாறி பொய்யாகி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. Dr. Sherly Winfred, Asst Prof In English, Holy Cross College (Autonomous), Trichy
    Blog Text: https://www.blogger.com/u/1/blog/posts/147031727921813985
    Blog Page (ppt, quiz form, video): https://www.blogger.com/u/1/blog/pages/147031727921813985

    பதிலளிநீக்கு
  3. https://thephysicsdoctor.blogspot.com/
    Dr. Maria Bernadette Leena, assist Professor of Physics, Holy CRoss College (Autonomous), Tiruchirappalli
    2022FIP1217

    பதிலளிநீக்கு